Home Blog Page 3126

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

‘இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் – ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு, ஊழல்களை மறைக்கும் செயற்பாடுகள், அதன் பாதுகாப்புச் சபையின் சனநாயகமற்ற செயற்பாடுகள் யாவும் பலரையும் ஆத்திரமடையச் செய்கின்றன. சமாதானம் என்ற பெயரில் அது போருக்கு போகிறது. அதே நேரத்தில் கொடூரமான இனவழிப்பை கைகட்டி நின்று பார்க்கிறது. இக்காலத்தில் ஐநா ஒரு ரிலியன்கள் (மில்லியன் மில்லியன்) டொலர்களை செலவு செய்திருக்கிறது….. பலரும் சொல்வது போல ஐநா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் அதை நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்கும். அதில் பல குறைபாடுகள் உண்டு அதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே’

இவ்வாறு சொன்னது வேறு யாரும் இல்லை – பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாள்.

இந்த ஐநாவின் வேறு ஒரு பிரபலமான அமைப்புத்தான் யூனிசெப். இதன் தலைவரின் சம்பளம் என்ன தெரியுமா? மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா. ‘அரசசார்பற்ற’ தொண்டு அமைப்புக்களின் தலைவர்களின் சம்பளத்தில் மிகவும் அதிகம் சம்பளம் பெறுபவராக இதன் தலைவர் இருக்கிறார். அதுமட்டுமல்ல யூனிசெப் அமைப்பு ஐ-அமெரிக்காவினது என்பதற்கும் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. அதன் தலைவர்கள் எப்போதும் – அன்றிலிருந்து இன்றுவரை – ஐ-அமெரிக்கர்களாகவே இருப்பார்கள். யுனிசெப்பின் மூலம் ஐ-அமெரிக்கா தனது பூகோள ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இதுவும் ஒரு வழி.

இந்த யூனிசெப் சிறுவர் நலனுக்காக என்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு நெருக்கமான கார்பரேட் எது தெரியுமா? குழந்தைகளுக்கு நப்கின் உற்பத்தி செய்யும் ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் தான். ‘பம்பேர்ஸ்’ போன்ற நப்பின்கள் சூழலை எந்த அளவுக்கு மாசு படுத்துகிறது என்பது சூழலில் கரிசனை உள்ளவர்களுக்கு தெரியும். ‘பம்பேர்ஸ்’ நிறுவனம் ‘பம்பேர்ஸ்’ விற்பனையில் ஒரு சிறு பகுதியை யூனிசெப்புக்கு கொடுக்கிறது. இது ‘பம்பேர்ஸ்’க்கான விளம்பரம். அதற்கு விளம்பரத்தை யார் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

இதே யூனிசெப் நிறுவனம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எத்துணை தீமை செய்தது என்று பார்ப்போம்.UNICEF0618 01 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

பொது மக்களிடையே விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிய எண்ணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1980களில் விடுதலைப்புகளின் சீருடை அணிந்த ஏழு வயதுச் சிறுவர்களின் படங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். கவனிக்கப்படாது விடுபட்ட சிறுவர்களை எடுத்து அவர்களுக்குக் கல்வி கொடுத்து அவர்களைச் சமூகம் மதிக்கும் ஒரு போராளி ஆக்குவதை ஒரு நல்ல காரியமாகவே விடுதலைப்புலிகள் அக்காலத்தில் நோக்கினர்.

விடுதலைப்புலிகளின் இச்சிறுவர் இணையும் கலாசாரம் கலாச்சாரம் 1980களில் உருவாகி வளர்ந்தது. இக்காலத்தில் சிறுவர் போராளிகள் பற்றிய சர்வதேச சாசனமாக ஜெனீவா சாசனம் மட்டுமே இருந்தது. இதில் படையில் இணைக்கப்படுவோரின் வயது 15க்கு மேலிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சிறுவர் போராளிகள் பற்றிய ஐநா சாசனங்களோ ஐநா திட்டங்களோ ஐநா நடவடிக்கைகளோ எதுவும் 1980களில் இருக்கவில்லை. ஐநாவின் சிறுவர் உரிமை பற்றிய சாசனம் 1987ம் ஆண்டிலேயே பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தச் சாசனத்தில் கூட படையில் இணைக்கப் படுவோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியோடிணைந்த அதன் சிறுவர் போராளிகள் என்னும் விடயம் அதுபற்றிய சர்வதேச சாசனங்களோ அக்கறைகளோ இல்லாத ஒரு காலத்தைச் சேர்ந்தது என்பதே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.

