இலங்கை பாகிஸ்தான் கடன்கள் அதிகரிக்கின்ற நிலையில் – சீனா காப்பாற்ற தயங்குகின்றது

இலங்கை பாகிஸ்தானை சீனா காப்பாற்ற தயங்குகின்றது

சீனா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தன்மீது தங்கியிருப்பதை உறுதி செய்வதற்காக கடன்பொறியை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா கடந்த சில வருடங்களாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளது.

எனினும் இலங்கை- பாக்கிஸ்தான் ஆகிய சீனாவின் இரண்டு நட்பு நாடுகளும் மிகமோசமான நிதிநிலைமையை எதிர்கொள்வது சீன அதிபரின்   அரசாங்கம் காசோலையை பயன்படுத்துவதற்கு தயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தான் கடந்த மார்ச் மாதம் செலுத்திய 4 பில்லியன்டொலர்களிற்காக மீண்டும் கடனை வழங்குவோம் என்ற உறுதிமொழியை சீனா இன்னமும் நிறைவேற்றவில்லை,இலங்கையின் 2.5 டொலர் உதவி குறித்தும் சீனா இன்னமும் உறுதியான பதிலை வழங்கவில்லை.

கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளிற்கு அதிக கடன்களை வழங்குகின்றோம் என சீன வங்கிகள் கருதுவதால் வெளிநாட்டு கடன்களை வழங்குவது குறித்து சீனா கடந்த இரண்டு வருடங்களாக மீளசிந்தித்து வருகின்றது என  தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இறுக்கமானதாக மாறிவரும் பொருளாதார நிலைமையின் மத்தியில் இந்த நிலை காணப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.

2020 முதல் காணப்படும் மோசமான கோவிட் தொற்றுக் காரணமாக முன்னெடுக்கப்படும் முடக்கல் நிலையால் நாட்டின் முக்கிய நிதிமையங்கள் மூடப்படுவதால் சீனா தற்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-Times of India Tamil News