Home Blog Page 3021

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு

பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

சிறிலங்கா அரச கரும மொழிகள், நல்லிணக்க, இந்து சமய விவகார அமைச்சால் அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட், பேராசிரியர் மௌனகுரு உள்ளிட்ட  12 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப் பட்டனர்.

PD00 வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு

 

மாலைதீவில் ரணில்;நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அங்கு  வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

இது தவிர இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய துறைகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.  ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு நேற்றுக் காலை மாலைதீவுக்கு பயணமானது.

மாலே வெலனா விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை அந்நாட்டு வௌியுறவு அமைச்சர் அப்துல்லா சஹீட் வரவேற்றார்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள

பிரதமர்,மாலே வெலனா விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன பவனிமூலம் மாலே ‘ஜனரஜ’ சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பிரதமர் அடங்கலான தூதுக் குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரும் பெருவரவேற்பளித்தார்கள்.

இதனையடுத்து இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு ஜனரஜ சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையும் பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

பின்னர் அந்நாட்டு கலாசார முறைப்படி இலங்கை தூதுக் குழு ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜிர அபேவர்தன,ரவூப் ஹக்கீம்,தயா கமகே,ராஜாங்க அமைச்சர் அனோமா கமகே,பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனிய,பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பையடுத்து நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

விஸா வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்த்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ​அபேவர்தனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் கைச்சாத்திட்டனர். விஸா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதமர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அடுத்து உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உயர்கல்வி மற்றும் நகர திட்டமிடல் ,நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாலைதீவு உயர்கல்வி அமைச்சர் இப்ராஹிம் ஹசனும் கைச்சாத்திட்டனர்.

சமூக பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தொழில்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகள் தோரதெனிய மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

மாலைதீவு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் இன்று நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமைதாங்குவார்.

மாலைதீவு பாராளுமன்றத்திலும் அவர் இன்று உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை

முதன்முறையாக டைட்டானிக் கப்பலைத் தேடிக் கடலில் இறங்கியவர்கள், உடைந்த கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர்.

சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின் போது, அட்லான்டிக் கடலில் 3,800 மீற்றர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.

உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு நல்ல நிலையில் உள்ளது. மற்ற சிறப்பு அமைப்புக்கள் கடலில் சிதைந்து போயுள்ளன.

அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.

ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியைக் கொடுத்ததாக டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார். டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கப்டனின் குளியல் தொட்டி. அது இப்போது காணாமல் போயுள்ளது.

அந்தப் பக்கம் உள்ள கபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகின்றது. அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றது என்று அவர் தெரிவிக்கின்றார். டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

titanic 1 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைவலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பக்ரீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கின்றது. கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீற்றர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கின்றது.

அந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட அந்தப் பயணிகள் கப்பல் 1921 இல் சவுத்தாம்டனில் இருந்து நியுயோர்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில் 1,500இற்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.

மரியானா மர்மக் கடலின் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசுபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீற்றர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருந்தனர்.

இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீற்றர் நீளம், 3.7 மீற்றர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் டி.எஸ்.வி. லிமிட்டிங் பக்டர் என்ற நீர்மூழ்கியில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

titanic 2 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை600 மீற்றர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விடயம். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கிப் பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.

டைட்டானிக் பற்றிய சில தகவல்கள்

  • 1985இல் டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க – பிரெஞ் குழுவினர் கண்டறிந்தனர்.
  • 1986 கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது.
  • 1987 முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1,800 கலைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன
  • 1995 உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கமரூன் பயணம் மேற்கொண்டார். அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
  • 1998 முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்.

அத்துடன் டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.

  • 2005 இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன.
  • 2010 தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன.
  • 2012 உடைந்த கப்பல்கள் தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • 2019 டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணத்தை மேற்கொண்டது.

நீரில் மூழ்கிய பயணங்கள், பின்னர் தயாரிக்கப்படவுள்ள ஆவணப் படத்திற்காக அட்லான்டிக் புரடக்ஸன்ஸ் நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காட்சிகளைப் படம் எடுப்பதுடன், இந்த ஆய்வுப் பயணத்தில் உள்ள விஞ்ஞானிகள், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி தீவிரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.

டைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுப் பயணத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி கிளாரே பிட்ஜ்சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

உடைந்த கப்பலில் நுண்கிருமிகள் உள்ளன. அவை தான் உடைந்த பாகத்தில் உள்ள இரும்பையும் சாப்பிடுகின்றன. அதனால் துருவேற்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன. அது உலோகத்தின் பலவீனமான நிலையாகக் கருதப்படுகின்றது என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகின்றார்.

Titanic3 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைஉடைந்த பாகங்களில் துருவேறிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கள் மிகவும் பலவீனமானவையாக இருப்பதால், ஏதும் இடையூறுகள் ஏற்பட்டால் முற்றிலும் நொறுங்கி சரியக் கூடியவையாக உள்ளன.

