Home Blog Page 3124

நோர்வே தூதுவரின் தென்மாகாண விஜயம்

சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜேன் கொஸ்ரட்செதர்  சிறிலங்காவின் தென் மாகணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் மற்றும் தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

தனது விஜயத்தின் போது பிரதேச பௌத்த, கத்தோலிக்க இஸ்லாமிய மதத் தலைவர்களையும், பெண் தலைமைத்துவ குடும்பத் தலைவிகளையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.  மேலும் துறைமுக நிறைவேற்று அதிகாரியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐ.நா.பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப், மற்றும் சிறிலங்காவிற்கான பணிப்பாளர் டிம் சட்டன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று (31) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கéர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்டுத்து செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கு ஆளுநர் எதிர்ப்பு

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றும் த.சத்தியமூர்த்தியின் பதவிகள் தொடர்பாக வடக்கு ஆளுநர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பதற்கு அநேக அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மத்திய அரசு, மாகாண நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என விமர்சித்திருந்தனர்.

வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினார். தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஆளுநருடன் பேச்சு நடத்தியிருந்தார்.

சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியை மட்டும் கவனிக்குமாறு ஆளுநர் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை தேவனேசன் கவனிப்பார் என்றும் ஆளுநரால் சத்தியமூர்த்திக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் எழுத்துமூலமாக இந்த அறிவித்தலை தந்தால் மட்டுமே தான் ஏற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் தான் தெரிவித்ததாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ”தேசத்தின் வேர்கள்” அமைப்பினர்

2019 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள், ”தேசத்தின் வேர்கள்” என்ற அமைப்பின் நிறுவுனர் கணேசன் பிரபாகரன் தலைமையில் இன்று (31)  மேற்கொள்ளப்பட்டது.

சிரமதானப் பணிகளை முடித்த பின்னர் கருத்துத் தெரிவித்த கணேசன் பிரபாகரன் தெரிவிக்கையில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படும் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

எனது மகனின் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நீதியை எதிர்பார்க்கிறேன் – ரஜிகரின் தந்தை

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை

தெரிவித்துள்ளார்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார் அவர் மிகவும் அமைதியானவர்.அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவர விரும்பினார்.ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.நான் பிரதே அறையின் உடலை திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.

இலங்கையில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் இலங்கையை சேர்ந்த நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன். நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா சனாதிபதி தேர்தல் டிசம்பர் 7 இல் – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்களுள்ளன. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், ஆளுங்கட்சியாக இருக்கலாம் எதிர்க்கட்சியாக இருக்கலாம் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை. அதனால் எனக்கும் அவசரமில்லை. ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை நானும் எனது தீர்மானம் குறித்து காத்திருப்பேன்.

தனியார் ஊடகங்களை புறக்கணிக்கும் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுிற்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கு வடக்கு ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிசேனவின் முல்லை. விஜயம் தொடர்பாகவும், 03 ஆம் திகதி அன்று தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம்” தொடர்பாகவும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் உட்பட முப்படையினர், கொவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா பேசும் போது, முல்லைத்தீவிற்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி, வெறுமனே இந்தத் திட்டங்களை மட்டுமன்றி, நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன் போது வடமாகாண ஆளுநர் குறுக்கிட்டு, மன்னிக்க வேண்டும் நடைபெறவள்ள நிகழ்விற்கு உங்களின் பங்களிப்பு என்ன என்பது மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்த விடயங்கள் தொடர்பாக பேசுவதற்கு வேறு இடங்கள் உள்ளது என்று கூறினார்.  இதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஊடகவியலாளர்களின் கமராக்களை மறைத்து,  ஒளிப்பதிவு செய்வதை தடை செய்தார்.

இவ்வேளையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனியார் ஊடகங்கள் அனைத்தையும் வெளியே செல்லுமாறு பணித்துள்ளார். ஆனால் அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபடுத்தியிருந்தனர். அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராசா, ஜனாதிபதி பிரச்சினைகளை புரிந்து செயற்பட வேண்டும். விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

சில ஊடகங்கள் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுவதாலேயே தனியார் ஊடகங்களை வெளியேற்றியிருக்கலாம் என்று  கூறினார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முல்லைத்தீவிற்கு செல்கின்ற நிகழ்வுகளுக்கு தனியார் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமை என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வொன்றாக அமைகின்றது.

 

யாழில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  முஸ்லிம் கல்லூரி வீதியும் – நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன் போது பல்வேறு கோஷங்களையும் பதாதைகளையும் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ffa யாழில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

இரு புத்தசிலைகள் உடைப்பு – றுவன்புரவில் பதற்றமான சூழல்

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் உடைத்து துண்டாடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடைத்ததற்கான காரணங்கள் கண்டறியாத நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராந்து வருகின்றனர். எனினும் அப்பகுதி பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டு கொண்டு காவல்துறை மற்றும் இராணுவத்தன் பாதுகாப்பில் பிரதேசம் இருப்பதக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை – பாகிஸ்தான் இராணுவத் தலமைத் தளபதி

பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மருத்துவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டதாக, ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை உறுதி செய்துள்ள பாகிஸ்தானின் இராணுவத் தலைவரான காமர் ஜாவிட் பஜ்வா, ஓய்வு பெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வான் மற்றும் ஒரு “விழிப்புணர்வு அமைப்பில்” பணியாற்றிய டாக்டர் வாசிம் அக்ரம் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மற்றொரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜாவேத் இக்பால் ஒரு காலவரையற்ற சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது அவர் பாகிஸ்தானிய சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் சிறையில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானிய ராணுவம் முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று நபர்களால் கசியவிடப்பட்ட தகவல்களையோ அல்லது யாரிடம் தகவல்களை வெளிப்படுத்தினார்கள் என்பது பற்றிய விவரங்களை இராணுவம் வழங்கவில்லை. இரண்டு இராணுவ அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு தொடரப்படுவதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்களா என்பது குறித்து தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை தனக்கென்று சொந்த சட்டத்தினையும், நீதிமன்றத்தினையும் கொண்டுள்ளது. தவறான குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் இராணுவ அதிகாரிகளை எப்பொழுதும் மறைமுகமாக வைத்தே விசாரணை மேற்கொள்வது வழக்கம்.