Home Blog Page 3020

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பலவும் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

இதேவேளை எழுக தமிழ் – 2019 எழுச்சிப் பேரணிக்கான பரப்புரைகள் சூறாவளி வேகத்தில்  நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வட மாகாண மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம், மரபுரிமைப் பேரவை, கடற்றொழிலாளர் சம்மேளனம், உள்ளிட்ட பல அமைப்புக்களுடன் பேரணிக் கான பரப்புரைக்குழு சந்திப்புக்களை நடத்தி வருவதுடன், அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Eluga tamils எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்இதேவேளை நேற்று மாலை பத்தி எழுத்தாளர்களுடனான சந்திப்பு தமிழ் மக்கள் பேரவையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

அமேசன் காட்டுத் தீயால் சிறுவர்களுக்குப் பாதிப்பு-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அமேசன் காட்டுத் தீயால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் சேகரிக் கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தை அந் நிலையம் வெளியிட்டது.

மேலும் சுகாதாரப் பிரச்சினைகளால்  ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியது.

சஹ்ரான் குறித்து இலங்கை புலனாய்வு 97 தடவை எச்சரித்ததாம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பலரால் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 2016 ஆம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை, குறித்த 97 அறிக்கைகள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற விசாரணையின்போது, 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் பொறுப் பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சுற்றுலா படகு தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பற்றி எரிந்ததில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்ற 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெற்கு கலிபோர்னியா அருகே சான்டாகுரூஸ்((Santa Cruz)) தீவில் ஆழ்கடல் நீச்சல் செய்வ தற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டி ருந்த அவர்கள் படகு நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் சிக்கி 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 9 பேர் தேடப்பட்டு வருகின்றனர். படகில் இருந்த ஊழியர்கள் 6 பேரில்  5 பேர் கடலில் குதித்து நீச்சல் அடித்து அருகில் இருந்த மீன்பிடி கப்பலில் தஞ்சமடைந்தனர்.

california diving boat fire santa cruz island conception சுற்றுலா படகு தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழப்புஇந்த நிலையில் சாண்டா குரூஸ் தீவுக்கு அருகே லாஸ் ஏஞ்சல்சுக்கு வடமேற்கே 145 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கரையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் கடல்நீரில் மூழ்கிய நிலையில் இருந்த படகில் 5 பேர் உயிரிழந்த நிலை கண்டுபிடிக்கப்பட்டாலும் மோசமானநிலையில் உடல்கள் இருந்ததால் மீட்கப்பட வில்லை. காணாமல் போனவர்கள் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசார ணை நடந்து வருகிறது.

போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் – ஐநா விசாரணையாளர்கள்

யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம் இந்த நாடுகள் யுத்த குற்றங்களிற்கு துணைபோகின்றனர் என ஐநா விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.9079077 போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் - ஐநா விசாரணையாளர்கள்

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியும் ஐக்கிய அரபு இராச்சியமும் யேமனில் பொதுமக்களை விமானதாக்குதல்கள் மூலம் கொலை செய்து வருவதாக தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் கடும் வரட்சியை சந்தித்து வரும் மக்களிற்கு உணவு சென்றடைவதை சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் நகரங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் சிறுவர்களை படையணிகளில் ஈடுபடுத்துகின்றனர் எனவும் ஐநா நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யேமனில் பாரிய வரட்சி சூழ்நிலை காரணமாக உலகின் பாரிய மனிதமாபிமான நெருக்கடி உருவாககூடிய சூழல் எழுந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

யேமன் அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் சவுதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சிய கூட்டணியை சேர்ந்தவர்களும் விமானதாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம்,பட்டினி போடுதலை ஒரு யுத்த தந்திரோபாயமாக பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இது யுத்தத்திற்கு சமனானது எனவும் தெரிவித்துள்ளனர்.10000 போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் - ஐநா விசாரணையாளர்கள்

பிரான்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆயுதவிநியோகம் எவ்வளவு சட்டபூர்வமானது என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

சிங்கள இனப்பெண்ணால் பெருமைகொள்கிறதாம் சிறீலங்கா – கொழும்பு ஊடகம்

சிறீலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிலுசி ரண-வீரா(42) என்பவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றதால் சிறீலங்கா பெருமை கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளன.

