Home Blog Page 3114

முஸ்லீம் அமைச்சர்கள் ஏற்கனவே பதவிவிலகல் கடிதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர் – ரணில் விக்கிரமசிங்க

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்களது இராஜினாமாக் கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அது தொடர்பில் அதற்கு மறுநாளே அமைச்சரவையில் வைத்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக் கடிதங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு என்னிடம் அவர்களது இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்.

நான் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு அடுத்த நாள் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கு அது தொடர்பில் அறிவித்தேன் . எனினும், நம் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இராஜினாமாக் கடிதம் தனித்தனியே வழங்கப்பட வேண்டும் என்பதை அப்போது ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து நான் அவர்களிடம் தனித்தனியே இராஜினாமாக் கடிதங்களை கோரினேன். அவர்கள் அதனை இன்றைய தினம் தருவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

எவ்வாறெனினும் இடைப்பட்ட சில தினங்களில் முஸ்லிம் மக்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அதனால் முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் அவர்களால் தமக்கான இராஜினாமாக் கடிதத்தை வழங்க முடியாமல் போயுள்ளது

அவர்கள் இன்றைய தினம் தனித்தனியே தமது இராஜினாமாக் கடிதங்களை எமக்கு கையளிப்பர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார் .

தினேஷ் குணவர்தன எம்.பி தமது கேள்வியின்போது,

சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சில தேசியப் பத்திரிகைகள் அந்த இராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு இதுவரை கிடைக்கவில்லையென ஜனாதிபதியின் செயலாளரே அதனை குறிப்பிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இராஜினாமாக் கடிதம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகினார்களா? அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவில்லாத நிலையே உள்ளது

அந்த இராஜினாமாவை உறுதி செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் அது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென தினேஷ் குணவர்தன எம். பி கேட்டுக்கொண்டார்

இதனையடுத்து பதிலளித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன என்பவரே முன்னாள் ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி உப்புள் திசாநாயக்கவூடாக முன்வைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதியன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த வேளை குறித்த அலைவரிசையொன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘டோக் வித் சத்துர’ எனும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஆளுநர் நீதித்துறை தொடர்பில் தரக்குறைவாக பேசியதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் இக்கருத்தானது நீதித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவரை அரசியலமைப்பின் 105(3) சரத்துக்கமைய தண்டிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா விஜயம் – வீதிகளை மூடி கடும் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சிறிலங்காவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது   விஜயம் இதுவாகும்.

இவரை வரவேற்கும் உத்தியோகéர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மூடி சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சீனாவிலிருந்து சிறிலங்கா வரவுள்ள தொடருந்து, சொகுசு பஸ்கள்

சிறிலங்கா புகையிரதத் திணைக்களம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ள தொடருந்து, மற்றும் சொகுசு பஸ்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா வரவுள்ளன.

சீனாவில் தயாரிக்கப்படும் S 14ரகத்தைச் சேர்ந்த தொடருந்தே இங்கு வரவுள்ளதாக அதை வடிவமைக்கும் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இவை மலையகப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சீனாவிலுள்ள  Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அதி நவீன 9 சொகுசு பஸ்களை பெற்றுக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம் – மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகரசபையின் 20வது பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாநகரசபை உறுப்பினர் தவராஜா அவர்களினால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணையும், மாநகரசபைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணைகள் மாநகரசபை உறுப்பினர்களான வே.பூபாளராஜா, கு.காந்தராஜா ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் அரச மொழியாக தமிழ் உபயோகிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் அரச அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என தவராஜா குறிப்பிட்டார் இருப்பினும் மாநகரசபை என்கின்ற ரீதியில் எம்மால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தமிழ்மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதே அடிப்படையில் வியாபார நிலையங்களில் பெயர்ப் பதாதைகளில் தமிழ் மொழி முன்னுரிமைப்படுத்தப்படாமலிருப்பது தொடர்பில் பூபாளராஜா தெரிவிக்கையில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வியாபாரப் பத்திர புனரமைப்பின் போது தமிழ்மொழி முன்னுரிமைப்படுத்தப்படுவது தொடர்பில் உரிய நடைமுறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்து அரச கரும மொழிகள் இல்லாத மொழிகள் பிரயோகிப்பது தொடர்பில் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு தோரணத்தில் உள்ள அராபிய எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் என காந்தராஜா அவர்கள் தெரிவித்தார்.

இவை தொடர்பில் மாநகர முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில் வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்புத் தோரணத்தில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது தொடர்பில் எமது அறிக்கையினை முன்வைப்பபதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகரசபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகக் கடந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மாநகர சபையினால் அமைக்கப்படுகின்ற நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மற்றுமொரு சாதனை

ஏவுதளங்களுக்குப் பதிலாக கப்பலில் இருந்து விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தி சீனா சாதனை செய்துள்ளது. சீனாவின் சாங்டாங் மாகாணத்தை அண்டிய கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது கப்பலில் இருந்து ”லாங் மார்ச் – 11” ரக விண்கலத்தை புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.

நடமாடும் ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு விண்கலத்தை சீனா செலுத்துவது இதுவே முதற்தடவையாகும்.

அமைதிப் பணிக்கு செல்கின்றனர் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள்

சூடான், யேமனில் அமைதிப் படையணியில் இணைய சிறிலங்கா இராணுவத்திலிருந்து 69 இராணுவத்தினர் தெரிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கான மனித உரிமை அறிக்கை கிடைப்பதில் காலதாமதமாகுவதால் , இவர்கள் சூடானுக்கான விசாவை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர்களின் பயணம் தாமதமாகின்றது என  கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்திற்கு அனைத்துலக மட்டத்தில் அமைதிப் பணியில் ஈடுபடும் அங்கிகாரத்தை வழங்குவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதுடன், அனைத்துலக சமூகத்தின் மீதான நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து சிறிலங்காவிற்கு நவீன இராணுவக் கருவிகள்

சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், அவசர தொலைத் தொடர்பு கருவிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் கருவிகள் போன்றவற்றை சீனா அனுப்பி வைக்கவுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு தேவைகளுக்காக சிறிலங்கா கண்காணிப்பு கருவிகளை சீனா வழங்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே சீனத் தூதுவர் செங் ஷியுவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்காவிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், சீனா உதவத் தயார் என்றும் பதிலளித்துள்ளார்.

எனினும் சீன இராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லீம் அமைச்சர்களின் பதவிவிலகல் கடிதங்கள் இன்னும் ஒப்படைக்கப் படவில்லை – அமைச்சுகளின் செயலாளர்கள்

அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்க வில்லையெனவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று (05) இரவு வரையில் எந்தவொரு அமைச்சரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது வாகனங்களை ஒப்படைக்கவில்லையெனவும், தமது தனிப்பட்ட செயலணியை பதவி நீக்கவில்லையென, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டபோது அவர்களும் இதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமிடம் வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று மேலும் அறிவித்துள்ளது.

ஸ்டாலினை சந்தித்தார் மாவை

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

குறித்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கினார்www ஸ்டாலினை சந்தித்தார் மாவை