Home Blog Page 3047

மஹிந்த அரசின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைக்கவேண்டும் – அசாத் அலி

மஹிந்த அரசாங்கத்தின் கொலைஞர்களையும் கொள்ளையர்களையும் சிறையில் அடைப்பதற்கு மைத்திரிபால, – ரணில் அரசாங்கத்துக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு ,எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிறைவேற்ற வேண்டுமெனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாது கோட்டாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. மொட்டு கட்சியினர் மஹிந்தவை நிறுத்தினாலும் மண் கௌவியே தீருவர். பெரும்பான்மையின வாக்குகள் மூன்று பெரும்பான்மையின கட்சிகளுக்கு பிரிந்து செல்லும். எனவே மொட்டு கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறலாமென கனவு காண்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் கள்வர்களும் ஊழல் வாதிகளும் இணைந்து தோற்றுவித்த இந்த மொட்டு கட்சியில் ஜனநாயகத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது? கடந்த ஆட்சியில் சட்டத்தை மதிக்காது, நீதிக்கு தலைவணங்காது செயல்பட்ட கோட்டா , விமல் வீரவன்ச போன்றவர்களின் நடவடிக்கைகளை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கின்றனர்.

சிறீலங்காவில் மத சுதந்திரம் – ஆய்வு செய்ய வருகிறார் ஐ.நா அதிகாரி

சுதந்திரமான மதச் செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அகமட் சகீட் நாளை (15) சிறீலங்கா வரவுள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நாளை சிறீலங்கா வரும் அதிகாரி 15 ஆம் நாள் தொடக்கம் 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவில் தங்கியிருப்பார். சிறீலங்கா அரசு எவ்வாறு மதங்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றது, அவற்றை எவ்வாறு ஊக்கிவிக்கின்றது என்பது தொடர்பில் இவர் ஆய்வுகளை மேற்கொள்வார்.

வேறுபட்ட மதங்களிடையேயான உறவையும், சுதந்திரத்தையும் சிறீலங்கா அரசு எவ்வாறு மதிக்கின்றது மற்றும் வேற்று மத இனமக்களை சிறீலங்கா அரசு எவ்வாறு பாதுகாக்கின்றது என்பது தொடர்பில் தான் ஆய்வு செய்யவு;ளதாக சகீட் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட மதங்களின் சுதந்திரமான செயற்பாடு தொடர்பான அதிகாரி அஸ்மா ஜகன்கீர் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அவரின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பிலும் சகீட் ஆராயவுள்ளார்.

தனது 12 நாள் பயணத்தின் போது அவர் அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அவரின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதனிடையே, 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட பௌத்த மயமாக்கல்கள், சைவ ஆலயங்கள் மீதான அத்துமீறல்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஆதாரங்களுடன் தயாரித்து ஐ.நா அதிகாரியிடம் தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியா வென்னீரூற்று விவகாரம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம், தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள் தொடர்பான விவகாரம் மற்றும் சைவ ஆலயங்களிற்கு அண்மையாக சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள், இந்து ஆலயங்கள் மீதான சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான விரிவான அறிக்கை அவரிடம் வழங்கப்படவேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை தாயகத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.

ஹொங்கொங்கில் பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இராணுவப் பயிற்சிக்காக கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, பீப்பல்ஸ் டெய்லி நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், சீனாவை சினமூட்டியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் சீனா ‘பயங்கரவாதம்’ என்று கூறிச் சாடியது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று, சீன பாதுகாப்பு பிரிவின் 12 ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர். சமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

கடந்த திங்களன்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன. விமானச் சேவைகள் நேற்று வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஹொங்கொங்கில் பொலிஸாரைத் தாக்க ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. ஹொங்கொங்கில் பயங்கரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி இது என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹொங்கொங் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் ஆரம்பமானது.

ஹொங்கொங் அரசு அந்த சட்டமூலத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துவிட்டது. ஆனால், மக்கள் அந்த சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹொங்கொங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இதேவேளை ஹொங்காங் நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள் என்று போராட்டக்காரர்களிடம் ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கில் நடந்த கலவரம் குறித்து அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது “ஹாங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தைப் பள்ளத்தில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கைப் பாதுகாப்பாகவும் மற்றும் சட்டம் ஒழுங்குடன் அமைதியாக வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

 

அமெரிக்கா கோத்தபயாவை வேவு பார்த்ததா?

கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் பல வழிகளில் அமெரிக்கா அவரை வேவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் தனது ஆலோசகரான வழுதி என்றழைக்கப்படும் நபருடன் கோத்தபயாவை சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு போரை முடிவிற்குக் கொண்டுவர வழுதி உதவியதாகவும் தெரியவருகின்றது. இதற்காகவே குறித்த நபர் கோத்தபயாவை சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பதில் ராஜாங்க செயலர் அலைஸ் வெல்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ, கோத்தபயா ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகியது எப்படி?

கோத்தபயா ராஜபக்ஸ, இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டிய என்னும் பிரதேசத்தில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி பிறந்தார். இவரின் தந்தையார் அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்ஸ ஆவார். இவரின் முழுப் பெயர் நந்தசேன கோத்தபயா ராஜபக்ஸ என்பதாகும்.

சிறிலங்கா அரசியலில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோர் இவரின் சகோதரர்களாவர்.

தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் பயின்றார்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தில் கடேற் அதிகாரியாக இணைந்து தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தார். 1972 மே 25ஆம் திகதி இரண்டாவது லெப்டினன்ட் ஆக பதவியுயர்வு பெற்றார்.

ஆரம்பத்தில் சிங்க படைப்பிரிவில் கடமையாற்றிய இவர், 1983இல் கஜபா படைப்பிரிவில் இணைந்து கொண்டார். அவரின் 20 வருட இராணுவ சேவையைப் பாராட்டி சிறிலங்காவின் 3 ஜனாதிபதிகள் அவருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிறேமதாசா, டி.பி விஜேதுங்க ஆகியோரே இவருக்கு விருதுகளை வழங்கினர்.

1990இல் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் முன்னின்று போராடியவர். பின்னர் 1992இல் ஓய்வு பெற்றார். இராணுவ சேவையில் இருந்தபோது, பல படைப்பிரிவுகளிலும் அதிகாரியாக இருந்துள்ளார்.

1992இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் அமெரிக்காவிற்கு சென்று அங்கு குடியேறி, அமெரிக்கப் பிரஜாவுரிமையையும் பெற்றுக் கொண்டார். 2005 ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரனான மகிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியதை அடுத்து அவர் அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவிற்கு வருகை தந்தார்.  இவரை மகிந்த ராஜபக்ஸ, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார்.

இவ்வேளையில் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்திருந்தது. 2006 டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு,  கொள்ளுப்பிட்டியில் கோத்தபயா சென்றிருந்த வாகனத் தொடரணி மீது விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தும், 14பேர் காயங்களுக்கும் உள்ளாகினர். ஆனால் கோத்தபயா உயிர் தப்பியிருந்தார்.

உள்நாட்டு யுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளை கொலை செய்யுமாறு கட்டளையிட்டது, மற்றும் வெள்ளை வானில் மக்களை கடத்திச் செல்வது போன்ற செயல்களில் கோத்தபயா ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது,

கோத்தபயா ராஜபக்ஸ மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இரு  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என கோரி லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அம்சா விக்கிரமதுங்கவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மற்றொரு வழக்கு ஒரு தமிழ் இளைஞரால் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு அறிவித்திருந்தது.

அத்துடன் கோத்தபயாவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் வழக்கொன்று தற்போது கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருந்து வருகின்றது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் சிறிலங்காவில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றொரு சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. இதற்கமைவாக கோத்தபயா தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் பத்திரமொன்றை கடந்த மே மாதம் 3ஆம் திகதி அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜாவுரிமை சேவை திணைக்களத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்நாட்டு முத்திரையுடன் இந்த ஆவணம் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கோத்தபயாவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனவே இவர் சிறிலங்கா தேர்தலில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

நாளை (14.08) தனது பயணத்தை ஆரம்பித்து முதலில் வவுனியா செல்லவுள்ளார். அங்கு பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார். இங்கே இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதார்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமரின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பிரதமரது இந்த விஜயத்தை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையங்கள், அதன் உரிமையாளர்கள், பணிபுரிபவர்களின் தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று முன்தினம் (11.08) சிவில் உடை தரித்த பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன, நெதர்லாந்து துணை தூதுவர் ஈவா வான்வோசம், வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். செல்லும் பிரதமர் நல்லூர் உற்சவத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலக்கு 38 11-08-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 38 11-08-2019

தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
ஆதரவளித்துவரும் நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன?