சிறீலங்காவின் கம்பக மாவட்டத்தைச் சேர்ந்த நிலுசி கம்பகவில் உள்ள பாட-சாலையில் கல்வி பயின்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றிருந்தார். அதன் பின்னர் மினிசோட்டா பல்கலைக்கழகத்திற்கு கலைப் பிரிவில் கல்வி கற்ற அவர் மைக்கேல் கம்லின் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் உயர்கல்வியை பெற்றிருந்தார்.

அமெரிக்காவில் அரச துறையில் நீதியாளராக பணியாற்றிய அவர் கடந்த மாதம் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.

இதனிடையே, தமிழ் இனத்தைச் சேர்ந்த பலர் உலகின் பல நாடுகளில் உயர் பதவிகளுக்கு வரும்போது அதனை புறக்கணிக்கும் கொழும்பு ஊடகங்கள் சிங்கள இனத்தவரை சிறீலங்காவுக்கு பெருமையாக போற்றி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

”அக்கினிப் பறவைகள்” செய்த்தித்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகிறது

சுவிஸ் இளைய தலைமுறையின் தாயகம் சார் அமைப்பான ‘அக்கினிப்பறவைகள்’ அமைப்பினர் தாயகம் நோக்கிய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது நாமறிந்ததே. இந்த வகையில் அவர்களின் மற்றுமொரு முயற்சியாக மாதாந்த செய்தித்தாள் ஒன்றை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றினையும்
வெளியிட்டுள்ளனர்.

அன்புடையீர் வணக்கம்,

அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆவணப்படுத்தல், ஆய்வுக்கட்டுரைகள், அரசியற் காணொளிகள் போன்ற பல முயற்சிகளில் அடித்தளத்தினை அமைத்துவரும் நாம், ”அக்கினிப் பறவைகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட ஆங்கிலத்திலும் தமிழிலும் மாதாந்தம் வெளிவரவிருக்கும் செய்தித்தாழின் முதலாவது இதழினை உங்கள் கைகளில் தருவதை ஒட்டிப் பெருமிதமடைகின்றோம்.

இப்புதுமுயற்சியில் காலடியெடுத்துவைக்கும் வேளையில் தமிழிறைமையினை என்றென்றும் விட்டுக்கொடுக்காது நிலைநாட்டுவதற்காக உழைக்கும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வெல்வது உறுதி

மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு திருவுருவப் படங்கள் வேண்டப்படுகின்றன

மாவீரர் பெட்டக உருவாக்கம் தொடர்பாக அறிவித்தல் ஒரு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அதன் முழு வடிவம் வருமாறு ,

மாவீரர் பணிமனை
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
31.08.2019.

மாவீரர் விபரத்திரட்டல்

எம் இனிய உறவுகளே!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத மாவீரர்களை தமிழீழத்தாயின் வீரக்குழந்தைகளை என்றும் போற்றி வணங்கிடும் வேளையில். அவர் தம் வீரவரலாற்றைப் பேணிப்பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதும் எம் வரலாற்றுக் கடமையாகும்.

இவ் வரலாற்றுப்பயணத்தில் மாவீரர்களின் வரலாறுகளைத் தொகுத்து நூல்களாக அதனை ஆவணப்படுத்துவதோடு, மாவீரர் பெட்டகங்களாக வெளியிடும் பணியினையும் நாம் செய்துவருகின்றோம். இதன் முதற் தொகுப்பாக தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 27.11.1982-31.12.1995 வரையான காலப்பகுதிக்குரிய மாவீரர்களின் விபரங்களை 2018ஆம் ஆண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியிட்டோம் என்பதை தாங்கள் அறிந்ததே.

