தமிழினத்தை உலுக்கிய செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை பல்வேறுதாக்குதல்களை மேற்கொண்டு தமிழர்கள் என்ற ஒரே காரணதிற்காக வயது வேறுபாடு இன்றி கொத்து கொத்தாக எமது மக்களை படுகொலை செய்தது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல் ,நவாலிசென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின்    மீதான தாக்குதல், வள்ளிபுனம் செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல் ஆகியன எம் மக்களின்மனங்களில் என்றுமே  ஆறாத வலியையும் வடுக்களையும்  ஏற்படுத்தி விட்டன.

சிங்கள பேரின வாதத்தின் கோரப்பசிக்கு “கீபீர்” போர் விமானங்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்14, ஆம் நாள்  செஞ்சோலையில் மாணவிகளை பலி எடுத்துக் கொண்டது.தலைமைத்துவ பயிற்சிக்காக மாணவிகள் ஒன்று கூடியிருந்தனர் .கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு,”Women’s Rehabilitation and Development (CWRD)” நிதி உதவியுடன் இப்பயிற்சி நெறி ஒழுங்கு படுத்தப்பட்ருந்தது.

சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டு துல்லியமாக
மாணவிகள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்செய்தி சர்வதேச  முக்கிய ஊடகங்களில் வெளியாகிய போதிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்நிதியம் மௌனமாகவே இருந்தது என்பதே வேதனையான விடயம்சிறிலங்கா அரசாங்கத்தின்  மிலேச்சத்தனமான இந்த  இனப்படுகொலையை உலகம் உற்று
நோக்காதது எமக்கான சபக்கேடு.

13 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை 14 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள  நிலையில்வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை
விதித்துள்ள புதுக்குடியிருப்பு  சிறிலங்கா காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரைநேற்றைய தினம்  புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர்.

உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும் நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு சிறிலங்கா
காவல் துறையினர் தடை விதித்திருக்கிறார்கள்.

இறுதிப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்  கூட குண்டுத் தாக்குதலில்கொல்லப்பட்ட மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே!தாயகத்திலும் புலத்திலும்
உள்ள மாணவர்களே இது பற்றி சிந்தியுங்கள்! செய்ற்படுங்கள்!மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதனை  உறுதி  எடுத்துக் கொள்ளுங்கள்.!