பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ஜம்மு மற்றும் காஸ்மீர் பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம்திகதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம்ஓட்டு பதிவாகி இருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் திகதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த பகுதிகளில் இடம்பெறும் தேர்தல்களை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்களை இந்தியா அழைத்துள்ளது. இவ்வாறு வெளி நாட்டு தூதுவர்கள் அழைக் கப்படுவது இதுவே முதல் முறை என த இந்துஸ்த்தான் ரைம்ஸ் நாளேடு கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தென்னாபிரிக்கா, சோமாலியா, தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் றுவாண்டா உட்பட 15 நாடுகளின் தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை(1) இடம் பெறும் வாக்குப்பதிவை பார்வையிடவுள்ளனர். மூன்று கட்டங்களாக இடம்பெறும் இந்த வாக்குப்பதிவில் 90 சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 9 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். தேர்தல் ஜனநாயகமாகவும், தரமானதாகவும் நடப்பதாக தான் கருதுவதாக அமெரிக்க அதிகாரி அன்றுஸ் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியிருந்தது. ஆனால் அந்த அரசு 2018 ஆம் ஆண்டு பெரும்பான்மையை இழந்திருந்தது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு கஸ்மீருக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரத்தை சரத்து 370ஜ அகற்றியதன் மூலம் இந்திய மத்திய அரசு நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.