எம்மால் உருவாக்கப்படும் மாவீரர் பெட்டகங்களின் உள்ளார்ந்த விபரங்கள் மாவீரர்களின் உண்மையான வரலாறுகளாக அமைய இவை உறுதிப்படுத்தப்பட வேண்டியவைகளாக உள்ளதுடன் அவர்களது திருவுருவப்படங்களையும், விபரங்களையும் முடிந்தளவு திரட்டியும்ää இணைத்தும்வருகின்றோம்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகத்தின் இரண்டாவது தொகுப்பின் முதற்பதிப்பான 01.01.1996 தொடக்கம் 31.12.1998 வரையான 5,296 மாவீரர் விபரங்களில் 69 மாவீரர்களது திருவுருவப்படங்கள் மட்டும் இணைக்கப்பட வேண்டியுள்ளதால் இம் மாவீரர்களது குடும்பங்கள், உறவினர்கள், சக போராளிகள், நண்பர்கள் கீழ்காணும் வழிமுறைகளுக்கமைவாக மிக விரைவாக எமக்கு அனுப்பிவைப்பதுடன் தங்கள் பெயர்விபரத்தையும், தொடர்பாடல் முறையையும் அதில் வெளிப்படுத்தவும். இவ்வாறு பெறப்படும் விபரங்கள் தங்களிடம் மீண்டும் நேரடியாக உறுதிப்படுத்தாமல் எம்மால் இணைக்கமுடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அத்துடன் இவ் வீர வரலாற்றுப் பெரும் பணியை நாம் நேர்த்தியாக செய்வதற்கு 1982 ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையில் வீரகாவியமானவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் என மதிப்பளிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்தவர்களும் என வகைப்படுத்தி இணையத்தளத்தின் ஊடாக விபரங்களைத் திரட்டியவண்ணம் உள்ளோம். இதிலும் தங்களிடம் உள்ள அனைத்து மாவீரர் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.

தொடர்பாடல் வழிமுறைகள் –
1. தொலைபேசி எண் – 0033782900663
2. மின்னஞ்சல் – [email protected]

படங்கள் கிடைக்கப்பெறாத மாவீரர் விபரங்கள்.

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் நிலாந்தினி
இயற்பெயர் – நடராஜா ரஜனி
மாவட்டம் – மட்டக்களப்புவீரச்சாவு – 05.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வாகீசன்
இயற்பெயர் – இராசதுரை காந்தன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் நீலவர்மன்
மாவீரர் பெயர் – மேஜர் சிங்கன் (தமிழன்)
இயற்பெயர் – பெரியதம்பி தயாளன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.07.1996

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் நாவலன்
இயற்பெயர் – தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.08.1996

மாவீரர் பெயர் – மேஜர் உயிரவன் (ஜீவன்)
இயற்பெயர் – தங்கவேல் ஜெகநாதன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 08.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சிவராஜ்
இயற்பெயர் – கோகுலன் அந்தோனி கோகுலராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 29.01.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை இளங்கோவன்
இயற்பெயர் – சண்முகலிங்கம் நவனீதன்
மாவட்டம் – திருகோணமலைவீரச்சாவு – 29.02.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)
இயற்பெயர் – தட்சணாமூர்த்தி சுபாகரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 25.02.1996

மாவீரர் பெயர் – காண்டீபன்
இயற்பெயர் – சண்முகசுந்தரம் காண்டீபன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – சிவகுமார்
இயற்பெயர் – பேரம்பலம் சிவகுமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – சிவதீபன்
இயற்பெயர் – குலசிங்கம் சிவதீபன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி
இயற்பெயர் – கனகசபை பரமேஸ்வரன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 11.05.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை மனோகரன்
இயற்பெயர் – கந்தையா சந்திரபாலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 09.06.1996

மாவீரர் பெயர் – கப்டன் விஸ்ணு (பெரியதம்பி)
இயற்பெயர் – சி. முகிலன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 19.06.1996

மாவீரர் பெயர் – கப்டன் இசையரசு (சு10ரைமணி)
இயற்பெயர் – தர்மலிங்கம் ஜெயகரன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 30.06.1996