2001ம் ஆண்டிலேயே ஐநாவின் சிறுவர் உரிமைகளுக்கான சாசனத்திற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட இணைப்பில் அரசசார்பற்ற ஆயதக்குழுக்கள் மட்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே தமது அமைப்பில் சேர்க்கலாம் என்ற உறுப்புரை முதன்முதலில் சேர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் என்னும் அத்தியாயத்தில் உள்ள இப்பாரிய கால முரண்பாட்டை மறைத்து யூனிசெப்பின் தலைமையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டது.

அதே நேரத்தில் அரசுகள் 18 வயதுக்கு குறைந்தோரை இணைப்பதை இந்த ஐநா சாசனம் அனுமதித்தது. இன்றும் உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் 18 வயதுக்கு குறைந்தோரை பாடசாலைகளுக்கு சென்று இராணுவத்தில் இணைக்கிறார்கள். இச்சாசனத்தின் நோக்கமே ஆயுத விடுதலைப் போராட்டங்களை நலிவடையச் செய்வது என்ற கருத்தை இது வலுவாக்குகிறது.UNICEF0618 05 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் இருந்த பல முதுநிலை உறுப்பினர்களும், தமிழ்செல்வன் உட்பட, சிறுவர் போராளிகளாகவே இணைந்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பல முதுநிலைத் தளபதிகள் சிறுவர் போராளிகளைப் பற்றிய சர்வதேச பிரச்சாரம் தமக்கெதிராகப் பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படுகிறது என்றே சரியாகவே கணிப்பிட்டார்கள். இதில் உண்மை இருப்தை இச்சர்வதேச அமைப்புக்களின் பிற்கால நடத்தைகள் உறுதிப்படுதின. 2008இல் சிறிலங்கா அரசு சர்வதேச அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற சொன்னது. அப்போதே அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்ற சந்தேகம் இருந்தது. அப்படியிருக்க மறு பேச்சில்லாமல் அத்தனை அமைப்புக்களும் வெளியேறின.

விடுதலைப்புலிகள் பற்றிய யூனிசெப்பின் மேலும் சில நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.

யூனிசெப்பின் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருக்கும் சிறுவர் போராளிகள் பட்டியலில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் வயது குறைந்த பல சிறுவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களை செஞ்சோலை, அறிவுச்சோலை என்ற இரண்டு சிறுவர் இல்லங்களில் இருந்தார்கள். 2004ம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து மட்டக்களப்பில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களிலும் பராமரிப்புக் கிடைக்காத சிறுவர்களை விடுதலைப்புலிகள் இச் செஞ்சோலைக் கிளையில் இணைத்தார்கள்.

பின்னர் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பைக் கைவிட்டபோது இச்சிறுவர்கள் வன்னிச் செஞ்சோலைக்கு மாற்றப்பட்டார்கள். இச்சிறுவர்களை இவர்களின் பெற்றோரிடம் இணைக்கும்வரை சிறுவர் போராளிகள் பட்டியலிலிருந்து இவர்களை நீக்குவதற்கு யூனிசெப் அமைப்பு மறுத்தது.

ஆனால் யூனிசெப் அமைப்பாலோ அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தாலோ இச்சிறுவர்களை அவர்களின் பெற்றோருடன் இணைக்க முடியவில்லை. சில சிறுவர்களின் குடும்பங்களையே இவ்வமைப்புக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுனாமி அழிவின் பின் சில குடும்பங்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. குடும்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களைக்கூட கிழக்கிற்கு அழைத்துச்செல்ல சிறிலங்கா அரசு அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் விடுதலைப்புலிகளின் கடும் முயற்சியின் பின்னரும் யூனிசெப்பின் பட்டியலின்படி ‘விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மிகவும் வயது குறைந்த சிறுமிக்கு 7 வயது’. இவர் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்தார். 2007ம் ஆண்டில் கூடச் சர்வதேச ஊடகங்கள் யூனிசெப்பின் கூற்றாக ‘இவ்வுண்மையை’ வெளியிட்டன.

