Home Blog Page 3028

போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்.

திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 18 மணிக்கு
இடம் : Breitscheidtplatz
             Zoo – Berlin

பேர்லின் வாழ்  தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒன்றிணையுமாறு வேண்டுகின்றோம்.

உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது

உலகின் மிகப்பெரிய காடான அமேசன் காடு தீப்பற்றி எரியும் இவ்வேளையில், உலகின் இரண்டாவது பெரிய காடு என அழைக்கப்படும் ஆபிரிக்கக் காடுகளும் (Sub-Saharan Africa) எரிய ஆரம்பித்துள்ளன. உலகின் இரண்டாவது நுரையீரல் என இந்த மழைக்காடுகள் அழைக்கப்படுகின்றன.

கொங்கோ, கெமரூன், அங்கோலா ஆகிய நாடுகளினூடாகப் பரவியிருக்கும் இந்தக் காடுகளினூடே தீயும் வெகு விரைவாகப் பரவி விட்டது. ஒரு மில்லியன் சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தக் காடுகள் அமேசன் காடுகளைப் போலவே கார்பன் டை ஒக்சைட்டை (கரியமலை வாயு) உள்ளெடுத்து ஒட்சிசன் (பிராணவாயு) வாயுவை அதிகளவில் வெளிவிடுகின்றது.

Africa fire 2 உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது3.3 மில்லியன் சதுர கிலோமீற்றர் சதுர பரப்பளவுள்ள இந்தக் காடுகளில் மிகப் பெரியளவில் தீப்பற்றியுள்ளது. காட்டுத்தீ தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல அமெரிக்காவில் விற்கும் பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் பெருகும் என்று நினைத்தார்.

ஆனால் சீனாவோ இதையிட்டு கவலை கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப், 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். இதற்கு சீனாவும் ஈடுகொடுத்து நடந்து கொண்டது.

இரு நாடுகளுக்கிடையான வர்த்தகப் போரில் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகையை டிரம்ப் அண்மையில் நிறுத்தினார்.

அமெரிக்க அதிபர் அணுகுண்டு சோதனை நடத்துவதாக கூறி ஈரானுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கையும் உலகைப் பாதித்துள்ளது.

 

சிறீலங்காவில் நீதியை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் – ஐ.நா மனித உரிமைகள் நிபுணர் குழு எச்சரிக்கை

போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவரை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்தது சிறீலங்கா அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைப்பதுடன், நாட்டின் உறுதித்தன்மைக்கும் ஆபத்தானது. நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (27) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மிகவும் கவலையை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா அரசு முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட ஒருவரை இராணுவ அதிகாரியாக சிறீலங்கா அரச தலைவர் நியமித்துள்ளது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நியமனமானது பல தரப்பட்ட சமூகத்தினரிடம் தவறான தகவல்களை கொண்டு செல்லும் என்பதுடன் மக்கள் அரசு மீது நம்பிகையை இழப்பார்கள். மேலும் இது சிறீலங்காவின் உறுதித்தன்மையையும் சீர்குலைக்கும்.

போரின் போது 58 ஆவது படையணியை வழிநடத்திய சில்வா பெருமளவான மனித உரிமை மீறலகளை மேற்கொண்டிருந்தார். எனவே அவரை 2012 ஆம் ஆண்டு ஐ.நாவின் அமைதிப் படைக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் இருந்து ஐ.நா நீக்கியிருந்தது. ஆனால் அவர் மீதான குற்றங்கள் இன்றுவரை விசாரணை செய்யப்படவில்லை.

ஐ.நாவின் தீர்மானம் 30-1 இல் கூறப்பட்டதை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை. படையினர் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

சிறீலங்கா அரசின் இந்த செயற்பாட்டை 2017 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும். அதற்குத் தேவையான அனைத்துலக நீதி விசாரணைகளை நாம் நாடவேண்டி வரும்.

மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவரை உயர் பதவியில் அமர்த்தும்போது அங்கு மேலும் மனித உரிமை மீறல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. எனவே சிறீலங்கா அரசு போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அது படைத்தரப்பாக இருந்தாலும் இடம்பெறவேண்டும். அதன் மூலம் தான் சிறீலங்கா படையினரை மறுசீரமைக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தகத் திருவிழா

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விருப்பத்தின் பேரில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகத் திருவிழா 2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள், புத்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வை மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். யாழில் முதன்முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

book2 யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாஇக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப் படைப்புக்கள் உட்பட உள்ளுர் மற்றும் இந்தியப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை 30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்றும், இவ்வாறான நிகழ்வுகள் எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.

 

இந்தியா தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை நேற்று (26.08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

FAME  INDIA – 2 திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மையுர் வரை தினசரி நான்கு தடவைகள் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

32 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பேருந்துகள் முழுமையாக குளிர்சாதன வசதியும், தானியங்கிக் கதவுகளும் கொண்டவை. ஜி.பி.எஸ் வசதியும் உள்ளது.