இயற்பெயர் – சந்திரன் சேகர்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 14.08.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சிவகீர்த்தி
இயற்பெயர் – தெய்வேந்திரன் ரகுநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 01.09.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை புதுமைப்பித்தன்
இயற்பெயர் – கிருஸ்ணராசா வின்சன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 08.09.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
இயற்பெயர் – மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 22.09.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் பரணி
இயற்பெயர் – கனகரத்தினம் சண்முகநாதன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் சுஜீகரன்
இயற்பெயர் – கிருஸ்ணபிள்ளை ஜெயக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை முருகேஸ் (கமலநாதன்)
இயற்பெயர் – –
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை சிவபாலன்
இயற்பெயர் – கறுவல்தம்பி ஜீவானந்தம்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 13.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை சிவரஞ்சன்
இயற்பெயர் – முத்தையா யோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 02.11.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை கவிராஜ்
இயற்பெயர் – கந்தையா சந்திரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 11.12.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை ரவீந்திரகுமார்
இயற்பெயர் – துரை உதயராசா
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – கப்டன் தென்றல்
இயற்பெயர் – இராமநாதன் ரஞ்சித்குமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 25.05.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை அனிலோஜன்
இயற்பெயர் – மாணிக்கவேல் திவ்யராஜன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை கனகதாசன்
இயற்பெயர் – தங்கத்துரை திருலோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை ஜெயவினுதன்
இயற்பெயர் – தேவராசா சசிதரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை விஜயசாந்தன்
இயற்பெயர் – நல்லதம்பி குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை பரணிராஜ்
இயற்பெயர் – செல்வநாயகம் ராசகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை விஜயராம்
இயற்பெயர் – சண்முகம் சதீசன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 15.02.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன்
இயற்பெயர் – கணேசமூர்த்தி மதனமௌலி
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சதீஸ்குமார் (கபிலன்)
இயற்பெயர் – தாமோதரம்பிள்ளை உதயணன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை சுரையன்
இயற்பெயர் – இராசதுரை சிவகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.02.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை தவனேசன்
இயற்பெயர் – யுவான் மோகனதாஸ்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.06.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை யாழமுதன் (பாட்சா)
இயற்பெயர் – சுப்பிரமணியம் கமலேஸ்வரன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 16.06.1997

மாவீரர் பெயர் – மேஜர் ஜீவன் (திருமாறன்)
இயற்பெயர் – கிளரன்ஸ் கிளமேன்ற்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 27.06.1997

மாவீரர் பெயர் – கப்டன் மேனகன்
இயற்பெயர் – குலவீரசுந்தரம் குலசேகரம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.06.1997

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் வினோதராஜ்
இயற்பெயர் – தெய்வநாதன் மோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.08.1997

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் ரஜிகாந்தன்
இயற்பெயர் – விஸ்வராசா மணிவண்ணன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 08.10.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை பகீரதன்
இயற்பெயர் – பொன்னுத்துரை பகீரதன்
மாவட்டம் – யாழ்ப்பணம்
வீரச்சாவு – 01.11.1997

மாவீரர் பெயர் – மேஜர் சந்திரன்
இயற்பெயர் – கனகநாதன் பிரகாஸ்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 10.11.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வெற்றி (அன்பரசன்)
இயற்பெயர் – குமாரவேல் ஜெயக்குமார்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் செவ்வழகன்
இயற்பெயர் – சீனித்தம்பி யோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வேந்தன்
இயற்பெயர் – திருமாள் வேந்தன்

மாவீரர் பெயர் – வீரவேங்கை சாந்தன்
இயற்பெயர் – இராமலிங்கம் ஜெயசீலன்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை கேடயன்(மறைமகன்)
இயற்பெயர் – யோசப் கோபிநாத்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் புதியவள்
இயற்பெயர் – சுதாசினி பசுபதி
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 24.04.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை புஸ்பன்
இயற்பெயர் – பொன்னையா யோகநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 09.05.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை மனோ
இயற்பெயர் – குமாரசாமி சசிக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வெற்றிவேந்தன்
இயற்பெயர் – முனியாண்டி விஜயராசா
மாவட்டம் – கண்டி
வீரச்சாவு – 20.06.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தனேஸ்
இயற்பெயர் – கிட்டிணன் காந்தன்
மாவட்டம் – வவுனியா
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் தும்பன் (கீர்த்தி)
இயற்பெயர் -யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.08.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை உதயன்
இயற்பெயர் – சிவலிங்கம் தியாகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை சின்னையா
இயற்பெயர் – சுந்தரம் ஜெயசீலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வைத்தி
இயற்பெயர் – செந்தில்வேல் தேசிங்கராசா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 26.09.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் துலாகதன்
இயற்பெயர் – மயில்வாகனம் ரவி
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 27.09.1998
மாவட்டம் – முல்லைத்தீவு

