பேனா முனையில் ஊடகப் பணியாற்றிய ஊடகவியலாளர்களை படுகொலை செய்த சிங்கள பேரினவாதம் – சட்டத்தரணி கே.சுகாஸ்

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை திறந்த வெளி மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடவியலாளர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதான சுடரேற்றி உரையாற்றிய சட்டத்தரணி கே.சுகாஸ்,

ஊடகவியலாளரும் தேசியத் தலைவரால் நாட்டுப்பற்றாளர் என கெளரவிக்கப்பட்ட ஐயாத்துரை நடேசன் பேனா முனையில் ஊடகப் பணியாற்றியபோது சிங்களபேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டார். இன்று படுகொலை செய்யப்பட்டு 15 ஆம் ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை.

இது இவர் விடயத்தில் மட்டுமல்ல. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை விடயங்களிலும் நீதியான விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படாது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதற்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவிலான ஊடவியலாளர்களம் கலந்து கொண்டு, ஊடக பணியின் நிமித்தம் உயிர் நீத்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஈகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.