9.3 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் பேருந்து லித்தியம், அயன் மின்கலம் மூலம் இயங்கும். ஒவ்வொரு முறையும் மின்கலம் மாற்றப்பட்டு பேருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கலத்தில் ஒருமுறை மின்சாரம் ஏற்றினால் 40 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 4முறை மின்கலங்களை மாற்றுவதன் மூலம் 200 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்தப் பேருந்தை இயக்க முடியும்.

இந்தப் பேருந்தை தயாரித்த அசோக் லேலான்ட் நிறுவன ஓட்டுனர்களாலேயே இயக்கப்படும்.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் !

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று அணிதிரள தயாராகி வருகின்றனர்.
இந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது.
அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது.
1 – France
Trocadéro (துறோக்கட்றோ)  மனித உரிமைச் சதுக்கத்தில் மாலை 16 மணி முதல் 18:30 மணி வரை2 – Canada
11am to 4 pm : Dundas Square. toronto18h pm to 9h pm
Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5

3 – UK

12h30 pm to 4h pm

North Terrace, Trafalgar Square, Lonodon

4 – Germany

Herzog Christoph Denkmal platz
Stuttgart Stadmitte5 : USA
10h am to 12 amNational Press Club
Floor 13 , Murrow Room, 529 14th NW. Washington Dc 20045

6 :  Australia – Sydney
7 am to 9 am
sydney main railway station
உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Canada வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் !
வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

UK TGTE 1 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் !இந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

 

 

 

 

 

 

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :  http://youarenotforgotten.org/

சிறிலங்காவின் நடப்பது அரசியல் நாடகமே – ரவூப் ஹக்கீம்

சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகம் எனவும், அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள அமைச்சர், அங்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது ஒரு சிறிய கும்பலை கூழிக்கு அமர்த்தி நடத்தப்பட்ட பிர சக்திகளின் ஒரு அரசியல் நாடகமென்றே அந்த சமூகத்தை சேர்ந்த தலைவரென்ற அடிப்டையில் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த விடயம் தொடர்பாக சிறுபான்மை மக்களான தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அந்த பிரச்சினை மீண்டும் உருவாகாமல் இருக்க நாம் தற்போது கூடிய கவனத்தோடும் கரிசனையோடும் இருப்பது மாத்திரமல்ல, அரசாங்க புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு இடமளிக்க மாட்டார்களென்ற நம்பிக்கையும் உள்ளது” என மேலும் தெரிவித்தார்.

அமேசன் காடுகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி; கிளி.பரந்தன் கல்லூரி மாணவர்களின் நன்முயற்சி

உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடுகள் எரிவது தொடர்பில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பற்றியும் காடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று (27)இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் விவசாய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஏ9 வீதி கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியான டிப்போச் சந்திவரை சென்றடைந்தது. பேரணியின் போது கலந்துகொண்டவர்களால் வழிப்புணர் துண்டு பிரசுரங்களும் விநியோகிப்பட்டன.

குறித்த துண்டு பிரசுரத்தில் அமேசன் காடுகளில் 2.5 மில்லியன் பூச்சி இனங்களும், 10000 இற்கு அதிகமான தாவர வகைகளும், 20000 இற்கு அதிகமான பறவைகளும், முலையூட்டிகளும், 3000 அதிகமான நன்னீர் மீன் இனங்களு;மு, 350 சுதேச இனத்தை சேர்ந்த 30 மில்லியன் மக்களும் காட்டில் தங்கி வாழ்கின்றார்கள் அத்தோடு உலகிற்கு 20 வீதமான பிரணவாயுவை அமேசன் காடுகள் வழங்குகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு தற்காலத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது எனவும் இதனால் எதிர்கால சந்ததியினர் பாரிய அளவில் இழப்பைச் சந்திக்கவுள்ளனர் என்றும் விழிப்புணர்வு பேரணியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்

மட்டக்களப்பு சீயோன்தேவாலயத்தில் மனித வெடிகுண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகம துநாசர் முகமது ஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்களை புதைக்கும்படி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட இடமெதையும் நீதிமன்றம்தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சில தரப்புக்கள் இணைந்து கள்வியம்காடு இந்துமயானத்தில் மனிதஎச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. இதையடுத்துபொதுமக்கள்கொந்தளித்துஎதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்தநிலையில், சற்றுமுன்னர்செய்தியாளர்களிடம்பேசியமாநகரசபைமுதல்வர், தம்மிடம்புதைப்பதற்கானஅனுமதியை கோரியபோதிலும்,  நீதிமன்றஉத்தரவு இணைக்கப்படாததால் அந்தகோரிக்கையை நிராகரித்ததாக தெரிவித்தார்.

எனினும், தமதுசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்மனிதஎச்சம் புதைக்கப்பட்டதைதான் இன்றுதான்அறிந்ததாகவும்குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்டத்தை தீர்மானிக்கமுடியும் என்றும்தெரிவித்துள்ளார்.மாநகரசபை ஆளுமைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்துமயாணத்தில் மாநகரசபை முதல்வரின் அனுமதி இன்றி அத்துமீறி இஷ்லாமிய பயங்கரவாதியின் உடல்பாகம் புதைக்கப்பட்டது மாநகரசபையை அவமதிக்கும் செயலாகும்.