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் ஆனந்தி
இயற்பெயர் – நாகமணி சுமதி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை அமுதநகை

இயற்பெயர் – கமலாதேவி சுந்தரம்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை இயல்அறிவு
இயற்பெயர் – கஜலட்சுமி இராசதுரை
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை ஈழத்தரசி
இயற்பெயர் – சசிகலா இராமசாமி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை செவ்வாணி
இயற்பெயர் – புஸ்பராணி குமாரவேல்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தணிகைமலர்
இயற்பெயர் – தமிழினி வெள்ளிமலை
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை புரட்சிமுகிலன்
இயற்பெயர் – கந்தசாமி அருட்செல்வன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வசீகரி
இயற்பெயர் – காயத்திரி குணரத்தினம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தமிழினியன்
இயற்பெயர் – தங்கராஜா ஜீவராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.10.1998

நன்றி.
மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ, ஸ்காபுறுவில் கென்னடி வீதியில் அமைந்துள்ள மிலிக்கன் சனசமூக நிலையில், ஓகஸ்ற் 30ம் நாளன்று இக்கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன், லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்  சான் சென், கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா, சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க், மனித உரிமையாளர் காஸ் கயூரி, நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினர் உஷா சிறீஸ்கந்தராஜா, – சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை  ஆகியோர் நீதிக்கான குரரை எழுப்பியுள்ளனர்.

பிரமுகர்களின் கருத்துரைகள் :

லிபரல் கட்சிப் கனேடிய பராளுமன்ற உறுப்பினர் சான் சென் :

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்ற விடயத்தில், கனேடிய பராளுமன்ற உறுப்பினர் ஹரி  ஆனந்தசங்கரி அவர்களின் விடாமுயற்சி முக்கியமானது. கனேடிய பராளுமன்றத்தில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களது நீதிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதோடு, தமிழ் மக்களுக்கான எனது தோழமை எப்போதும் இருக்கும்.

முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன் :

கனடாவில், குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருந்தொகையான தமிழர்கள் வாழ்வதால் இங்குள்ள அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு  தமிழர்கள் மீதான இனப்படுகொலையினை மட்டுமல்ல, தமிழர்களின் அரசியற் பிரச்சனைகள் உட்பட முக்கிய விடயங்களை, கனேடிய அரசாங்கத்தின் ஊடாக  வேறு நாடுகளுக்குச் எடுத்துச் சொல்லி சர்வதேச ஆதரவைத் திரட்ட வேண்டும்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி :

சிறிலங்கா அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைச்சபையில் அனைத்துலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதியை சரிவர நிறைவேற்றாத நிலையில்தான், சிறிலங்கா தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த மே 15,2019இல்  அனைத்துக் கட்சிகளும் சிறிலங்கா தொடர்பில் ஒரு  சர்வதேச விசாரனை ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானத்தை ஏநிறைவேற்றியிருந்தன. தமிழர்களுக்கான நீதிக் செயல்முறையில் முக்கியமானதாகும். இனியும் சிறிலங்கா தமதிக்காது கொடுத்த வாக்குறுகளை நிறைவேற்றத் தவறினால் இத்தீர்மானம் எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியாக மாறும்.

கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா :

கனடாவில் தமிழினம். வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையுடன்  செயல்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும், ஒற்றுமையின் மூலம் எமது பலத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்கட்கு உதவி செய்வதற்கு அனைவரும் முன் வருவது நமது கடமைகளில் முக்கியமான ஒன்றாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க் :  

2009ம் ஆண்டுக்கு முன்னர் தான் சிறிலங்கா தூதுவர், முக்கிய அதிகாரிகளை சந்தித்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதித்ததாகவும் , விளங்கப்படுத்தியதாகவும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட சந்திப்புக்கள் இலங்கை விடயத்தில் வெற்றி அளிக்காமல் போனமை காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் கவலையளிக்கும் ஒரு விடயமாகும்.

