அமேசன் காடுகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி; கிளி.பரந்தன் கல்லூரி மாணவர்களின் நன்முயற்சி

உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடுகள் எரிவது தொடர்பில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பற்றியும் காடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று (27)இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் விவசாய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஏ9 வீதி கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியான டிப்போச் சந்திவரை சென்றடைந்தது. பேரணியின் போது கலந்துகொண்டவர்களால் வழிப்புணர் துண்டு பிரசுரங்களும் விநியோகிப்பட்டன.

குறித்த துண்டு பிரசுரத்தில் அமேசன் காடுகளில் 2.5 மில்லியன் பூச்சி இனங்களும், 10000 இற்கு அதிகமான தாவர வகைகளும், 20000 இற்கு அதிகமான பறவைகளும், முலையூட்டிகளும், 3000 அதிகமான நன்னீர் மீன் இனங்களு;மு, 350 சுதேச இனத்தை சேர்ந்த 30 மில்லியன் மக்களும் காட்டில் தங்கி வாழ்கின்றார்கள் அத்தோடு உலகிற்கு 20 வீதமான பிரணவாயுவை அமேசன் காடுகள் வழங்குகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு தற்காலத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது எனவும் இதனால் எதிர்கால சந்ததியினர் பாரிய அளவில் இழப்பைச் சந்திக்கவுள்ளனர் என்றும் விழிப்புணர்வு பேரணியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.