மூளை வளர்ச்சி சிறிது குன்றிய 9 வயதுச் சிறுமி ஒருத்தி தன் வீட்டில் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் சென்ற பாடசாலையின் ஆசிரியர்கள் இச்சிறுமியின் குழப்பதை அவதானித்தனர். ஒரு நாள் இரவு இச்சிறுமி வீடு திரும்பாமல் தனது வகுப்பறையிலேயே தங்கிவிட்டாள். அப்பிரதேசத்தின் விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் சிறுமியை ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க வைத்தார். சிறுமியின் குடும்பத்தினர் எவரோ இதுபற்றி யூனிசெப்பிடம் முறையிட்டனர்.2458201858327722646 ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

சிறுமியின் பின்னணி எதையும் விசாரிக்காமல் அவளும் யூனிசெப்பின் சிறுவர் போராளி பட்டியலில் இணைக்கப்பட்டாள். இச்சிறுமிக்குப் பாதுகாப்பான குடும்பச் சூழல் இல்லாததால் இறுதி வரையும் இச்சிறுவர் இல்லத்திலேயே அவள் பராமரிக்கப்பட்டாள். கடும் முயற்சியின் பின்னரே இச்சிறுமியை யூனிசெப்பினர் தமது பட்டியலில் இருந்து எடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பிரிவில் ஒரு 17 வயது வாகன ஓட்டுனர் பணியாற்றினார். இவர் 2007 ஆண்டில் சிறிலங்கா ராணுவத்தின் ஒரு கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தில் இவரே மூத்த பிள்ளை. தாயுடன் பல தம்பி தங்கைகளையும் கொண்ட அக்குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் ஒரே நபர். அவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளிடமிருந்து கொடுப்பனவு செல்வதற்காக என்றே விடுதலைப்புலிகள் அவரைப் பணியிலிருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு துணைப்படை வீரர் என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை மட்டும் வைத்துக் கொண்டு, இதன் பின்னணியை அறியாமல் – அறிய விரும்பாமல் – யூனிசெப் அவரை கொல்லப்பட்ட ஒரு சிறுவர் போராளி என்றே அறிக்கை விட்டனர்.

சிறுவர் போராளிகள் அமைப்பிலிருப்பதை நிறுத்துவதற்கு விடுதலைப்புலிகள் தீவிரமாக வேலைசெய்து முழு வெற்றியும் கண்ட காலமான 2007 ஆண்டுப் பிற்பகுதியில் நியூசிலாந்து ஹேஇரால்ட் என்ற பத்திரிகையில் யதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு மோசமான கட்டுரை வெளிவந்தது.

இக்கட்டுரையை நியூசிலாந்து யூனிசெப் அமைப்பு வெளியிட்டது. ஐநாவின் யூனிசெப் அமைப்போ தமக்கும் நியுசிலாந்து-யூனிசெப் அமைப்பிற்கும் தொடர்பில்லை என்றார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள யூனிசெப் அமைப்புக்கள் நிதி திரட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டன என்றும் அவர்கள் சுதந்திரமாச் செயற்படுபவர்கள் என்றும் சொன்னது ஐநா-யூனிசெப். சிறுவர் போராளிகள் என்னும் கவர்ச்சியான விடயம் நிதி திரட்டலுக்கு எவ்வளவு உதவுகிறது என்பதையும் இதனூடாக புரிந்ததுகொள்ளலாம்.

இவ்வாறு மறைமுகமாக எம்மை அழித்த ஐநாவை நோக்கி நாம் எவ்வளவு வளங்களை விரயமாக்குகிறோம். உண்மையில் யஸ்மின் சுலூகா, ஃபிரான்சிஸ் ஹரிசன் போன்றவர்களும் சுதந்திரமாக இயங்குபவர்களாக ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு ஐநாவின் அதாவது ஐ-அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவாகவே நடப்பார்கள். உலகில் இனவழிப்பு பற்றி ஆய்வு செய்பவர்களில் பலர் ஈழத்தமிழர் இனவழிப்பை ஏற்று அது பற்றி எழுதியும் வரும் போது யஸ்மின் சுலூகா போன்றவர்கள் மட்டும் எதற்காக ஈழத்தமிழர் இனவழிப்பை பகிரங்கமாக ஏற்றவில்லை என்று நாம் சிந்தித்தோமா? இவர்கள் அவ்வாறு ஏற்றால் இவர்களுக்கு நிதி கிடைப்பது உடனே நின்றுவிடும் என்பதால் தான். சிந்திப்போம். போராடுவோம்.

<ஐ. நா பற்றி அன்றே சொன்னாள்>

“..கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள்தான் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன…
……..
உலக சமாதானம் – இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும் – சீ…
முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது…”

-மேஜர் பாரதி-17203190 1530519200305752 4681341544902654294 n ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

ஹங்கேரி நதியில் படகு விபத்து – 7 பேர் பலி 20 பேரைக் காணவில்லை

நேற்று இரவு (29) ஹங்கேரியில் இடம்பெற்ற படகு விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காணாமல் போயுள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரியாவைச் சேர்ந்த 32 சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஹங்கேரியாவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களைக் கொண்ட படகே விபத்துக்குள்ளாகியுள்ளது. டனூப் நதிப் பகுதியில் குறித்த படகு மற்றுமொரு படகுடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏழு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஹங்கேரியன் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு-நோர்வே கருத்தரங்கு முழுவிபரம்

27.10.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு’ என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில் நடத்தியது.

