Home Blog Page 3125

சிறிலங்கா வரும் அமெரிக்க இராஜதந்திரி

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான ராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் கிளாக் கூப்பர் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார்.

நேற்றைய தினம் தனது விஜயத்தை ஆரம்பித்த கூப்பர், இந்தியா, சிறிலங்கா, மற்றும் சிங்கப்பéர்  ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணத்தைத் தொடருவார் என அறியமுடிகின்றது.

சிறிலங்கா விஜயத்தின் போது, எதிர்காலப் பாதுகாப்பு குறித்த சிறிலங்கா உயர்மட்ட பிரமுகர்களுடன் பேச்சு நடத்தும் அதேவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர் ஆசிய பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அறிய முடிகின்றது.

சிறிலங்கா பிரதமர் யாழ். விஜயத்தின் போது கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ். விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அங்கு கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 10,000 வீடுகளில் ஒரு பகுதி வீடுகள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது. இந் நிகழ்வு ஞாயிறு காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

அத்துடன் அதற்கு முன்னர் காலை 10 மணியளவில் யாழ். செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டத்திலும் கலந்து கொள்வார். மேலும் கொழும்புத்துறையில் வீடமைப்புத் திட்டம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்து கொள்வார்.

அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்

உலக வல்லரசான அமெரிக்கா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை  இந்தியா உட்பட சில நாடுகள் இறக்குமதி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தது. இதைவிட ஈரானின் வளைகுடா எல்லைப் பகுதியில் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை  நிறுத்தி வைத்திருந்தது. அதனால் எப்போதும் போர் மூழலாம் என்ற நிலை உலக நாடுகளில் இருந்து வந்தது.

இதேவேளை அமெரிக்கப் போர்க் கப்பல்களை தாம் மூழ்கடித்து விடுவோம் என ஈரான் அமெரிக்காவையே மிரட்டி வருகின்றது.

இந்த எச்சரிக்கை நாடுகளிலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் ஜேர்மனி, சீனா, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய முக்கிய நாடுகளுடன் இந்தியாவும் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது.  தற்போது இந்தியா ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து 2 தமிழ் நீதிபதிகள் இடமாற்றம்

மன்னார் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் ரி.சரவணராஜா, கிளிநொச்சி நீதிமன்றிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும் மன்னார் நீதிமன்ற புதிய நீதிபதியாக  கிளிநொச்சி நீதிபதியாக மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தனது மக்களைப் பலி கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயற்சி

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து, சிறிலங்காவின் நிலைமைகள் பதட்டமாக காணப்பட்டதையடுத்து, அநேக நாடுகள் தங்கள் மக்களை சிறிலங்கா செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது. இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவித்தலை விடுத்திருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அண்மையில் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து. சில நாடுகள் இந்த எச்சரிக்கையை தளர்த்தியிருந்தன. இச்சந்திப்பில் சிறிலங்காவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பயண தடை எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவின் இந்த முயற்சி தனது மக்களைப் பலி கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சியாகும் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதும் சிறீலங்காவில் கைதுகள் மற்றும் தேடுதல்கள் நடைபெறுவதாகவும், குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள உதவிய அரசியல்வாதிகள் தற்போதும் பதவியில் இருப்பதால் சிறீலங்காவில் இன்னும் ஆபத்துக்கள் நீங்கவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் அரசமைக்க முடியாததால், கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாஹுவினால் கூட்டணி அரசு அமைக்க முடியாது போனதையடுத்து, இஸ்ரேலிய நாடாளுமன்றை கலைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதிய தேர்தல் செப்டெம்பர் 17இல் நடைபெறும். 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன் யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இதனால் கூட்டணி அமைத்து அரசமைக்கும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனாலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

அவுஸ்திரேலிய பிரதமராக மோரிஸன்

அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அவுஸ்திரேலியாவின் 46ஆவது பிரதமராக ஸ்காட் மோரிஸன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக் கொண்டார்.  புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டது. புதிய அமைச்சரவையில் 7பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

குண்டுத் தோசையா? குண்டா? சாப்பாட்டு பெட்டியை தூக்கி வீசிய சிறீலங்கா இராணுவம்

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவி ஒருவர் தனது உணவாக குண்டுத்தோசை எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவினை எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் தீவகத்திலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு நுழையும் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கிவிடப்பட்ட நிலையில் சோதனையினை மேற்கொண்ட இராணுவத்தினர் சாப்பாட்டு பெட்டியைக் காட்டி இதனுள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி குண்டுத்தோசை என்று பதிலளித்துள்ளார்.

பதிலைக்கேட்ட இராணுவத்தினர் மீண்டும் மீண்டும் குண்டு குண்டு என்று கேட்டவாறு அந்த உணவுப் பெட்டியினை திறக்கும்படி கூறியதும், மொழித் தொடர்பாடலில் புரிதலற்ற மாணவி ஆம் ஆம் என்று தலையசைத்துள்ளார். .அவரின் தலையசைவை குண்டு என்று உறுதி படுத்திய சோதனையாளர். அந்த குண்டுத் தோசைகளை சுக்கு நூறாக பிரித்துள்ளார்.

சிறிதளவும் துண்டுகளின்றி கைகளால் பிசைந்து மிக மோசமான நிலையில் சோதனையிடப்பட்டுள்ளது உணவினை உண்ண முடியாத நிலையில் குறித்த மாணவி அவ் உணவுப் பெட்டியினை தூக்கிவீசி விட்டு சென்றதாக தெரிய வருகின்றது.

இதே வேளை விற்பனை செய்யப்படும் அச்சுப் பாண் சில வியாபார நிலையங்களில் குண்டுப் பாண் என்றும் விற்பனை செய்யப்படுவதுடன் மிதி வெடி போன்ற சிற்றுண்டிகளின் பெயர்கள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டிய சூழலினை அண்மைக்கால இராணுவத் சோதனை மயமாக்கல் எடுத்துக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் தமிழர் தாயகப்பகுதியில் தங்கவைக்கப்படவுள்ள பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அகதிகளை இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அவர்கள் சில தினங்களில் அவர்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறொரு நாட்டிற்கோ அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித் திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே மீண்டும் 80 அகதிகளை அங்கு தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் வாள்வெட்டு கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று  (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் எடுத்துச்செல்லப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்படுகிறது. பட்டா ரக வாகனம்  மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

Kili 2019 May கிளிநொச்சியில் வாள்வெட்டு கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயம்மேலதி விசாரணைகள் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இன அழிப்பு இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பவம் கிளி நொச்சி காவல் நிலையத்தில் நேற்று(செவ்வாய் ) தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.