Home Blog Page 3046

நாஜிக்கள் செய்ததை இன்று மோடி தரப்பினர் செய்கின்றனர் – இம்ரான் கான்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான்,

பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம்.

18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.

ஹிட்லருக்கு இருந்த அகங்காரமும், நரேந்திர மோடியின் அகங்காரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.

இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை. பாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது காஷ்மீருக்கு மோடி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கே ஆதரவு – விக்கினேஸ்வவரன்

தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதங்களைத்தரும் கட்சிக்கும் அதன் வேட்பாளருக்குமே தமது அதரவு-களை வழங்கப்போதவாக வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான திரு சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் நேற்று (14) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை ஆனால் நாம் தேர்தலில் பங்கெடுப்போம். வடக்கு கிழக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவுதல், சிங்களக் குடியேற்றங்களை அமைத்தல் என்பன நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், 120 பேர் வரையில் தற்போதும் சிறையில் உள்ளனர். பல குற்றங்களைச் செய்த கருணா அம்மான் அரசியல்வாதிகளின் முன்னனி வரிசையில் அமர்ந்துள்ளபோது, கைதிகளை விடுவிப்பதில் என்ன பிரச்சனையுள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் இதுவே எமது கோரிக்கைகள்.

நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அதனால் பெறப்படும் சில ஆயிரம் வாக்குகளால் நன்மையில்லை. ஆனால் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் சிந்திக்க வேண்டுமாம் – ரணில் கூறுகிறார்

வடக்கில் உள்ள மக்களை முன்பு ஆட்சி புரிந்த அரசு புறக்கணித்திருந்தது எனவே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் நேற்று (14) கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்த முன்னைய அரசு தமிழ் மக்களை புறக்கணித்திருந்தது. வடபகுதி மக்கள் தமது இறைமையை காப்பாற்ற வேண்டும். வவுனியாவின் அபிவிருத்திக்கு மட்டும் 20.5 பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

இதனிடையே, ரணில் அரசும், முன்பு ஆட்சியில் இருந்த மகிந்தா அரசும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அநீதிகளையே இழைத்து வந்திருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, பௌத்த ஆலயங்களை அத்துமீறி அமைத்தல் போன்றவற்றை இரண்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருவது தமிழ் மக்கள் அறிந்ததே.

நல்லூர் கந்தனை தரிசித்த படைத் தளபதி

இன்றைய தினம் (14.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேநாயக்க வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்கு சென்று விசேட புசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அத்துடன் உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மற்றும் இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  அடுத்து ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை முன்னிட்டும் பாதுகாப்பு பல்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வருகை தரவுள்ளார். இதன் போது யாழ். நல்லூர் கந்தனை தரிசிக்க வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதேயாகும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்போன்று நேற்று மாலை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கல்முனை என்பது 100 வருடங்களுக்கு முன்னரே இருந்து முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நகரம். தமிழ் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உப செயலகத்தை அவர்கள் நினைத்தால் போல தரமுயர்த்த அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள். கல்முனையில் யாருக்கும் எந்தவித விட்டுக்கொடுப்புக்களோ அல்லது அநியாயங்களோ நாங்கள் செய்யப்போவதில்லை. இவர்களின் பொய்யான பரப்புக்களை நாங்கள் நம்ப தேவையும் இல்லை. கல்முனை விவகாரம் பற்றிய முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக என்னிடம் யார் எப்போது வினவினாலும் பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்.

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இரக்கமும்,பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நான் என் மக்களின் உரிமைக்காக போராடும் சண்டைக்காரனாக இருந்து போராடி என்னால் முடிந்த சகல விடயங்களையும் சாதிக்க முயற்சி செய்து வருகிறேன்.

