அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் திகதி கையெழுத்தானது. அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்த்தை எட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஸ்விட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் இரு தரப்பினர் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, சபாநாயகர் முகம்மது பாக்கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்கிய குழுவும் பங்கேற்றன.
பேச்சுவார்த்தைக்கு சற்றுமுன், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்தத் தவறினால், ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார். இதை சுட்டிக்காட்டி ஈரான் குழு வெளிநடப்பு செய்தது. இருப்பினும் பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த முதல்சுற்று பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தானும் கத்தாரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரிவான 14 அம்ச இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான செயல் திட்டத்தை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிப்படுத்த, தகவல் தொடர்பு வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.



