கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

139 Views

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த பெரியோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 720 பேருக்கு நேற்று (16) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதற்கமைய நாட்டில் இதுவரை 552,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது வரையில் கொரோனா தொற்றுக்காரணமாக 14,034 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Leave a Reply