சில நேரங்களில் உரிமை விடயங்களில் எனது சத்தம் உயர்ந்து வந்தால் நான் மஹிந்த அணிக்கு தாவப் போவதாக வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவன் நான். சரியா பிழையா என்பதை ஆராய முன்னர் எமது கட்சியின் தீர்மானத்தை மதிப்பவன் தயவு தாட்சணைகள் பார்த்து எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்

இந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் நடவடிக்கையும் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்று கூறும்.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தால், தமிழர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு பின்வரும் விடயங்களை சொல்லுகிறார்கள், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்:

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக்கிய ராஜ்யவை (ஒற்றை ஆட்சியை ) தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்
2. வடகிழக்கு பிரிவினையை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்
3. புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.
4. 2015 இல் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லீம் சபையை நிறுவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்ப்பது மட்டுமன்றி, எதிர்காலத்திலும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
5. தமிழர்கள் ரணிலினதும் சஜித் பிரேமதாசவினதும் வடகிழக்கில் 1000 விகாரைகளை உருவாக்ககும் திட்டத்தை நிராகரிக்கிறார்கள்
6. நாவற்குழி , வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்
7. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை தமிழர்கள் விரும்புகிறார்கள்
8. சிங்களவர்களுடனான எந்தவொரு பேச்சையும் தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.
9. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சர்வதேச நாடுகளின் உதவிகளை மறுத்ததால், தமிழர்கள் இவர்களை மறுப்பதால், தமிழ் அரசியல் தேவைகளை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈடுபாடு தேவை என்பதை தமிழர்கள் மீண்டும் கூறுகிறார்கள்

வடகிழக்கு அரசியல்வாதிகளின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை அகற்றுவதே தமிழர்களுக்கு மற்ற மற்றும் மிக முக்கியமான நன்மை.

தமிழர்களின் எந்த ஆதரவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியற்றது. அவர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளுடன் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தனர், அவை, கூட்டாட்சி தீர்வு, வடகிழக்கு இணைப்பு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, இராணுவத்தை நிலத்தை திரும்பப் பெறுதல், இலங்கை இராணுவத்தை வடகிழக்கில் இருந்து விடுவித்தல் மற்றும் பல.

எல்லாவற்றிற்கும் பதிலாக, அவர்களின் முக்கியமான விஷயங்கள் தமிழ் எம்.பி.க்களுக்கான அரசாங்க பதவிகள், எதிர்க்கட்சி தலைமை, இப்போது எதிர்க்கட்சித் தலைமை இல்லாமல், சம்பந்தன் கொழும்பில் ஒரு ஆடம்பர கார் மற்றும் பங்களாவைத் தொடர்ந்தார். தமிழர்களுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது எஸ்.டி.எஃப் பாதுகாப்பு தேவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பதன் மூலம், தமிழர்கள் புதிய தலைமைக்கு வழி வகுப்பார்கள்.

சிறிய வித்தியாசங்களை புறக்கணிப்பதன் மூலம் ஒன்றுபட்ட புதிய தலைமை உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். யாராவது ஒற்றுமையை நிராகரித்தால், அவர்கள் ஒரு தேர்தல் சுழற்சிக்காக தமிழ் அரசியலை விட்டு வெளியேற வேண்டும்.

கடவுள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – 1976 இல் தந்தாய் செல்வா

நன்றி,

புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

தமிழினத்தை உலுக்கிய செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை பல்வேறுதாக்குதல்களை மேற்கொண்டு தமிழர்கள் என்ற ஒரே காரணதிற்காக வயது வேறுபாடு இன்றி கொத்து கொத்தாக எமது மக்களை படுகொலை செய்தது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல் ,நவாலிசென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின்    மீதான தாக்குதல், வள்ளிபுனம் செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆகியன எம் மக்களின்மனங்களில் என்றுமே  ஆறாத வலியையும் வடுக்களையும்  ஏற்படுத்தி விட்டன.

சிங்கள பேரின வாதத்தின் கோரப்பசிக்கு “கீபீர்” போர் விமானங்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்14, ஆம் நாள்  செஞ்சோலையில் மாணவிகளை பலி எடுத்துக் கொண்டது.தலைமைத்துவ பயிற்சிக்காக மாணவிகள் ஒன்று கூடியிருந்தனர் .கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு,”Women’s Rehabilitation and Development (CWRD)” நிதி உதவியுடன் இப்பயிற்சி நெறி ஒழுங்கு படுத்தப்பட்ருந்தது.

சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டு துல்லியமாக
மாணவிகள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்செய்தி சர்வதேச  முக்கிய ஊடகங்களில் வெளியாகிய போதிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்நிதியம் மௌனமாகவே இருந்தது என்பதே வேதனையான விடயம்சிறிலங்கா அரசாங்கத்தின்  மிலேச்சத்தனமான இந்த  இனப்படுகொலையை உலகம் உற்று
நோக்காதது எமக்கான சபக்கேடு.

13 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை 14 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள  நிலையில்வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை
விதித்துள்ள புதுக்குடியிருப்பு  சிறிலங்கா காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரைநேற்றைய தினம்  புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.

உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு சிறிலங்கா
காவல் துறையினர் தடை விதித்திருக்கிறார்கள்.

இறுதிப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்  கூட குண்டுத் தாக்குதலில்கொல்லப்பட்ட மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே!தாயகத்திலும் புலத்திலும்
உள்ள மாணவர்களே இது பற்றி சிந்தியுங்கள்! செய்ற்படுங்கள்!மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதனை  உறுதி  எடுத்துக் கொள்ளுங்கள்.!

எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை(செவ்வி) – அமலநாயகி

உயிரை துச்சமென மதித்தே உறவுகளை தேடி வருகின்றோம். எம்மீதான தாக்குதலால் எமது உறவுகளுக்கான போராட்டத்தை தடுத்துவிட முடியாது. ஐ.நா.மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தன்று திட்டமிட்டபடி கிழக்கில் போராட்டம் நடைபெறும். என்னால் எழுந்து நடக்க முடியாது விட்டாலும் நொண்டி நொண்டியாவது நானும் அதில் பங்கேற்பது உறுதி என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி தெரிவித்தார்.

கடந்த ஆறாம் திகதி மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணத்துக் கொண்டிருந்தபோது திட்டமிட்ட முறையில் விபத்துக்குள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி:- உன்னிச்சைப் பகுதியில் நீங்கள் பயணத்துக்கொண்டிருந்தபோது திட்டமிட்டே விபத்து சம்பவிக்கப்பட்டதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?

பதில்:- நான் மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் எனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் எதிர்த்திசையில் உந்துருளியில் மூன்று பேர் வந்தார்கள்.  அவ்வாறு வந்தவர்கள் எம்மை நோக்கி தமது உந்துருளியை வேகமாக செலுத்தினார்கள். திடீரென விரைந்து நாம் பயணித்த வீதியின் மறுபுறத்துக்கு வந்தவர்கள்  எனது உந்துருளி மீது மோதினார்கள். நானும் எனது மகளும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டோம். நாம் கூச்சலிட்டோம். பின்னர் அவர்கள் எம்மை அச்சுறுத்தும் நோக்கத்துடன் பார்த்துவிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்து விட்டார்கள்.

கேள்வி:- உந்துருளில் வந்தர்வகள் யார் என்பதை அறிவீர்களா?

பதில்:- எனக்கு மூவரையும் தெரியாது. ஆனால் உந்துருளியில் வந்தவர்களில் ஒருவர் புளட் அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தரான மோகன் என்பவரின் மைத்துனராவார். ஏனைய இருவர் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் தெரியாது. ஆனால் எம்மை மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கேள்வி:- காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா?

பதில்:- இந்த விபத்துச் சம்பவம் சம்பந்தமாக என்னிடத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் வந்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர் யார் என்று கேட்டபோது காவல்துறையினர் அவர்கள் தொடர்பில் பூரணமான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். கைது செய்யப்பட்டவர் களுவாஞ்சிக்குடி நீதவானின் முன்னால் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏனையவர்களை தேடிவருவதாக கூறினார்கள். ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு என்னை அழைக்கின்றபோது மன்றில் ஆஜரா குமாறு கூறிச்சென்றனர். எனது  உந்துருளி காவல் நிலையத்திலேயே உள்ளது.

