தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன முகிலன்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்
சிபிசிஐடி வசம் வழக்கு
ஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.
ஏதோ செய்துவிட்டார்கள்
ஆனாலும் முகிலன் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் முகிலனால் எதிர்க்கப்பட்டவர்கள் யாரோ அவரை ஏதோ செய்து விட்டார்கள் என்றும் முகிலன் குடும்பப் பிரச்சனைக்காரணம் தலைமறைவாக உள்ளார் என்றும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.
முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை அவர் எங்கேயிருக்கார் என்ற தகவலோ அல்லது அவர் என்ன ஆனார் என்ற தகவலோ கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் Where is Mugilan? என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டானது.
கண்டன ஆர்ப்பாட்டம் இதைத்தொடர்ந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பலர் பங்கேற்பு
இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தென்னரசு, ஜி ராமகிருஷ்ணன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசின் பங்காளியாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
தமிழரசுக்கட்சியின் முக்கிய மாநாடொன்றிற்காக அனைவரும் வருகை தந்திருந்த நிலையில் இப்போராட்டம் நடந்திருந்தது.
போராட்டத்தில் ஈடுபடடவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
“காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயக்குகின்றீர்கள்?”,”உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்”,”ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று (01) மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவத்தின் பிரதிப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொசான் செனிவரத்தினா தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் மெலும் தெரிவித்துள்ளார்.
புது டில்லியில் வைத்து சிறிலங்காவின் தமிழ் அமைச்சரான மனோ கணேசனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
மோடியின் தேர்தல் சுலோகமாக அமைந்தது ”நான் இந்தியாவின் காவல்காரன்” என்பதேயாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மனோ கணேசன் மோடியிடம் ”நீங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு தென்னாசியாவிற்கும் காவல்காரனாக இருக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று இரவு (31) மனோ கணேசனை சந்தித்து கைலாகு கொடுத்து பேசும் போது மோடி, இதை ஞாபகப்படுத்திப் பேசியிருந்தார். சிறிலங்கா உட்பட தென்னாசிய அரசியல் தீவிரவாத சூழலில் இது முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் தான் நம்புவதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியப் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, மோடியை சந்தித்து கலந்துரையாடி விட்டு சிறிலங்கா ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார்.
சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான U L 196 விமானத்தில் நாடு திரும்பியிருந்தார்.
தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் 31.05 வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரி இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பிரதி காவல்துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இப்போது தேர்தல் முடிவடைந்ததால், இவர் மீண்டும் சிறைத்துறைக்கு செல்லாது மண்டபம் அகதி முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச நிர்வாகத்தில் பணிபுரியும் பெண்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஓர் முடிவை எட்டியுள்ளது. இதற்கமைவாக அரச நிர்வாக பெண் பணியாளர்கள் அனைவரும் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்தே பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.
கடமை நேரத்தில் அலுவலக வளாகத்தினுள் பெண்கள் சேலையுடனேயே சமுகமளிக்க வேண்டும். இதேவேளை ஆண் பணியாளர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.
இவ்வாறு பொது நிர்வாக அமைச்சு ஓர் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது?எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது? என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும், எதிர்க்கடசியும் செயற்படுகின்றது. இது மிகவும் கேவலமான செயற்பாடு இதனால் நாட்டில் தேசிய பாதுகாப்பு மேலும் கேள்விக் குறியாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படடன.இந்த சம்பவத்தினை முழுமையாக ஆராயாது அரசும் எதிர்க்கட்சியில் உள்ள மகிந்த தரப்பும் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அண்மைய நாட்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த குற்றச் சாட்டு சுமத்தப்படுகின்றதா?அல்லது உண்மையிலேயே அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க வேண்டும்.
நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் றிசாத் பதியுதீன மீது குற்றம் சாட்டுவதற்கு ஓர் முக்கிய காரணிகளும் இருக்கலாம். இந்த அரசினை இலகுவாக வீழ்த்த வேண்டுமானால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் அவருக்கு சார்பான பாராளுமனற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவினை பின் வாங்குவார்கள் இதனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாது போகும் அப்படியானால் அரசு கவிழும் இதற்காகவே எதிர்க்கடசியினர் பாடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அரசும் மகிந்த தரப்பும் அரசியல் நோக்கத்துடனேயே செயற்படுகின்றனரே தவிர உண்மயான குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நோக்கமில்லை. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இந்த சம்பவத்தினை வைத்து அரசியல் இலாபம் தேடாது நாட்டு மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயற்பட வேண்டும். நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் காரணமாக ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிகள் காவு கொள்ளப்பட்டுள்ளன.எனவே இதனை உணர்ந்து அனைத்து தரப்பும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை திறந்த வெளி மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடவியலாளர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான சுடரேற்றி உரையாற்றிய சட்டத்தரணி கே.சுகாஸ்,
ஊடகவியலாளரும் தேசியத் தலைவரால் நாட்டுப்பற்றாளர் என கெளரவிக்கப்பட்ட ஐயாத்துரை நடேசன் பேனா முனையில் ஊடகப் பணியாற்றியபோது சிங்களபேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டார். இன்று படுகொலை செய்யப்பட்டு 15 ஆம் ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை.
இது இவர் விடயத்தில் மட்டுமல்ல. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை விடயங்களிலும் நீதியான விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படாது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவிலான ஊடவியலாளர்களம் கலந்து கொண்டு, ஊடக பணியின் நிமித்தம் உயிர் நீத்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஈகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இந்திய வௌவிவகார சேவையின் முன்னாள் மூத்த அதிகாரியான, சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், இந்திய மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவர் இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
64 வயதுடைய சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தின் அவைகளில் உறுப்பினராக இருக்காத போதும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.
இவர் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
இவர் தமிழ்நாடு, திருச்சியைச் சேர்ந்த மூத்த சிவில் சேவை அதிகாரியும், அனைத்துலக விவகாரங்களில் வல்லுநராக இருந்தவரும், ஊடகவியலாளருமான கே.சுப்பிரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு இலங்கைக்கு அமைதிப்படையை கொண்டு வருவதில் இவரின் பங்கு முக்கியத்துவமாக அமைந்திருந்தது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளராகவும், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.
2015ஆம் ஆண்டு தொடக்கம், இந்திய வெளிவிவகார செயலராக இருந்த போது, அமெரிக்கா, சீனா தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
2018ஆம் ஆண்டு அவர் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் பங்குபற்றியிருந்தார்.