நோர்வே சிவப்புக் கட்சித் தலைவர் பியோனர் பேசும்பொழுது, ‘இன்றைய நோர்வே பிரதமர் (வலதுசாரிக் கட்சி) எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானக் குரலை எல்லா இடங்களிலும் பதிவு செய்திருந்தார், ஆனால், ஆளும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் ஈழத்தமிழர்களை மறந்தது ஏன்’ என்று வினவினார்.தொடர்ந்து, ‘ஈழத்தின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதென்பதை அனைத்துலக நாடுகளும் முன்மொழிய வேண்டும்’ எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரான 10 ஆண்டுகள், புவியியல் அரசியலில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளும் மேற்குலக நாடுகள், இலங்கைத் தீவில் தமிழரின் நிகழ்கால நிலைமைகள், மார்ச் 2019 ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இலங்கைத் தீவுக் குறித்த அறிக்கை, உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான சூழல் குறித்த உரைகளோடு, தமிழீழ வரலாறு, தமிழின வரலாறு குறித்த பார்வைகள் கொண்ட உரைகளும் கருத்தரங்கில் இடம்பெற்றிருந்தது.

நாடாளுமன்றக் கருத்தரங்கின் பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது.

1. மொழி, பண்பாடு, தாயகம், கூட்டு உளவியல் என அனைத்திலும் வரலாற்று வழியிலும் பூகோள ரீதியிலும் ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் தனித்துவமானவர்கள்.

2.  டச்சு, ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்களின் காலனியாதிக்கமே தமிழீழ இறையாண்மையை பறித்தது.

FB IMG 1559145478973 70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு-நோர்வே கருத்தரங்கு முழுவிபரம்3.  ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இலங்கைத்தீவினுள்ளான அரசியல் உரிமையை பகிர்ந்த இறையாண்மை மூலமாக தீர்மானித்துக்கொள்ளும் கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்தும் தோல்வியடைந்தப் பின்னரே, 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை (தனித்தமிழீழக் கோரிக்கை) முன்மொழியப்பட்டது,  அதற்கான அங்கீகாரம் வழங்கும் விதமாக, 1977 இலங்கைத் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்திருந்தனர்.

4.  அமைதி வழிப்போராட்டங்கள் நசுக்கப்பட்டப் பின்னரே, ஆயுதவழி போராட்டத்தினை சுமக்க தமிழர்களை வரலாறு கட்டாயப்படுத்தியது.

5. 30 வருடங்களுக்கு வருடப் போராட்டங்களும் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நோக்கம் கொண்ட, திட்டமிட்ட, படை நடவடிக்கையை அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு ஏவியது. அதன் பின்னரான 10 ஆண்டுகளிலும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்து நடந்தது, இன்னும் நடக்கிறது.

6. 7 கோடி மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழீழப் பிரதேசத்தின் வீற்றிருக்கும் இலங்கையின் வடக்கு மாகாண சபையும் தமிழின அழிப்பை விசாரிக்க பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

7. இலங்கை அரசு முன்மொழியும் உள்ளக நீதி விசாரணையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

8. இதுவரை பன்னாட்டு அரங்கிலும் மனித உரிமை அவையிலும் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியதே இல்லை.

9. ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழான தீர்வு நிரந்திரமானதல்ல, நோர்வேயும் பன்னாட்டு சமூகங்களும் பன்னாட்டு சட்டவரம்புகளின் அடிப்படையில் தமிழர்களின் தேசத்தை அங்கீகரித்து, அவர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

10. தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டு வாழும் இஸ்லாமியர்களுக்கு உரிய அரசியல் தீர்வினை உள்ளடக்கியத் தீர்வாக இருத்தல் வேண்டும்.

11. ஈழத்தமிழர்களுக்கு உரிய வரலாற்று வழி இறையாண்மை, போராடிப் பெற்ற இறையாண்மை, பரிகாரம்ஃதீர்வுக்குரிய இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இலங்கைத் தீவிலும் பன்னாடுகளிலும் வாழும் இலங்கைத் தீவின் வம்சாவளித் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தல் வேண்டும்.