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே எமது தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்காததுடன், எமது அடையாளத்தையே இல்லாமல் செய்யும் போக்கையே கடைப்பிடிக்கின்றன. கடந்தமுறை நடைபெற்ற ஜனாதிபதித்
தேர்தலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலும் இந்நாட்டில்
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு அந்த வாய்ப்பை கைநழுவச் செய்துவிட்டது. புதிய அரசியல் யாப்பு வரப்போவதாகக் காரணம் காட்டி, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக்கூட கிடைக்காமல் செய்துவிட்டனர்.

அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் நழுவவிட்டு இன்று தங்களது பாரம்பரிய நட்புக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடத் தொடங்கிவிட்டனர். மக்கள் நலனைவிட கட்சியின் நலனே முக்கியமானது என்ற நிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தான் மட்டும் வராமல் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளையும் இணங்க வைத்துள்ளது.

இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருப்பதால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழியேற்படும் என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், மகிந்தவைக் காரணம்காட்டி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கட்சியைவிட்டு வெளிவந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மைத்திரிபால சிறிசேன மகிந்தவுடன் இணைந்தபொழுது அவரைப் பதவிக்குக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு அழுத்தம் கொடுத்து அவரது செயலைத் தடுத்து நிறுத்த திரு.சம்பந்தன் தவறிவிட்டார். பின்னர் நீதிமன்றத்தினூடாக ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிரங்க உறவு வைத்தார்.

இவர்களின் தவறான வழிநடத்தல் தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் விட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பிற்கான வரைபு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது மேலும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன.

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அம்சங்கள் உள்ளடக்கப்படுமா என்பது வேறு விடயம். ஆகவே, தமிழ் மக்களுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை என்பதுடன் தீர்த்துவைத்திருக்கக்கூடிய அன்றாட பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

1981ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது இளைஞர்கள் கேட்டது தமிழீழம் கிடைத்தது மாவட்டம் என்று பெரிய வட்டத்தை சுவர்களில் வரைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள். அதைப் போலவே இன்று கேட்டது சமஷடி கிடைத்தது கம்பெரிலியா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையை கேலிசெய்கின்றனர்.

திருவாளர் சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல தரப்பினரும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துடித்திருந்த வேளையில், தமிழ்த் தேசிய இனம் வரலாறுகாணாத வகையில் வாக்களித்து பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர்.

இந்த அபரிமிதமான அரசியல் சக்தியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து, இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டிருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையிலிருந்து தவறியிருக்கிறது. இதனைச்
சுட்டிக்காட்டியே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்தோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய அனைத்திலும் பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர, இவற்றில் தமிழரசுக் கட்சியே முன்னணி வகித்தது. இந்தப் பெயர்கள் அனைத்திலுமே அது ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே நேரடியாகவும் மறைமுகமாகவும் உறவுகளைப் பேணிவந்துள்ளது. இன்று மீண்டும் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாகவே உறவு வைத்துள்ளது. இவ்வளவிற்கும் அந்த கட்சியின் ஆட்சியிலேயே இன்று வடக்கு-கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வரவு-செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயருக்கும் அது இன்று செயற்படும் விதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை மக்கள் அறிவார்கள் என அவர் தெரிவித்தார்.

நல்லதொரு செய்தி; எபோலோவிற்கு மருந்து

ஆப்பிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’ பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ  ஆராய்ச்சியாளர்களின் ‘எபோலா’ நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை இப்போது காங்கோ ஜனநாயக குடியரசில் ’எபோலா’வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள், ‘எபோலா’ வைரஸ்  வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை  நடுநிலையாக்குகின்றன. இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், ‘எபோலா’ விரைவில் “தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய” நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு , ’எபோலாவு’விற்கு எதிரான போராட்டத்தில் இது “மிகவும் நல்ல செய்தி” என அறிவித்துள்ளது.
ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில் குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால்  விலக்கப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவில் பலருக்கு கத்திக் குத்து

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முகமூடி அணிந்தபடி கத்தியுடன் வந்த நபர், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். சிட்னியில் அதிக வணிகம் நடைபெறும் வர்த்தக மையமாக விளங்கும் சிபிடி பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை.

”சமையலறையில் பயன்படுத்தக்கூடிய நீண்ட கத்தியை வையில் வைத்திருந்த படி அல்லாஹு அக்பர் என்று சத்தமிட்டபடி, என்னை சுடுங்கள் என்று பிடிபட்ட அந்த நபர்  சொல்லிக்கொண்டே ஓடும் காட்சிகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஒளிபரப்பாகின. இந்த சம்பவத்தையடுத்து கிங் ஸ்ட்ரீட் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த 21 வயது நபர் மனநிலை பதியப்பட்டவர் என தெரியவருகிறது.