ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

நாளை (14.08) தனது பயணத்தை ஆரம்பித்து முதலில் வவுனியா செல்லவுள்ளார். அங்கு பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார். இங்கே இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதார்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமரின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பிரதமரது இந்த விஜயத்தை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையங்கள், அதன் உரிமையாளர்கள், பணிபுரிபவர்களின் தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று முன்தினம் (11.08) சிவில் உடை தரித்த பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன, நெதர்லாந்து துணை தூதுவர் ஈவா வான்வோசம், வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். செல்லும் பிரதமர் நல்லூர் உற்சவத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.