கேள்வி:- உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்காக இச்சம்பவம் இடம்பெற்றதென்று கருதுகின்றீர்களா?

பதில்:- என்னால் முழுமையாக அவ்வாறு கூறமுடியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்த எமது  உறவுகளை ஒன்றிணைத்து திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்பதற்கான போராட்டங்களை ஆரம்பித்தபோது சிறீலங்கா புலனாய்வாளர்கள் என்னை படம்பிடித்தார்கள். காணொளி எடுத்தார்கள். நான் செல்லுமிடமெல்லாம் என்னை பின்தொடர்ந்தார்கள். எனது அயலவர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். எனது உறவினர்களிடத்தில் என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகியிருப்பதற்கு அறிவுறுத்துமாறு கோரினார்கள்.

இவற்றையெல்லாம் விடவும் எனக்கு நன்மை அளிப்பவர்கள் போன்று வார்த்தை ஜாலம் காட்டி என்னை ஒதுங்கியிருக்குமாறு கூறினார்கள். மாதாந்தம் எனது செயற்பாடுகள் பற்றி அறிக்கையை உயர்மட்ட புலனாய்வு கோரியிருப்பதாக கூறினார்கள். எனக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து நிதி அனுப்பப்படுவதாக கூறினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சி எமது நியாயமான கோரிக்கையை கைவிடவில்லை. ஒதுங்கி நிற்கவில்லை. எத்தனை அச்சு றுத்தல்கள் ஏற்படுத்தப்படடாலும் நீதிக்கான எமது போராட்டம் எமது உயிருள்ளவரையில் தொடரும்.

கேள்வி:- தற்போது உங்களது நிலைம எவ்வாறு உள்ளது? உங்களுடைய அடுத்தகட்டச் செயற்பாடுகள் என்னவாகவுள்ளன?

பதில்;:- நான் காலில் காயத்துடன் வீட்டில் முடங்கியுள்ளேன். என்னை வீட்டில் முடக்குவதே அவர்களின் திட்டமாக இருக்கின்றதோ என்று ஐயம் கொள் கின்றேன். இந்த திட்டமிட்ட விபத்துச் சம்பவத்திற்காகவாவது நீதி கிடைக்கின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு கிழக்கில் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமி ட்டுள்ளோம். அந்த போராட்டத்தைத் திட்டமிட்டபடி முன்னெடுப்போம். எனது கால் காயம் முன்னேற்றமடையாது விட்டாலும் நொண்டிநொண்டியாவது அந்தப்போராட்டத்தில் பங்கேற்பேன். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் – நவீன் திஸாநாயக்க

13ஆவது திருத்தத்திற்கு அமைவாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சரும், காலம்சென்ற காமினி திஸாநாயக்கவின் புதல்வருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், சிங்கள மக்களிடம் இதுதொடர்பாக தெளிவூட்டி, இலகுவாக இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “80களில் இருந்த நிலைமை தற்போது இல்லை. நாம் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்.

எமக்கு தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைத் தொடர்பாகவும் நன்றாக தெரியும். எனவே, தமிழர்களின் காணிகளை அரசாங்கத்துக்கு சொந்தமாக மாற்றவோ, அதனை அபகரித்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ நாம் எந்தக் காரணம் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது தற்போதைய நிலைமையில் அவசியமாக இருக்கிறது.

அத்தோடு, 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட யோசனையாக இருக்கிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே கருதுகிறேன். இதுதொடர்பாக சிங்கள மக்களுக்கு தெளிவூட்டி, சர்வஜன வாக்கெடுப்புடன் ஒரு தீர்வினை முன்வைக்க முடியும். இதுதொடர்பான நம்பிக்கையும் எமக்குள்ளது” என மேலும் தெரிவித்தார்.

அங்கு கோத்தா என்றால் இங்கு நான் என்பதே சரியானது – பொன்சேகா

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்திருப்பது காலத்தின் தேவையின் அடிப்படையில் பொருத்தமானது என  பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், தன்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால், ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சரத்பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.