Home Blog Page 3050

சீனாவை கடும் புயல் தாக்கியதில் 22 பேர் பலி, மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

சீனாவை லெகிமா எனப் பெயரிடப்பட்ட புயல் காற்று தாக்கியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காற்றினால் நேற்று (10) காலை இடம்பெற்ற நிலச்சரிவிலேயே பலர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். தாய்வானுக்கும் சீனாவின் பொருளாதார நகரமான சங்காய் நகருக்கும் இடையில் உள்ள வென்லிங் பகுதியிலேயே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த புயல்காற்று கடுமையாக இருக்கும் என முதலில் கணிக்கப்பட்டபோதும், பின்னர் அதன் தாக்கம் குறைந்ததால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் வடபகுதியை நோக்கி சிஜிஜாங் பகுதி ஊடாக நகர்ந்துவருகின்றது. இது 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட சங்காய் நகரை தாக்கலாம் என கருதப்படுகின்றது.

மீட்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும், வெள்ளம், வீழ்ந்துள்ள மரங்கள், கட்டிட இடிபாடுகள் மற்றும் மின்சாரத் தடை என்பன அவர்களின் பணிக்கு தடையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை

இப்போது ஜனாதிபதித் தேர்தலைக் கையாள தமிழர்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும். நாம் புறக்கணித்தால், ஜனநாயக வழிமுறையில் பங்கேற்காததற்கு மேற்கு நாடுகள் தமிழர்களைக் குறை கூறும் என வவுனியா பகுதியை சேர்ந்த காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உண்மையான தமிழ் ஜனாதிபதி வேட்பாளருடன், இந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்பதன் மூலம், நாங்கள் எங்களை பலப்படுத்துகிறோம், நமது ஜனநாயக விழுமியங்களை நமக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் UNP அல்லது SLFP க்கு விலைபோகவில்லை என்று சர்வதேசத்திடம் கூறுகின்றோம். வலுவான வழியில், நாங்கள் எங்கள் இறையாண்மை தேவை என்று சொல்கிறோம்.

எனவே, வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு தமிழ் வேட்பாளரை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

பின்வருவன பற்றி நாங்கள் சிந்திப்பதற்க்கான சிறந்த விடயம்:

1. தமிழர்களின் அரசியல் தேவைகளை சரியாக வெளிப்படுத்தக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்க எங்களுக்கு இளம் தமிழர் தேவை.

2. ஜனாதிபதி பிரச்சாரத்திற்காக காங்கேசன்துறையில் இருந்து கல்முனை வரை அடிக்கடி பயணிக்க முடிந்த தமிழர் தேவை

3. தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் போன்ற புதிதாக உருவான நாடுகளின் கடந்தகால அரசியலைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடியவர் தேவை .

4. வடகிழக்கில் தமிழர்கள் ஆட்சியின் விழிப்புணர்வையும் பயனையும் தமிழ் மக்களுக்கு புரியவைக்க கூடியவர் தேவை.

5. தமிழர்களின் இறையாண்மையின் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் தேசியவாதத்தையம் மீண்டும் கொண்டுவர கூடியவர் தேவை

6. தந்தை செல்வாவின் கீழ் நாம் அனைவரும் கொண்டிருந்த அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வரக்கூடியவர் தேவை . அதாவது நேர்மை மற்றும் நற்பெயர் கொண்ட , உண்மைத்தன்மை, ஊழல் அல்லாதவை உள்ளவர் தேவை .

7. அவருக்கு வாக்களிக்க தமிழர்களிடையே ஒரு உற்சாகத்தை கொண்டு வர கூடியவர் தேவை. தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை தமிழர்கள் நேசிக்க வேண்டும்

8. சர்வதேச சமூகங்களுடன் பேச சரளமாக ஆங்கிலம் பேச கூடியவர் தேவை

9. தமிழர்களின் அரசியல் தேவைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்க கூடியவர் தேவை

தமிழர்கள் உலகிற்கு தமக்கு ஏன் சுய ஆட்சி வேண்டியதன் அவசியத்தை அம்பலப்படுத்த நாம் ஜனாதிபதி பிரச்சாரத்தைப் பயன்படுத்தவேண்டும் .

