சிங்கள இனப்பெண்ணால் பெருமைகொள்கிறதாம் சிறீலங்கா – கொழும்பு ஊடகம்

சிறீலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிலுசி ரண-வீரா(42) என்பவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றதால் சிறீலங்கா பெருமை கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளன.

சிறீலங்காவின் கம்பக மாவட்டத்தைச் சேர்ந்த நிலுசி கம்பகவில் உள்ள பாட-சாலையில் கல்வி பயின்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றிருந்தார். அதன் பின்னர் மினிசோட்டா பல்கலைக்கழகத்திற்கு கலைப் பிரிவில் கல்வி கற்ற அவர் மைக்கேல் கம்லின் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் உயர்கல்வியை பெற்றிருந்தார்.

அமெரிக்காவில் அரச துறையில் நீதியாளராக பணியாற்றிய அவர் கடந்த மாதம் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.

இதனிடையே, தமிழ் இனத்தைச் சேர்ந்த பலர் உலகின் பல நாடுகளில் உயர் பதவிகளுக்கு வரும்போது அதனை புறக்கணிக்கும் கொழும்பு ஊடகங்கள் சிங்கள இனத்தவரை சிறீலங்காவுக்கு பெருமையாக போற்றி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.