12. போரின் பொழுதும் போரின் பின்னரும் பாதிக்கப்பட்டு, வாழ்விடம் இழந்து, வாழ்க்கை இழந்து வாடும் எண்ணற்ற விதவைகள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், படுகாயமடைந்து உடல் வலிமை இழந்தோர்களுக்கு நோர்வேயும் பன்னாட்டுச் சமூகமும் போதிய நிதியினை வழங்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த எல்லா வகையிலும் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

13. இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகித்த நோர்வே, தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து போர் தொடங்கிய இலங்கை அரசினை கேள்விக்குட்பத்துவது தார்மீகக் கடமையாகிறது. அதேவேளை, உலகெங்கும் அகதி முகாம்களில் சிதறி வாழும் பல லட்சத் தமிழர்களை இலங்கைத் தீவிற்குள் எவ்வித இராணுவ ஆக்கிரமிப்பும் அற்ற தமிழர் தாயகத்தில் வாழ வழிவகை செய்யவேண்டும்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைத் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளிவிவகாரப் பொறுப்பாளர் திருச்சோதி, நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் ஸ்டீபன் புஸ்பராஜா, தமிழ்நெட் ஆசிரியர் ஜெயச்சந்திரன், இலங்கை ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான காதர் மாஸ்ரர், பர்மீய மனித உரிமைச் செயற்பாட்டாளரும் நிரந்திர மக்கள் தீர்ப்பாயம் 2013இல் பிரேமன் நகரத்தில் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணையில் நீதிபதிகளில் ஒருவராக இருந்த மௌங்கு ஸார்னி, நோர்வே சிவப்புக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பியோனர் மொக்ஸ்னஸ், பிரான்சு நாட்டு அரசியல் ஆய்வு மாணவி சாருகா தேவகுமார் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.முழு நிகழ்வையின் நெறியாள்கையை பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் கையாண்டார்.

மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபை

அண்மையில் மியான்மார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

றோகின்யா பகுதியில் 2017 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது மனித உரிமை மீறல்களின் ஈடுபட்ட படை அணியே இந்த ஆண்டும் மீண்டும் றகீன் பகுதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற தாக்குதல்களில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

படையினர் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் நாள் காவல் நிலையம் ஒன்றை அரகன் இராணுவம் என்ற கெரில்லா அமைப்பு தாக்கி அழித்திருந்தது. இந்த தாக்குதலில் 13 காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

மிகவும் தரம்வாய்ந்த பயிற்சி பெற்ற கெரில்லா படையினரைக் கொண்ட இந்த அமைப்பு ரகீன் பகுதியில் சுயாட்சி கோரி போராடி வருகின்றது. ஆனால் இந்த தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த கெரில்லா அமைப்பை மியான்மார் அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கின்றது. அங்கு இடம்பெறும் தாக்குதல்களினால் 30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மனிதாபிமான உதவிகளையும் படையினர் தடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

81 பேரின் நேர்காணல்கள், புகைப்பட ஆதாரங்கள் மற்றும் செய்மதிப் புகைப்படங்களின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களில் இருந்து மியான்மார் படையினரின் மேற்கு பகுதி கட்டளைப்பீடத்தைச் சேர்ந்த 22 மற்றும் 55 ஆவது இலகு காலாட்படையினரே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த படை அணிகளே 2017 ஆம் ஆண்டும் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். அதன்போது 70,000 முஸ்லீம் மக்கள் பங்களாதேஸ் இற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இது ஒரு இன அழிப்பு எனவும் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அப்போது ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

ஆனால் அது இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் அதே படை அணிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய பணிப்பாளர் நிக்கொலஸ் பெக்கலின் தெரிவித்துள்ளார் என எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“யாரும் எங்களைப் பாதுகாக்க முடியாது” என்ற தலைப்பில் மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மையில் இடம்பெற்ற 7 தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

myanmar1 மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபைகடந்த ஏப்பிரல் மாதம் மியன்மாரின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் மூங்கில்களை வெட்டிக்கொண்டிருந்த ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக பேர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீட்டை கோருவதுடன், ஆயுத மற்றும் பயணத் தடைகளை கொண்டுவர ஐ.நா முன்வர வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இன அழிப்பை கொண்டாடும் சிங்கள இராணுவம்

தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நிறைவை சிறீலங்கா படையினர் பல நாட்கள் கடந்தும் கொண்டாடி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 10ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இராணுவ ரணவிரு நடைபவனி ஆரம்பிக்கப்டுள்ளதுடன்  சுமார் 600 இராணுவத்தினர் இந்நடைபவனியில் பங்கு கொள்கின்றனர்.

யுத்த காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்பவர்களை சோதனையிடும் சோதனை நிலையம் ஒன்று மதவாச்சியிலிருந்தது. இந்த சோதனை நிலையத்திலிருந்தே நடைபவனி ஆரம்பமாகியது.