சிங்களவர்களிடமிருந்து தமிழர்கள் வேறுபட்டவர்கள் என்பதை அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் காட்ட இந்த தேர்தல் ஒரு நல்ல நேரம். தமிழர்கள் தனியாக வாழ விரும்புகிறார்கள் என்பதை ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் காண்பிப்பார். தமிழர்கள் முஸ்லீம்களைப் போன்றவர்கள் அல்ல, தமிழர்கள் தங்கள் சுய ஆட்சியில் ஆர்வம் காட்டுபவர்கள், முஸ்லீம் தலைவர்களைப் போல பணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.

முதலில், தமிழர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி வேட்பாளரிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணம் சம்பாதிக்கிறது. இது இரண்டு முறை நடந்தது.

கடந்த இரண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில், தமிழர்களை அரசியல் விபச்சாரிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தியது.

சம்பந்தன் கூட்டம் ஒரு கிங்மேக்கர் அல்ல, பணத்திற்காக தமிழர்களின் வாக்குகளை விற்கும் மாமாக்கள்.

சம்பந்தன் ஒரு திருடன் மற்றும் ஒரு நோயியல் பொய்யர்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை, எனவே இந்த வேட்புமனுக்காக மணிவண்ணன் அல்லது காண்டீபன் ஆகியோரை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

யாழ் போதனா வைத்தியசாலை ஸ்கேனர் இயந்திரம்; குழப்பங்களுக்கு விளக்கம்

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI – Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி பொதுமக்களுக்குத்  தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் வசிக்கும் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்களது பிரதான வைத்திய சேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு  மூன்றாம் நிலை வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கானரைப் பெற்றுக் கொள்வது என்பது நீண்டகாலக் கனவாகவே இருந்து வந்தது.

ஜப்பானிய அரசு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களுடன் வழங்கிய 3 தளங்களைக் கொண்ட மத்திய செயற்பாட்டுக்கான கட்டடத் தொகுதி – நவீன சத்திர சிகிச்சைக் கூடம், ஆய்வு கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு , எக்ஸ் கதிரியக்க பரிசோதனை முதலான பல நிழற்பட வசதிகளுடன் (Imaging facilities) 2012 முதல் இயங்கி வருகின்றது.

நாட்டில் யுத்தம் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவிய 2005 காலப்பகுதியில் இத்திட்டம் (ஜய்க்கா – JICA)  முன்மொழியப்பட்டது.  எனினும் நாட்டில் மீண்டும் ஏற்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் இத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. 2010 இல் யப்பான் நாட்டு அமைச்சரவை இத்திட்டத்தை அங்கீகரித்தது. 2010 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானம் 2012 யூனில் நிறைவு பெற்றது. யப்பான் நாட்டு மக்களது நன்கொடையில் (இலங்கை ரூபா 2900 மில்லியன்) கிடைத்த இத்திட்டம் வடபகுதி மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமே. இலங்கையில்  உள்ள மிகச் சிறந்த ஆய்வு கூடங்களில் (Laboratory ) ஒன்று இக்கட்டடத் தொகுதியில் 24 மணிநேரமும் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டடத் தொகுதியானது நவீன ஆய்வுகூட உபகரணங்கள், சத்திரசிகிச்சைக் கூட உபகரணங்கள் , அதிதீவிர சிகிச்சைக் கூட உபகரணங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் எம். ஆர். ஐ ஸ்கானரை வழங்குவது உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக 2015 ஒக்ரோபரில் நியமனம் பெற்றேன். அனைவருடனும் இணைந்து வைத்தியசாலையின் அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவது குறித்து பல்வேறு திட்டங்களை முன்னேடுத்து வருகின்றேன்.

மத்திய அரசாங்கம் யாழ். போதனா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளதுடன் பல திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது.

