Home Blog Page 3118

பொலன்னறுவையில் தேரர்கள் எதிர்ப்பு பேரணி

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலன்னறுவை பௌத்த பிக்குமார் 2,000 க்கு மேற்பட் டோர் ஒன்றிணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.

சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவித்துவந்தேன் – நாலக்க டி சில்வா

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் தெரிவுக்குழு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று சாட்சியமளித்தார்.

பிரமுகர் கொலைச்சதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாலக்க டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சக்கர நாற்காலியிலேயே இன்று அவர் சாட்சியமளிக்க வந்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுவதனால் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை என சாட்சி விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னர் தெரிவுக்குழு அறிவித்தது.

சாட்சியாளர்கள் அல்லது தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் அது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைக்கமைய, ஊடகங்களுக்கு இந்த வரையறை விதிக்கப்படுவதாக குழுவின் தலைவர் அறிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர ஆகியோர் இன்று அழைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரிடம் சாட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட நபர்களை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவுக்குழு இன்று அறிவித்தது.

இன்றைய விசாரணையின் போது, ஏப்ரல் 21 தாக்குதல்தாரியான சஹ்ரான் தொடர்பில் தாம் 2013 ஆம் ஆண்டு முதல் அறிந்திருந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரிக்கும்போது, அவரின் இணையத்தளம், முகப்புத்தகப் பக்கம் என்பவற்றை கண்காணித்து வந்ததாகவும் அவர் வன்முறை கடும்போக்குவாதம் நோக்கிப் பயணிப்பது தெரியவந்ததாகவும் நாலக்க டி சில்வா சாட்சியமளித்துள்ளார்.

இவை தொடர்பாக தொடர்ச்சியாக காவல்த்துறை அதிபருக்கு தான் கைதுசெய்யப்படுவரை அறிவித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். இராணுவ கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்ட மனோ

யாழில் அதிகமாக உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக பேசுவதற்கு, அமைச்சர் மனோ கணேசன் யாழ். கட்டளைத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

யாழிலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதைப் பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பினார்.

வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்படாதிருக்க அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போதைய நிலைமை சுமுகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் குழந்தை பிறக்கும் போதே அடையாள அட்டை

குழந்தை பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

மாத்தளை நகரசபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கம் பிறப்புச் சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

புதிய தொழில்நுட்பத்தின் பிரகாரம் அனைவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக் கொடுக்க 40 பில்லியன் செலவாகும்.

இதை ஒழுங்கு செய்து தரும்படி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது. செலவாகும் தொகை ஒரு வருடத்திற்குள் மீண்டும் ஈட்டிக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சரிநிகர் சமமாய் தமிழீழ தேசியக்கொடி

இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும் ,பலநாட்டு கொடிகளுடன் ஏற்றி பறக்கவிடப்பட்டது.தமிழீழ தேசியக் கொடியானது வானுயர கம்பீரத்துடன் பறந்த காட்சியானது தமிழர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

சிங்கள இனவாத கொடிக்கு நிகராக எமது தமிழீழ தேசியக்கொடி இன்று “இத்தாலி ஜெனோவா”,மாநகரில் கம்பீரத்துடன் பறந்தமையானது உலகம் காலம் கடந்து எமது தமிழ் இனத்தைப் புரிந்து புரிந்துகொள்ள முற்படுத்திவதை உணர்த்தும் ஒரு செயற்பாடாக நோக்கப் படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் தாக்குதல் – 30 பேர் பலி

சூடானில் விரைவாக ஒரு ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி தற்போதைய இராணுவ இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கு சூடான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தலைநகர் காத்தோம் பகுதியில் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டவர்களின் நிலைகள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் கடந்த ஏப்பிரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைவிட மோசமானது.

சூடானில் நீண்டகாலமாக ஆட்சியில் உள்ள ஓமார் அல் பசீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதே ஏப்பிரல் மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஆட்சியில் உள்ள இடைக்கால இராணுவ சபை மறுத்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, சூடான் மீது ஐக்கிய நாடுகள் சபை தடைகளை கொண்டுவர வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீது தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அதன் கிழக்கு ஆபிரிக்காவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் சரா ஜக்சன் தெரிவித்துள்ளார்.

சூடானில் இடம்பெற்ற இந்த தாக்குதலை ஐ.நா செயலாளர் நாயகமும் கண்டித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுநர்கள் விபரம்

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள் தமது பத­வி­களை நேற்று ரா­ஜி­னாமா செய்­தனர்.

அதன்­படி அவ்­வாறு ரா­ஜி­னாமா செய்த அமைச்­சர்­களின் விபரம் வரு­மாறு

அமைச்­ச­ரவை அமைச்­சர்கள்

1. ரவூப் ஹக்கீம் – நகர திட்­ட­மிடல்

2. ரிஷாத் பதி­யுதீன் – கைத்­தொழில் வாணிப அலு­வல்கள் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம்

3. கபீர் ஹாசிம் – நெடுஞ்­சா­லைகள்

4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் – தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலு­வல்கள்

இரா­ஜாங்க அமைச்­சர்கள்

1. பைசல் காசிம் – சுகா­தார போசனை சுதேச மருத்­து­வத்­துறை

2. அமீர் அலி – விவ­சாய நீர்ப்­பா­சன கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள்

3. ஏ.இசட்.எம். செயிட் – சமூக வலு­வூட்டல் இரா­ஜாங்க அமைச்சர்

4. எச்.எம்.எம். ஹரீஸ் – மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்

1. அப்துல்லா மஹரூப் – துறைமுகங்கள்

ஆளுநர்கள்

1. அசாத் சாலி – மேல்மாகாணம்
2. ஹிஸ்புல்லா – கிழக்குமாகாணம்

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள் – அமைச்சர் மனோ கணேசன்

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது, முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்ய செய்யப்போவதாக அறிவித்தார்கள்.

