“இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை”-தலிபான்

இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை

இந்தியா உட்பட எந்த நாட்டுடனும் ஆப்கானிஸ்தான் மோதலை விரும்பவில்லை என ஆப்கானிஸ்தானில் தலிபான் இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஓகஸ்ட் மாதம் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி தனது பிரதிநிதிக்குழுவுடன் மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி உள்ளிட்ட பல்வேறு அரசு பிரமுகர்களை சந்தித்த அவர், பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடனும் சந்திப்புகளை நடத்தினார்.

இந்தப்பயணத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு முதன் முதலில்   நேர்காணல் ஒன்றை வழங்கிய அவர்,

“உலகின் எந்த நாட்டுடனும் மோதல் இருக்கக்கூடாது என்பதே ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசின் கொள்கை. இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தான் வேறு எந்த நாட்டுடனும் மோதல்களையோ அல்லது நாட்டை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்வதையோ விரும்பவில்லை. எனவே நாங்கள் தொடர்ந்து இந்த வழியில் செயல்படுவோம்.

நாங்கள் மாஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​​​இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். அங்கு பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக இருந்தன. நாங்கள் எந்த நாட்டையும் எதிர்க்க கூடாது என்று நினைக்கிறோம்,”என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad "இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை"-தலிபான்