6 தளங்களைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் 2 தளங்களும் பூர்த்திய செய்யப்பட்டு – 590 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டு – உயர்தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.  மிகுதி 4 தளங்களுக்குரிய ரூபா 1300 மில்லியன் நிதி, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

குவைத் நாட்டின் மக்களது நன்கொடையில் – ரூபா 530 மில்லியன் திட்டப் பெறுமதியில் – அமைக்கப்பட்ட 3 தளங்களைக் கொண்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் (Rehabilitation Centre) கடந்த 25.07.2019 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. 11 மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலையிலும் காணப்படாத வசதிகள் – முதுமை , மற்றும் விபத்துக்களால் உடல் அவயவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்குரிய வசதிகள், உபகரணங்கள் மற்றும் செயற்கை அவயவங்கள் உருவாக்கும் தொழிற் கூடம், உடற்பயிற்சிக் கூடம் முதலானவை  இக்கட்டடத் தொகுதியில் உள்ளன. இன்னும் சில வாரங்களில் இது இயங்கத் தொடங்கும்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் வாங்குவதுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான தொழிநுட்பப் பெறுகைக் குழுவை சுகாதார அமைச்சு நியமித்தது. அரச நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சு இதனை வாங்கி யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்க உள்ளது.

சுகாதார அமைச்சு எம்.ஆர். ஐ ஸ்கேனர் ஐ வாங்குவதுக்காக இவ்வாண்டு நிதியும் ஒதுக்கியுள்ளது. இவ்வருட இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கேனர் கிடைத்து விடும்.  பராமரிப்புச் செலவுடன் இதன் பெறுமதி ரூபா 375 மில்லியன் ஆகும். எம்.ஆர். ஐ ஸ்கேனர்  அரச நிதியிலேயே முழுமையாக எமக்குக் கிடைக்க உள்ளது. இதற்காக நாம் எவரிடமும் நிதி சேகரிக்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு பாதீட்டில் அரசாங்கம் யாழ் போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவாக அமையவுள்ள சிறுவர் வைத்தியசாலைக்காக ரூபா 850 மில்லியனை ஒதுக்கியுள்ளதுடன் , ஜய்க்கா கட்டடத் தொகுதியின் ஆய்வுகூட 4 ஆவது தள விரிவாக்கத்துக்காகவும் நிதியினை ஒதுக்கியுள்ளது.

அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில்  ஒரு சி.ரி. ஸ்கேனர்  அடுத்த மாதம் பெறப்பட இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நன்கொடையில் கிடைக்கின்ற சி.ரி. ஸ்கேனர், அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு கிடைக்க உள்ள எம். ஆர். ஐ ஸ்கேனர்  ஆகிய இரு விடயங்கள் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் சமூகவலைத் தளங்களில், ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்) அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரின் அவசர தேவைப்பாடு குறித்து கேட்டு அறிந்து கொண்டார். தற்போது வைத்தியசாலையில் பாவனையில் இருக்கின்ற சி.ரி. ஸ்கேனர்  9 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் அடிக்கடி பழுதடைந்து அதன் செயற்பாடு தடைப்படுகின்றமையால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை 2 சி.ரி. ஸ்கேனர்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஆகவே இன்னொன்றை அரச நிதியினூடாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அரச நிதியில் கோரப்பட்டுள்ள சி.ரி. ஸ்கேனர் எமக்குத் தாமதமாகவே கிடைக்கும்.

ஆகவே நன்கொடையாளர்களின் உதவியில் சி.ரி. ஸ்கேனர் ஒன்றை விரைவாகப் பொருத்தும் முயற்சியில் வைத்தியசாலை நிருவாகம் ஈடுபட்டு வருகின்றது.   ரஞ்சன் அவர்கள் 46 மில்லியன் ரூபா நிதியுதவியை நன்கொடையாக வழங்கி இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு பல்வேறு அமைப்புக்களை, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களை இணைப்பதிலும் ரஞ்சன் பிரதான பங்கை வகித்து வருகின்றார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் எஸ்.கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்களைத் தொடர்பு கொண்டபோது நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தமை எமக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அண்மையில் (கடந்த வாரம்) கதிர்காமநாதன் அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்காக ரூபா 20 மில்லியனை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் அபயம் தொண்டு நிறுவனமும் சி.ரி. ஸ்கேனர் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்பைச் செய்ததுடன்  ஆரம்பம் முதலே ரஞ்சன் அவர்களுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நன்கொடையாளர்களை ஊக்குவித்து அனுசரணையும் வழங்கி வருகின்றது.  நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற  நிதியானது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (Jaffna General Hospital Development Association) வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகின்றது.

விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதலோடு தரமான (160 ஸ்லைஸ்) சி.ரி. ஸ்கேனர் ஐ ஜப்பானில் இருந்து தருவிப்பதுக்காக ரூபா 50 மில்லியன் நிதி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முற்பணமாக வழங்கப்பட்டது.

வரும் செப்ரெம்பர் மாதமளவில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் எமது வைத்தியசாலையை வந்தடையும். புதிய சி.ரி. ஸ்கேனர் கிடைத்ததும் அதன் சேவைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். இந்த நற்காரியத்துக்குப் பங்களித்த தனிநபர்கள், அமைப்புக்களின் பூரண விவரங்கள் ஆரம்ப வைபவத்தின் போது வெளியிடப்படும் என்பதையும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இந்த நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் 112.5 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும். தற்போதுவரை சுமார் 110 மில்லியன் ரூபாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில்,  அச்சு ஊடகங்களில் எம்மைத் தொடர்பு கொள்ளாது வெளிவரும் செய்திகள் குறித்து பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்போ அன்றி அனுசரணையோ செய்யாதவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரப்படுத்துவததையும் காணக் கூடியதாக உள்ளது.

உண்மைக்குப் புறம்பான, குழப்பகரமான செய்திகளை வெளியிடுவதை குறித்த தனிநபர்களும் ஊடகங்களும் நிறுத்திக் கொள்வது இவ்வாறான நற்காரியத்தைச் விரைவாகச் செய்வதுக்கு வழிவகை செய்யும்.

வைத்தியசாலையில் இன்னும் பல அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தனியான ஒரு மகப்பேற்று விடுதி இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும். பழைய மகப்பேற்று விடுதி அபாயநிலையில் காணப்பட்டதால் அது அகற்றப்பட்டு மகப்பேற்று விடுதிக்குரிய நிலம் பல வருடங்களாக வெறுமையாக உள்ளது.

இந்த வேளையில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் வைத்தியசாலைக்குக் கிடைப்பதுக்குக் காரணமான பிரதான நன்கொடையாளர்களான பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), எஸ். கதிர்காமநாதன் ஆகியோருக்கும் ஏனைய நன்கொடையாளர்களுக்கும், மற்றும் அமைப்புக்களுக்கும் வைத்தியசாலையின் சார்பிலும் வட பகுதி மக்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு ஐக்கியராச்சியத்தில் இயங்கும் அபயம் நிறுவனத்துக்கும், யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி

போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறுமட்டங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக உணர்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஒரு நிகழ்வை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அவசரமானது என்றும் இந்த அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பல்கலைக்கழக சமூகம் முதல் தொழிலாளர் அமைப்புக்கள் வரை எம்மிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி எமது இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருக்கின்றது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழு ஒன்றை நாம் இன்றே உருவாக்கிப் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும்.

நாம் இந்த நிகழ்வை மேற்கொள்ளும் காலம் மிகவும் முக்கியமானது. ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல்கள் வரும் நிலையில் தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது. அதி அவசரமான கோரிக்கைகளையே உடனடியாக முன்னிறுத்த உள்ளோம். ஆகவே, கடந்த முறையைவிட கூடுதலான மக்களை இம்முறை நாம் அணிதிரட்டவேண்டும்.

கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் நாம் தொடர்ந்து செய்யவிருக்கும் “எழுக தமிழ்”பேரணிக்கு எமது முதலாவது பேரணி நிகழ்வு உத்வேகம் ஊட்டும் வகையில் அமையவேண்டும்.

முன்னைய“எழுகதமிழ்”பேரணிகள் நடக்கும் போது நாம் பலர் உத்தியோக பதவியில் இருந்தோம். எமக்குப் பதவி வழி அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் தரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான அரச அங்கீகாரத்துடன் கூட்டத்தில் ஈடுபட முடியாது.

எனவே எமது மக்களின் பாதுகாப்பு விடயங்கள் எத்தகைய அரச அங்கீகாரத்துடன் நடைபெறப் போகின்றன என்பதை நாம் பரிசீலித்துப் பார்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அண்மைய உயிர்த்த ஞாயிறு நடவடிக்கைகளால் நல்லூர் ஆலயத்தில் கூட பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரவைக்கு ஏதேனும் பாதுகாப்புத் தடைகள் விடுக்கப்படுமா என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூகநிறுவனங்கள், மத பீடங்கள்,மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரிய அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தொழிற் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள்,விவசாய,கடற்றொழில் சங்கங்கள்,சமாசங்கள்போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சி பேதமின்றி செம்ரெம்பர் 16 ஆம் திகதி ஒற்றுமையாய் ஒருங்கு சேரவேண்டும்.

யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எம் மக்களை செப்டெம்பர் 16ஆம் திகதிய பேரணியுடன் இணைக்கப் போகும் இணைப்புப் பாலங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சியாளர்களால் இதுவரை கவனிக்கப்படாத ஆறு விடயங்கள் எமது பேரணியில் வலியுறுத்தப்பட இருக்கின்றன.

அவையாவன,

எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் செயல்கள் ஆராயப்பட்டு சபையின் நடவடிக்கைகள் வடகிழக்கைப் பொறுத்தவரையில் உடன் நிறுத்தப்படவேண்டுமா என்பது பரிசீலிக்கப்படவேண்டும்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்குநிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்யவேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறவேண்டும். பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒருகாலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களை இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்படவேண்டும்.

மேற்கண்ட ஆறு விடயங்களே எமது பேரிணியில் முக்கியமாக கூறப்படப் போகும் விடயங்கள். எமது அரசியல் தேவைகளை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் முன் மொழிவுகள் ஊடாக யாவருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. அவற்றை நாங்கள் இனிவரும் “எழுகதமிழ்”பேரணியில் வலியுறுத்துவோம்.

எமது பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியன மேற்கண்ட ஆறு விடயங்களை இப்போதைக்கு வலியுறுத்தினால் போதும் என்று நினைக்கின்றோம். ஏந்தப் படப் போகும் பதாகைகள், மற்றும் ஒட்டப்படப் போகும் சுவரொட்டிகள் எமது தணிக்கைக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டே அனுமதிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் மேற்படி ஆறு விடயங்களையும் இலகுவாக அனுமதிக்க முடியும். அவற்றைச் செய்யுமாறு நாம் அரசை, ஜனாதிபதி வேட்பாளர்களை வேண்டுவது எல்லாவிதத்திலும் நியாயமானது. எனவே இவற்றை இம்முறை வலியுறுத்துவோமாக!

சிலர் எமது பேரணியில் சேரவிருப்போரைத் தடுக்கக் கங்கணம் கட்டியுள்ளதாக அறிகின்றேன். ஆனால் சுயநல காரணங்களுக்காக, கட்சிநலம் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களை யார் எடுத்தாலும் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். நாம் இங்கு கட்சிகளை வளர்க்க முற்படவில்லை. மக்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாகப் போராடவே ஒன்றுபடுகின்றோம்.

ஒன்றுபட்டு எமது இன்னல்ப்படும் மக்களின் விடிவிற்காகப் போராட நினைத்துள்ளோம். ஆகவே எமது பேரணியை இவ்வாறாகக் குழப்ப எத்தனிப்போர் சம்பந்தமாக விழிப்பாக இருங்கள். எமக்கு ஒத்துழைப்பு நல்காவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம் தராது இருங்கள் என்று அவர்களிடம் நல்லமுறையில் கூறிவையுங்கள்.

எமது தமிழ் மக்களின் வருங்காலம் என்பது இப்பேர்ப்பட்ட சிந்தனையுடையவர்களையும் உள்ளடக்கும். நாம் போராடுவது அவர்களுக்காகவும்தான் என்பதை எவரும் மறத்தல் ஆகாது. அந்தவகையில் அவ்வாறான சிந்தனைகள் எவருக்காவது இருக்குமானால் அவற்றைப் புறந்தள்ளிவைத்து எம்முடன் சேர்ந்து பயணிக்க அவர்களை உள்ளன்புடன் அழைக்கின்றோம்.

இன்றிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையறிந்து, குறிக்கோள் அறிந்து ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழ் மக்கள் சார்பில் உங்களால் இயலுமானமட்டில் ஆதரவு வழங்குவீர்களாக என்று கோரி அடுத்து எமது ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுற்படுவோமாக என்றார்.

யாழ் நூலகத்தை எரித்தவரின் புதல்வர் யாழ் பயணம் – தேர்தல் திருவிழா ஆரம்பம்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்கவும், அவரின் குழுவினரும் (10.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

காலையில் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்கள் விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், நாகவிகாரை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனைத்  தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது நாகவிகாரையின் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

நவீன் திஸநாயக்காவின் தந்தை காமினி திஸநாயக்க, இவர் சிறிலங்கா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதே யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளையிலேயே மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு வழங்கினார். குறிப்பாக முல்லைத்தீவின் எல்லை கிராமங்களை ஆக்கிரமித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனுக்கு கிராமசேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.

TNPF let தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்நீண்ட நாட்களாக குறித்த கிராம சேவையாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாகவும் போலி முகநூல் ஒன்றினை இயக்குவதாகவும் அதனூடாக தன்னுடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளியிடப்படுவதாகவும் குற்றம் சாட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுன் அரபு மொழி கற்ற புலனாய்வு அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியாகிய தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர், முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக அறிய முடிகின்றது

அத்துடன் தாக்குதலுக்கு முன்னதாக குறித்த புலனாய்வு அதிகாரி குருநாகலில் உள்ள சஹ்ரான் மனைவி வசித்த வீட்டிற்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 26 அன்று காத்தான்குடி சாய்ந்தமருது பகுதியில் ஒரு வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்த இரண்டு பெண்கள், குறித்த புலனாய்வு அதிகாரி சென்ற குருநாகல் வீட்டில் வசித்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணையில் ஈடுபட்ட குறித்த புலனாய்வு அதிகாரி தன்னுடன் அரபு மொழி கற்ற தற்கொலைக் குண்டுதாரியின் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

“பேரழிவிற்கான மாற்றம்” – தேர்தல் வெற்றிக்கான குறும் படம் வெளியீடு

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து பொது ஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தொகுத்த ஆவணப் படம் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 நிமிடமே கொண்ட இந்த ஆவணப் படம் ஈஸ்டர் தாக்குதல்கள், ஜெனீவா தீர்மானங்கள், ஜனாதிபதி பிரதமர் முரண்பாடு, மத்திய வங்கி நிதி மோசடி மற்றும் மின்சார நெருக்கடி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

கடந்த வாரம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இறுவெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆவணப்படம் “பேரழிவுக்கான மாற்றம்” என்ற தலைப்பில் உள்ளது. இது பொதுஜன பெரமுனவின் அமைப்பானர் பசில் ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழ் தொகுக்கப்பட்டது. மேலும் இது 11.08 அன்றைய கட்சி மாநாட்டில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ்ற்குள் ஊடுருவல் – தாக்குதல் அச்சத்தில் மக்கள்

சிறீலங்கா மூஸ்லீம் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதால் அங்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஸ்ரெற்ஸ் ரைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இருந்து இரண்டு தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் இற்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் அங்குள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து குண்டுகளைத் தயாரித்து தேவாலையங்கள் உட்பட இலகுவான இலக்குகளை தாக்கலாம்.

மனிலா அனைத்துலக விமான நிலையத்தின் தகவல்களின் படி மார்க் கெவின் சம்கூன் மற்றும் விக்ரோரியா சோபியா டொமிங்கோ ஆகியவர்களே நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர்.

இவர்கள் தற்கொலைதாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சிறீலங்கா தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இவர்களில் சம்கூனின் தயார் டுபாயில் பணியாற்றி வருகின்றார்.

இந்த அமைப்பு சிறீலங்காவில் மேற்கொண்ட தாக்குதலில் 250 மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோமின்கோ குண்டு தயாரிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அவர் பிலிப்பைன்ஸ் மற்றும் சிறிலங்கா கடவுச்சீட்டுக்களை வைத்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளே முக்கியம் ; என்னை நியமித்தல் அதனைப்பெறுவேன் – தயா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதாயின் அந்தப் பொறுப்பை ஏற்று, சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றி பெறுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதற்காக என்னை நியமிக்க முன்னர் நான்தான் 2020 இல் ஜனாதிபதி என நாடு முழுவதும் போஸ்டர் அடித்து திரிவதற்கு எனக்கு தலையில் ஏதும் நோய்கள் இல்லையெனவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.