மதவாச்சி, அநுராதபுரம், திரிப்பன, மரதன்கடவல, ஹபரண, தம்புள்ள நாவுல, மாத்தளை, கட்டுகஸ்தோட்ட, கண்டி, பேராதனை, மாவனல்ல, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்த, கிரிபத்கொட, களனி, கிராண்ட்பாஸ், களனி, தெமட்டகொட ஊடாக இந்த அணிநடை கொழும்பைச் சென்றடைந்து, சுதந்திர சதுக்கத்தில் நிறைவு பெறும்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த அணிவகுப்பை ஆரம்பித்து வைத்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் போது அனைத்துலக போர் விதிகளை மீறி பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதுடன் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து முள்ளிவாய்க்காவில் போரை நிறைவு செய்திருந்தது சிறிலங்கா அரசு.

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் படை அதிகாரிகள் மீது அனைத்துலக நாடுளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

விசாரணைகள் முடியும் வரை அசாத் சாலி இராஜனாமா செய்ய வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே முஸ்லிம் தலைவர்கள் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது.

நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களையும், சந்தேகங்களையும் அடிப்படையாக கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும். மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி போன்றோர் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே இத்தருணத்தில் வெளியிட வேண்டும்.

அசாத் சாலி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானித்து வருகின்றார். அவருடைய கருத்துகள் சமூகத்தில் சகவாழ்வுக்கு பதிலாக மாறுபட்ட நிலைமைகளை தோற்றுவிக்கும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

கொழும்பு,டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்புத் துறையினர் நாய்களை கொண்டுசெல்லக் கூடாதென மேல்மாகாண ஆளுநர்

அசாத் சாலி தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

பாதுபாப்புத்துறையினர் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவரும் தலையீடு செய்யக் கூடாது. முஸ்லிம் தலைவர்கள் இத்தருணத்தில் பொறுப்புணர்வுடன் கருத்துகளை வெளியிட வேண்டும்.

மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு கருத்துத் தெரிவிக்கும் உரிமையுள்ளது.

ஆனால், சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எவராக இருந்தாலும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

அசாத் சாலி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். அவருக்கு உரிய ஆலோசனையும் ஜனாதிபதி வழங்கியிருக்க கூடும். இவ்வாறான கருத்துகளால் சகவாழ்வுக்கு பதிலாக இனங்களுக்கு இடையில் விரிசலே மேலும் அதிகரிக்கும்.

பாதுகாப்புத்துறையினருக்கு தடையின்றி அவர்களது விசாரணைகளையும்,தேடுதல் வேட்டையையும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இதேவேளை, ஓர் அமைச்சருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவர் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது எதுவாக இருக்க வேண்டுமென எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

பாரிய குற்றச்சாட்டுகள் ஓர் அமைச்சருக்கு எதிராக சுமத்தப்படும் பட்சத்தில் அவர் தமது பதவியை இராஜனாமா செய்வதே பொருத்தமானதாக இருக்கும். அவ்வாறுதான் கடந்தகாலத்தில் நடைபெற்றுள்ளன.

விசாரணைகள் முடியும் வரை அவர் இராஜனாமா செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஐ.தே.முன்னணிதான் இவர் தொடர்பிலான அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றார்.

தாக்குதல் குறித்து பலமுறை அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர்

இலங்­கையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்று இடம்­பெ­றப்­போ­கின்­றது என்ற கார­ணியை பாது­காப்பு செய­லா­ள­ ருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் எடுத்துக் கூறி­ய­போ­திலும் அது குறித்து கவனம் செலுத்­த­ப்ப­ட­வில்லை.

தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் பாது­காப்பு சபைக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை என்று தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார்.

சஹ்ரான் குறித்த தக­வல்­க­ளையும் சிரியா சென்­ற­வர்கள் இலங்கைக்கு வரு­கின்­றார்கள் கைது செய்து விசா­ரிக்­கலாம் என்றும் பல சந்­தர்ப்­பங்­களில் தெரி­யப்­ப­டுத்­தினேன்.

ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி நாட்டில் இல்­லாத கார­ணத்­தினால் கலா­நிதி ஜெயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தலை­மையில் நேற்­றைய கூட்டம் நடத்­தப்­பட்­டது. இதில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்ட தேசிய புல­னாய்­வுப்­பி­ரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரி­வுக்­குழு முன்னால் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் இந்த தக­வல்­களை கூறினார்.