அட்லான்டிக் ஆழ்கடலில் வெவ்வேறு வகையான உலோகங்கள் எப்படி அரிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள். டைட்டானிக் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பதை மதிப்பிடுகின்றார்கள்.

உடைந்த கப்பல் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை ஆழத்திற்கு சென்று ஆவணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று கிரீன்விச்சில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளித் கூறுகின்றார்.

டைட்டானிக் பேரழிவிற்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல் தான் என்று அவர் குறிப்பிடுகின்றார். அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகி விட்டார்கள். எனவே நடைந்த பாகங்கள் சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று அவர் கூறுகின்றார்.

இந்தியத் தயாரிப்பு விமானங்கள் ஐரோப்பாவில் பறக்கவுள்ளன

இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநோட்டிக் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநோட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “டோர்னியர் 228” என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநரகம் (DGCA) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த சான்றிதழ் பெற்றதன் மூலம், அந்த விமானத்தை பிராந்திய அளவில் பயணிகள் போக்குவரத்து விமானமாக பயன்படுத்த வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், DGCA அளித்த சான்றிதழை, ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் மூலம், இந்த விமானத்தை ஐரோப்பிய கண்டத்திலும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு இது ஒரு பெரிய வெற்றி என்று  DGCA அமைப்பின் தலைவர் அருண்குமார் கூறியுள்ளார்.

தமிழகம் மாமல்லபுரத்தில் இந்திய, சீனப் பிரதமர்கள் சந்திப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 13ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த உச்சி மாநாட்டின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்திலுள்ள பல்வேறு இடங்களைப் பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான முதல் முறைசாரா உச்சி மாநாடு சென்ற ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்த போது ஹூபே மாகாண அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் என்பது தமிழகத்தின் பெருமை மிக்க மிகப் பழமையான சுற்றுலா மையமாக திகழ்கின்றது. இங்கு இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படும். கற்சிலைகள், கண்காட்சி மையங்கள் என பலவகையான சிறப்பு பொருந்திய சுற்றுலா மையமாக இது அமைந்துள்ளது.

கோத்தபயாவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

அமெரிக்காவில் கோத்தபயா ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி கோத்தபயா ராஜபக்ஷவின் சட்டத்தரணி அசோக டி சில்வா, தாக்கல் செய்த வழக்கு, எதிர்வரும் 16ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மெனுவெல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த பெண் வெளிநாடு ஒன்றில் வாழ்கின்றார். இந்நிலையில் அமெரிக்கா இந்த வழக்குடன் ஒருபோதும் தொடர்புபடவில்லை. இதனால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க அதிகாரம் இல்லை என கோத்தபயாவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்தவின் கொலை கோத்தபயா ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய போது நடந்ததாகவும், இருப்பினும் அதற்கும் கோத்தபயாவிற்கும் தொடர்பு இல்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை தடுப்பவர் மைத்திரியே – மாவை

புதிய அரசியல் அமைப்பை தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.

ஏப்ரல் 21 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது காத்தான்குடியை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான முகமட் ஆஸாத் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் குண்டுத்தாக்குதலை நடாத்திய சூத்திரதாரிய் உடற்பாகங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் விசாரணைகளை தொடர்ந்து குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி புதைக்கப்பட்டதை தொடர்ந்து 27ஆம் திகதி அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.IMG 6527 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அரசசட்டத்தரணி யாதவன் ஊடாக மனுத்தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலத்தினை அங்கிருந்து அகற்றுவதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு அமைய இன்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கும் பகுதிக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்ääபிரதி முதல்வர் க.சத்தியசீலன்ääமண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் கே.வாசுதேவன்ääபிரதேச கிராம சேவையாளர் உட்பட உயர் பொலிஸ் உயர் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.

குறித்த உடற்பாகங்களை புதைப்பற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவுசெய்யும் வரையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்க பணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உடற்பாகங்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மயானத்திற்கு வெளிப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்ääமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்ääமாநகரசபை உறுப்பினர்கள்ääபொதுமக்கள் என ஏராளமானோர் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவேன் – சஜித்

எனது தந்தையரின் வழியில் சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், மாகாணசபைகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வழங்குவேன் என ஐ.தே.கவின் அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

நேற்று (31) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவிலில் மாதிரிக் கிராமம் ஒன்றை திறந்துவைத்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க இன்னும் தெரிவுசெய்யாத போதும் சஜித் பிரேமதாசா அதற்காக போட்டியிட்டு வருகின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

13 ஆவது திருத்தச்சட்டம் மிகவும் குறைவான அதிகாரங்களையே கொண்டுள்ளது. அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணமுடியும்.

தேர்தலின் போது எல்லோரும் இதனை பேசுவதுண்டு ஆனால் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும் அதிகமான தீர்வு என வெளிநாடுகளில் பேசும் அரசியல்வாதிகள் உள்நாட்டில் அதற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர்.

ஆனால் அதனை நான் செய்யமாட்டேன், எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன். நாட்டை பிரிக்காது அதிகாரங்களை பகிர்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலக்கு 41 01-09-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 41 01-09-2019