அதை நானும், அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொள்ள மறுத்தோம். இது இனவாதிகளுக்கு பணிந்து இடம்கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

அங்கே பேசும்போது நான் ஒரு விடயத்தை சொன்னேன். இன்று காலை, இலங்கை பொலிசின் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், அதே புலனாய்வு துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் நான் உரையாடினேன். அமைச்சர் ரிசாத் பதுர்தீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவற்றை நீங்கள் விசாரிக்கவில்லை எனவும் எதிரணியினரும், பல பௌத்த துறவிகளும் கூறுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டேன்.

அமைச்சர் ரிசாத் பதுர்தீன் மீது இங்கே வந்து எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் தந்துள்ளது வெறுமனே புகார் கடிதங்கள் மட்டுமே. அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது. அவற்றில் ஒன்றும் இல்லை. இங்கே வந்து இப்படியான கடிதங்களை தருபவர்கள், வெளியே போய் ஊடகங்களிடம் வீராவேசமாக கதைக்கிறார்கள்.

ஆனால், இப்படி கதைப்பவர்கள் முதலில், கைதுசெய்ய, விசாரிக்க உருப்படியான தடயங்களை தர வேண்டும். எங்களிடம் எதுவும் தரப்படவில்லை. ஆகவே எங்களால் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது, என இலங்கை பொலிசின் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் என்னிடம் கூறினார்கள். இதை நான் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கூறினேன்.

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள் மீது புகார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். இதற்கு ஜூலை ஒன்றாம் திகதிவரை காலக்கெடு வழங்குகின்றேன் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என நான் யோசனை கூறியுள்ளேன். இதை கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கூறினார்கள்.

இந்த யோசனையை நான் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் கூற உள்ளேன். சபாநாயகர் கரு ஜெயசூரியவும், இது தொடர்பில், எவர் மீதும் சாட்சியங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் ஜூலை ஒன்றாம் திகதிக்கும் முன் அறிவியுங்கள் என பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து பதிலை பெற்று கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எமக்கு தெரிவிக்க வேண்டும் என கூற உள்ளேன்.

இன்று முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக கூறி ஊர்வலம் போய், ஆர்ப்பாட்டம் செய்து, உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள் நாளை மீண்டும் ஒரு முறை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பிறகு தமிழ்-சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பின்னர் தாம் விரும்பாத சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அவர்களை பதவி விலக்க கூறி சிங்கள மக்களை தூண்டி விட்டு குரல் எழுப்புவார்கள்.

இந்த பேரினவாதிகளுக்கு ஆதரவாக மறந்தும் போய் எவரும் ஆதரவு தெரிவித்து விடக்கூடாது. அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த பேரினவாத இயக்கத்துக்கு அரசியல் ரீதியாக ஒரு முடிவு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டின் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் – சிறிலங்கா சனாதிபதி 

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் என்­ப­தனால் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் நாட்டில் சமா­தா­னத்தைப் பாது­காப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்த புரிந்­து­ணர்­வு­டனும் புத்­தி­சா­து­ரி­யத்­து­டனும் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­ப­தோடு, நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்ளும் என்றும் ஜனா­தி­பதி கோரிக்கை விடுத்தார்.

இஸ்­லா­மிய பக்­தர்­க­ளுக்­காக நேற்று மாலை ஜனா­தி­பதி மாளி­கையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேசிய இப்தார் வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.MS06042019 2 இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் - சிறிலங்கா சனாதிபதி 

இஸ்­லா­மிய மதத்தலை­வர்­களும் பெரு­ம­ள­வி­லான இஸ்­லா­மிய பக்­தர்­களும் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

நாட்டு மக்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் குரோ­தத்­து­டனும் சந்­தே­கத்­து­டனும் நோக்கும் நிலை காணப்­படும் வரையில் நாட்டில் ஐக்­கி­யத்­தினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தோடு, சகல இன மக்­களும் நியா­ய­மான சமூ­கத்தில் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலைக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டும்.

முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கை ஒன்­றினை நான் பெற்­றுக்­கொண்­டுள்ளேன். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக 559 முஸ்­லிம்கள் மாத்­தி­ரமே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு, உரிய விசா­ர­ணை­களின் பின்னர் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பற்ற அனை­வ­ரையும் விரைவில் விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுப்போம் என்றார்.

இதே­வேளை நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் அனைத்து இனங்­க­ளி­னதும் மதங்­க­ளி­னதும் கௌர­வத்­தினை பாது­காத்து அனை­வ­ருக்கும் நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மேற்கொண்டுவரும் முயற்சியினை பாராட்டிய இஸ்லாமிய மதத் தலைவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசி வழங்கினர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்