இங்கு அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போது,

இலங்­கையில் தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடப்­பட்ட கடிதம் ஒன்று 7 ஆம் திகதி எனக்குக் கிடைத்­தது. எங்­கி­ருந்து வந்­தது, யார் அனுப்­பி­யது என்ற விப­ரங்கள் அதில் இருக்­க­வில்லை.

ஆனால் மத தலங்கள், ஹோட்­டல்கள் மற்றும் இந்­திய உயர்ஸ்­தா­னிகர் ஆலயம் ஆகி­யன தாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அதில் தகவல் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த தக­வலை ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி காலை 11 மணிக்கு பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன். அந்த நாளில் (8 ஆம் திகதி) இந்­திய பாது­காப்பு செய­லாளர் இலங்­கைக்கு வந்­தி­ருந்தார். அன்­றைய தினம் எமது பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இந்­திய பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இடையில் காலையில் 10 மணி­ய­ளவில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

அந்த சந்­திப்பு நண்­பகல் வரையில் நீடித்­தது. ஆகவே அன்­றைய தினம் என்னால் பாது­காப்பு செய­லா­ளரை சந்­திக்க முடி­ய­வில்லை. ஆனால் தக­வலை கொடுத்­தி­ருந்தேன். அடுத்த நாள் 9 ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் இந்த தாக்­குதல் குறித்த தகவல் தொடர்பில் முக்­கி­ய­மா­கவும் பிர­தா­ன­மா­கவும் பேசி­யி­ருக்க வேண்டும். ஆனால் அன்­றைய தினம் இது குறித்து பேசப்­ப­டவே இல்லை.

மீண்டும் நினை­வூட்­டினேன்

அந்த கூட்­டத்தில் என் அருகில் பாது­காப்பு செய­லாளர் இருந்தார். ஆகவே நான் எனது கோப்­பு­க­ளுக்கு மேல் இந்த கடிதம் குறித்த அறிக்­கையை வைத்­தி­ருந்து இது குறித்து பேச வேண்டும் என பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­வித்தேன். அதனை ஏனை­ய­வர்கள் கவ­னித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆனால் பாது­காப்பு செய­லாளர் இதனை பொலிஸ்மா அதி­ப­ருக்கு அறி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் நீங்­களும் ஒரு­முறை நினை­வு­ப­டுத்தி விடுங்கள் என்று கூறி சாதா­ர­ண­மாக அதனை தட்­டிக்­க­ளித்தார். அதன் பின்னர் இந்த பிர­தி­யொன்றை பொலிஸ்மா அதி­ப­ருக்கும் நான் வழங்­கினேன்.

அதன் பின்னர் இந்த விடயம் குறித்து எவரும் அக்­கறை கொண்­ட­தாக எனக்கு தெரி­ய­வில்லை. என்­னிடம் இது குறித்து எவரும் வின­வவும் இல்லை. பொலிஸ்மா அதிபர் தக­வலை அறிந்­தி­ருந்த கார­ணத்­தினால் நான் அதன் பின்னர் அவ­ரிடம் வின­வவும் இல்லை. ஆனால் நான் பொலிஸ்மா அதி­ப­ருக்கு வழங்­கிய கடி­தத்தில் (eyesolny) என்று குறிப்­பிட்டு அனுப்­பினேன்.

இந்த வார்த்தை ஒரு இர­க­சிய குறி­யீ­டாக நாம் பயன்­ப­டுத்தும் ஒன்­றாகும். இந்த விட­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம். ஆனால் அதன் பின்னர் 21 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் இது குறித்து பேசவும் இல்லை. தேசிய பாது­காப்பு சபைக் கூட்டம் ஒன்று கூட்­ட­ப­டவும் இல்லை. பாது­காப்பு செய­லாளர் பாது­காப்பு குழுக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை.

உண்­மையை கூற­வேண்டும் என்றால் வாரத்­திற்கு ஒரு தடவை பாது­காப்பு சபைக் கூட்டம் கூட்­டப்­பட வேண்டும். ஆனால் மாதம் ஒன்று என்ற வகையில் தான் பாது­காப்பு சபைக் கூட்டம் கூடி­யது. தாக்­குதல் நடத்­தப்­பட முன்னர் இறு­தி­யாக இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திக­தியே பாது­காப்பு சபைக் கூட்டம் கூடி­யது. அதன் பின்னர் 22 ஆம் திகதி அதா­வது தாக்­குதல் இடம்­பெற்ற அடுத்த நாள் ஜனா­தி­பதி தலை­மையில் கூடி­யது. தாக்­குதல் நடந்­துள்­ளது. யார் நடத்­தி­யது என்ற கார­ணிகள் மாத்­திரம் பேசப்­பட்டு வரு­கின்­றதே தவிர உண்­மை­யான கார­ணிகள் நான் கூறிய விட­யங்கள் குறித்து இன்­று­வரை அக்­கறை செலுத்­தப்­பட்­ட­தாக இல்லை.