மனித உரிமைவாதியும் ,எழுத்தாளருமான காஸ் கயூரி :

தென்னாபிரிக்கவில் வெள்ளையர் ஆட்சியில் நடந்த சட்டமீறல்களையும்,காணாமல் ஆக்கப்பட்டோரையும் இவ்வேளை நினைவு கூருகின்றேன். தென்னாப்பிரிக்க இனவெறிக்கொள்கை சிறிலங்கா விவகாரத்திலும் வருகின்றது.

சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை :

 சர்வதேச சட்டத்திற்கு முரணான பல செயல்கள் இலங்கையில் நடந்து விட்டதையும், அவற்றை நாம் சர்வதேச நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்று இலங்கைத் தீவில் இனப்படுகொலை 70 வருடங்களாக நடைபெற்று வருவதனை நிரூபிப்பதன் மூலம் எமக்கான நீதியினை பெற்றுக் கொள்ள முடியும் . அதுவே நாம் நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும்,காணாமல் போனோருக்கும் செய்யும் பெரும் கைமாறாகும்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் செனட்டர் உஷா சிறீஸ்கந்தராஜா :

2009ம் ஆண்டுக்கு பின்னராக ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான செயல்வழிப்பாதையில் நா.க.த அரசாங்கம் இதுவரை பல விடயங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னமும் முன்னெடுத்து வருகின்றது.

Aug 30 Event Ca 3 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்தமிழீழ அரசின் சுதந்திர சாசனத்தை வரைந்தது, ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரத்தில் சிறிலங்காவின் நடப்பாடுகளை கண்காணிக்க, பன்னாட்டு நிபுனர் குழுவினை நியமித்தது இதில் முக்கியமானது. குறிப்பாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துவதற்கான 1.6 மில்லியன் மேற்பட்ட மக்களின் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடாத்தியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு பொறிமுறையாக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை நிறுவி முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு பிரமுகர்களின் கருத்துரைகள் அமைந்திருக்க, முன்னராக சங்கீத பூஷணம் கமலாதேவி சண்முகலிங்கத்தின் மாணவர்களால் தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம் இனிதே  இசைக்கப்பட்டு நிகழ்வு தொடங்கிட சமூக அரசியற் பிரதிநிதி ஈழவேந்தன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.நிறைவாக நன்றியுரையினை நா.தமிழீழ அரசாங்க உறுப்பினர் ஆ .கோபால் அவர்கள் வழங்கினார்.

Aug 30 Event Ca 6 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்Aug 30 Event Ca 4 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

 

இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்துகின்றது சிறீலங்கா

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவுகள் பலப்படுவதை திட்டமிட்டு தடுத்துவரும் சிறீலங்கா அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடனான தனது உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது.

யாழ் பலாலியில் இருந்து மேற்கொள்ளவுள்ள வானூர்தி சேவையில் தமிழகத்தை புறக்கணித்துள்ள சிறீலங்கா அரசு இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது.

சிறீலங்காவின் சிங்கள மக்களுக்கும் ஒரிசா மாநிலத்திற்கும் இடையில் நீண்டகால வரலாற்றுத் தொடர்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம், இந்தியாவுக்கான சிறீலங்கா தூதுவரான ஒஸ்ரின் பெர்னாண்டோவையும் அங்கு அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஒரிசாவுக்கு பயணம் மேற்கொண்ட பெர்னாண்டோ ஒரிசா ஆளுநர் பேராசிரியர் கணேஸ் லால், சுற்றுலாத்துறை அமைச்சர் ஒலிடா லங்குகே மற்றும் கலாச்சார அமைச்சர் ஜோதி பிரகாஸ் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஒரிசாவுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு பலப்படுத்துவது, ஒரிசாவில் பௌத்த மதத்தை பலப்படுத்துவது, அதேசயம் சிங்களப் பகுதிகளில் ராமாயணத்தை கொண்டுவருவது, கொழும்புக்கும் ஒரிசாவுக்குமிடையில் வானூர்தி சேவையை மேற்கொன்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது.