Home Blog Page 3018

மக்களின் சனநாயக போராட்டத்திற்கு பணிந்தது கொங் கொங் அரசு

கொங் கொங்கை போராட்டக் களமாக மாற்றிய சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், கொங் கொங்வாசிகளின் போராட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொங்கொங், 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், “ஒரே நாடு-இரு முறைகள்” என்ற அடிப்படையில் கொங் கொங் சிறப்பு நிர்வாக மண்டலமாக சீனாவால் அங்கீகரிக்கப்பட்டது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும், ஆட்சி முறையும், பொருளாதார முறையும் சீனாவிலிருந்து மாறுபட்டதாக தனித்தன் மையுடன் பராமரிக்கப்படுகிறது. இதனால், சீனர்கள் என்பதை விட ஹாங்காங்வாசிகள் என்பது தனி அடையாளமாகவே பேணப்படுகிறது. ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவராக, சீன அரசின் ஆதரவு பெற்ற கேரி லாம் ((Carrie Lam)) என்ற பெண்மணி உள்ளார். இந்நிலையில், கொங் கொங்கில் குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு கொண்டுசென்று விசாரிக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு ஹாங்காங்வாசிகளிடையே கடும் எதிர்ப்பு உருவாகி போராட்டங்கள் வெடித்தன.

போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து சுயேச்சையான விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பது, ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலவரக் காரர்கள் என குறிப்பிடுவதை கைவிடுவது ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்தன. ஆட்சிமன்ற பிரதிநிதிகளையும், தலைமை நிர்வாகியையும் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமைக்கான கோரிக்கையும் போராட்டக்காரர்களாக முன்வைத்தனர். இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த, குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் திரும்பப் பெற்றுள்ளார்.

இருப்பினும் 5 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என போராட்டக்காரர்கள் ஏற்கெனவே கூறியிருப்பதால், போராட்டங்கள் ஓயுமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. போராட்டங்களுக்கு பணிந்து, சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக திரும்பப் பெற்றாலும் மற்ற 4 கோரிக்கைகளை கேரி லாம் ஏற்கவில்லை.

சட்டம்-ஒழுங்கை மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறியுள்ள கேரி லாம், மோதல்களை உரையாடல்களாக மாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங் போராட்டங்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் காரணமாகவும், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி கொண் டாடப்பட இருப்பதால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவுமே சர்ச்சைக்குரிய மசோதா முழுமையாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ்பிஐ

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபே சிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சமர்ப்பித்த பி அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகள் அமெரிக்காவுக்கு பரிசோத னைக்காக அனுப்பப்பட்டு, எவ்பிஐ அதிகாரிகளால் அவற்றின் உள்ளக தரவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா புலனாய்வு முகவர் அமைப் புகளிடம் போதிய வசதிகள் இல்லாததால், மேலதிக விசாரணைகளுக்காக அலைபே சிகள் எவ்பிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா முகவர் அமைப்புகள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு, எவ்பிஐ, மற்றும் இன்னொரு அமெரிக்க புலனாய்வு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவரக அதிகாரிகளும், உதவி வருகின்றனர். எவ்பிஐ அதிகாரிகள் வெடிபொருட்கள், கைரேகை ஆய்வு, மரபணு ஆய்வு, அலைபேசி ஆய்வுகள் போன்ற விசாரணைகளில் நிபுணத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். தாம் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்கும் எவ்பிஐ அதிகாரிகள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட் டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது அவசியம் – அசோக் மேத்தா

  • போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்தியப்படையின் தளபதியாகப் பணியாற்றியவரும், தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித் துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.

“போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு பங்களிப்பு குறித்து தீர்மானிக்கும் உரிமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆனால், 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்பாக அளித்த உறுதிப்பாட்டின் மீது, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்த தீர்மானம் குறித்த முரண்பாடுகளை தீர்ப்பதுடன், சிறுபான்மை தமிழ்மக் களை வென்றெடுப்பது மற்றும் அவர்களுக்கு நீதி வழங்குவது பற்றிய கேள்விக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.காணாமல்போனாருக்கான பணியகம் அமைக்கப்பட்டது உள்ளிட்ட சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம் பெற்றன. ஆனால் அது பின்பற்றப்படுவதாக நான் நினைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

நீடித்த சமாதானத்துக்கு நிலைமாறுகால மற்றும் நல்லிணக்கம் முக்கியமான அம்சமாகும், ஆனால் அதனை அரசாங்கம் தீவிரமாக பின்பற்றுவதை காண முடியவில்லை. சில மேற்கு நாடுகள் இதேபோன்ற கருத்துக்களை வெளிப் படுத்தியிருந்தன, அவை 2011 இல் இருந்து, கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை.

