புதிய அரசியல் அமைப்பை தடுப்பவர் மைத்திரியே – மாவை

புதிய அரசியல் அமைப்பை தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.