கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து தாழ்வுநிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல குளங்களில் நீர்நிரம்பி வருகிறது. இதன்காரணமாக இரணைமடு குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

WhatsApp Image 2022 04 13 at 8.48.42 PM 1 கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு - மக்களுக்கு எச்சரிக்கை

இதையடுத்து 36 அடி கொள்ளவு கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலமாக அதிகரித்துள்ளதால் தாழ்வுநிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.

இதேவேளை, கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.