நான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் பத­வியை ஏற்­று­கொண்­டதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்பு குறித்து (isis) ஆராய்ந்து வரு­கின்றேன். உலகில் நடக்கும் செயற்­பா­டுகள் குறித்து கண்­கா­ணித்து வரு­கின்றேன். இலங்­கையில் காத்­தான்­கு­டியில் ஒரு தாக்­குதல் சம்­பவம் இரு முஸ்லிம் குழுக்கள் இடையில் ஏற்­பட்­டது. அப்­போதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் மற்றும் இந்த சம்­பவம் குறித்து இணைத்து பார்த்­துள்ளேன்.

சிரியா சென்று வந்­தோரை விசா­ரிக்­கு­மாறு கோரினேன்

மேலும் இலங்­கையில் சிலர் சிரியா சென்­றுள்­ளது கண்­ட­றி­யப்­பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் இலங்­கைக்கு வரு­கின்ற தகவல் கிடைத்­தது. அவர்­களை கைது­செய்து விசா­ரிக்க வேண்டும் என்­ப­தையும் நான் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். வாராந்தம் செவ்­வாய்க்­கி­ழமை கூடும் புல­னாய்வு கூட்­டத்­திலும் அவ்­வப்­போது கூடிய பாது­காப்பு சபைக் குழுக் கூட்­டத்­திலும் தெரி­வித்­துள்ளேன். ஆனால் அவர்­களை கைது­செய்ய சட்டம் இல்லை என்ற கார­ணிகள் கூறப்­பட்­டது. அவர்­களை எவ்­வாறு விசா­ரிப்­பது என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும் என்ற பதில் கிடைத்­தது.

சஹ்ரான் குறித்தும் தகவல் வழங்­கினேன்

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி இது குறித்து பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரி­வித்தேன். அதனை கருத்தில் கொள்­ள­வில்லை. சில தினங்­களில்  முதல் அனுப்­பிய கடி­தத்தை நினை­வு­ப­டுத்தி மீண்டும் கடிதம் அனுப்பினேன். ஆனால் இது குறித்து அவ்வப்போதும் பேசப்பட்டதே தவிர அதனை தாண்டிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக கூற முடியாது. அதேபோல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சஹ்ரான் குறித்து தனிப்பட்ட தகவல் ஒன்றினை தயாரித்து குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் இதற்கான விசாரணைகள் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து என்னால் எதையும் தெரிவிக்க முடியாது. எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றார்.

தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்களில் ஒருவர்- மனோகணேசன்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சியொன்றில் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மூன்று பதவிகளுக்குரிய நபர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர், பிரதமர் பதவிக்குரியவர், ஐ.தே.கட்சியின் தலைவர் பதவி ஆகிய பதவிகளுக்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மூவரில் இருந்து நியமனங்கள் இடம்பெறவேண்டும்.

இனவாதத்துக்கு எதிராக வாக்களிப்பவர்கள் ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணியைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆலயம் மீது செல்வீச்சு – நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

யாழ் மாவட்டம் வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது சிறிலங்கா படையினர் செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆவது ஆண்டாகிய நேற்று 29/05/2019 புதன்கிழமை படுகொலைக்குள்ளான பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘ஒப்பிரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராசி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்திருந்தார்கள்.f 1 ஆலயம் மீது செல்வீச்சு - நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் உரிமை கோரப்படாத பதின்மூன்று உடலங்கள் உள்ளிட்ட சிதைவடைந்து உருக்குலைந்து போயிருந்த பலரது உடல் சிதைவுகளையும் ஓரிடத்தில் போட்டு ஆலய நிர்வாகத்தினரால் எரியூட்டப்பட்டிருந்தது.

இத்துன்பியல் சம்பவத்தின் 32 ஆவது ஆண்டை முன்னிட்டு வடமராட்சி மக்கள் சார்பில் குறித்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில், படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசை வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நெய்த் தீபம் ஏற்றி வழிபாடு தொடர்ந்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது.

ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது.

“நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் வெளிநாட்டு நிதியுதவியுடன் குறித்த பள்ளிவாசலை அமைத்திருந்திருந்தனர். இந்தநிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிவாசலை உடைத்து அகற்றியுள்ளோம்” என்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.61811315 2253286661383583 4950707071503826944 n தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு