Home Blog Page 4

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அத்துமீறிய ஊடுருவல் அதிகரிக்குமென எச்சரிக்கை

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையான தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மாத்திரமாகும்.

இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டுடன் இந்திய எல்லை முடிவடைகிறது.

இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல்காரர்களும் தடையின்றி ஊடுருவும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

முன்னதாக, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன.

எனினும், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் இந்த கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையும் உடைந்து கிடப்பதுடன், ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது

இதன் காரணமாக கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கம் இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் : ஜனாதிபதி உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதைய சமூகத்துக்குப் பொருத்தமான வகையில் இந்த புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சக்களை பழிவாங்க அரசாங்கம் சுரேஷ் சலேவை பயன்படுத்துவதாக பொதுஜன பெரமுன சாடல்

தற்போதைய அரசாங்கம் சுரேஷ் சலேயை குறிவைத்து, இறுதியாக ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சாகர காரியவசம் முற்றாக மறுத்துள்ளார்.

“2019 ஏப்ரல் மாதத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலிலேயே பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்திருந்தன. அப்போதே எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியைப் பெறுவதற்கான அரசியல் பின்னணி எங்களுக்குச் சாதகமாக ஏற்கனவே உருவாகியிருந்தது. எனவே, ஆட்சிக்கு வர இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் யாருக்காவது இந்தச் சம்பவம் குறித்து சந்தேகம் இருந்தால், அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

“சுரேஷ் சலேக்கு ஏன் இந்தளவுக்குச் சித்திரவதைகள் செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு விடையளித்த அவர், தற்போதைய அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திற்கு ராஜபக்சக்கள் மீதான அச்சத்தின் காரணமாகவே இத்தகைய விடயம் மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் எப்போதும் சட்டத்தை மதிப்பதாகக் கூறிய சாகர காரியவசம், அரசாங்கத்திடம் ஏதேனும் உண்மையான சாட்சியங்கள் இருந்தால் அவற்றை அநாகரீகமான முறையில் மறைக்காமல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.

முறையான சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது ஒருவரைக் கைது செய்து, அடித்து, அநாகரீகமான முறையில் சித்திரவதை செய்து செயற்கையாகச் சாட்சியங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

அதனால் வேலை வாய்ப்பு கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வியாழக்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். தீர்வுகள் கிடைக்க பெறாமல் விடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புகள்: தீர்வு காண விசேட குழு அமைப்பு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அனுமதியற்ற கரையோர கட்டுமானங்கள், கடலரிப்பு பிரச்சினைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மனிதப் புதைகுழி : விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினால் இன்றைய தினம் (23)  மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

 

அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு!

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் திகதி கையெழுத்​தானது. அடுத்த 60 நாட்களுக்​குள் இறுதி ஒப்​பந்த்தை எட்ட பேச்​சு​வார்த்​தை​யில் ஈடுபடு​வது என முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி, ஸ்விட்​சர்​லாந்​தின் பர்​கென்​ஸ்​டாக் நகரில் இரு தரப்பினர் இடையே முதல் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில், அமெரிக்கா சார்​பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையி​லான குழு​வும் ஈரான் சார்​பில் வெளி​யுறவு அமைச்​சர் சையத் அப்​பாஸ் அராக்​சி, சபா​நாயகர் முகம்​மது பாக்​கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்​கிய குழு​வும் பங்​கேற்​றன.

பேச்​சு​வார்த்​தைக்கு சற்​று​முன், லெப​னானில் ஹிஸ்​புல்லா அமைப்பை ஈரான் கட்​டுப்​படுத்​தத் தவறி​னால், ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கை எடுக்​கப்​படும் என ட்ரம்ப் எச்​சரித்​தார். இதை சுட்​டிக்​காட்டி ஈரான் குழு வெளிநடப்பு செய்​தது. இருப்பினும் பின்​னர் நிலைமை சரிசெய்​யப்​பட்டு பேச்​சு​வார்த்தை தொடர்ந்​தது. இந்த முதல்​சுற்று பேச்​சு​வார்த்​தை​யில் சில முக்​கிய முடிவு​கள் எட்​டப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து மத்​தி​யஸ்த நாடு​களான பாகிஸ்​தானும் கத்​தா​ரும் இணைந்து வெளியிட்ட கூட்​டறிக்கையில், ‘‘அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரி​வான 14 அம்ச இறுதி ஒப்​பந்​தத்தை எட்டுவதற்​கான செயல் திட்​டத்தை இரு தரப்​பும் ஏற்​றுக் கொண்டுள்ளன. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வணி​கக் கப்பல்கள் பாது​காப்​பாக செல்​வதை உறு​திப்​படுத்த, தகவல் தொடர்பு வழி​முறை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் இன்று (23) காலை ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டும், நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படவேண்டும், விவசாய இரசாயனங்கள் நியாயமான விலையில் கிடைக்கவேண்டும், அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தவேண்டும் முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

 

ஞானசார தேரருக்கு 9 மாதகால சிறைத்தண்டனை உறுதி

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் புஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (23) உறுதி செய்துள்ளது.

 இந்த சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைக்கு பின்னர், இந்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த 9 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் இல்லை – அருண ஜயசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் இன்று (23) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து இன்னும் 3 மாத காலத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.