இன்னமும் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. 2015 ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்தால் விசாரணை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலில் இரண்டு ஆண்டுகளும், பின்னர், இரண்டு ஆண்டு கால நீட்டிப்பும் கிடைத்தது. இந்த விசாரணையின் மூலம், உண்மையில் மனித உரிமைகளை மீறியவர்களை நீதிக்கு முன்பாக கொண்டு வருவது, அனைத்துலக சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், சிறிலங்காவுக்கு நல்லது. புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட் டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது மாத்திரமன்றி, புதிய அரசாங்கத்தின் கீழ் எல்லா போர்க்குற்ற விவகாரங்களும் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியைப் பெறுவதற்கு ஒரு முழு அளவிலான செயல்முறை உள்ளது. இது முதலில் தொடங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அந்த செயல்முறை தீவிரமாகவும், நேர்மையுடனும் செயற்படுத்தப்பட  வேண்டும்.
தீவிரவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுக்க நல்லிணக்கம் அவசியமானது. ஆனால் சிறிலங்காவில் நல்லிணக்க செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பம் இல்லாததே அதற்குக் காரணம்.அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியா புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவில் கண் சிகிச்சை வைத்தியசாலை

பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியில் 150 மில்லியன் ரூபாய்கள் செலவில் கண் சிகிச்சை வைத்தியசாலை ஒன்று நிறுவப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர் திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம், வவுனியா மாவட்ட செயலாளர், வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் பி. சத்தியலிங்கம் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் பலரும், சிறீலங்கா காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது – டிசெம்பர் முதல் வாரத்தில் சனாதிபதித் தேர்தல் நடைபெறும். அதனால் அக்டோபரில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதால், பிரதான கட்சிகள் அதற்குத் தயாராக உள்கட்சி மோதல்களும் தீவிரமடைந்திருக்கின்றது. அவை குறித்து இந்த வாரமும் பார்ப்போம்.

வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐ.தே.க.வில் முரண்பாடுகள் தொடரும் நிலையில் 3 அதிரடியான நகர்வுகளை ரணில் மேற்கொண்டிருக்கிறார்.

முதலாவது – சனாதிபதி வேட்பாளர் யார் என்பது அந்த தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்களம் அறிவித்த பின்னரே முடிவு செய்யப்படும் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் யாப்பில் இவ்வாறுதான் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாம். அதாவது, சனாதிபதித் தேர்தல் குறித்த அறிவித்தல் வெளிவந்த பின்னர் செயற்குழு அதனை ஆராய்ந்து – வேட்பாளர் நியமனக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலமாகவே தெரிவு இடம்பெறும் என்பதுதான் கட்சியின் யாப்பு விதி என்கின்றார்கள் இவர்கள். இதனால், சஜித் தரப்பு இப்போது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பது இவர்களுடைய நிலைப்பாடு.

இதனைவிட சஜித்துக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சியின் எம்.பி.க்ர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்னான்டோவை அழைத்த ரணில் இது குறித்து நேரடியாகவே எச்சரித்திருக்கின்றார். சஜித்துக்கு ஆதரவாக பதுளையில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் இவர்தான். இந்த இரு நகர்வுகள் மூலமாக சஜித்துக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை முடிவிற்கு கொண்டு வந்துவிட முடியும் என ரணில் தரப்பு கருதுகிறது.

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே தமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ரணில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற போதிலும், அதற்கு முரணான கருத்து ஒன்றும் அந்தத் தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரை கடந்த வாரம் சந்தித்த ரணில், தன்னுடைய மாலைதீவுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின்னர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருக்கின்றார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு புறப்படும் அவர் வியாழன் கொழும்பு திரும்புவார்.

கட்சியின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உருவாகியிருக்கும் நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு அவர் அறிவித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஸ்கேண்டினவியன் நாடுகளின் தூதுவர்களை இராப்போசன விருந்துபசாரம் ஒன்றுக்கு அழைத்த ரணில், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் சனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது குறித்தும் பேசினார். சஜித் தான்தான் சனாதிபதி வேட்பாளர் என கூறிக் கொண்டிருக்கும் நிலைமையில் வெளிநாட்டு ராஜதந்திரிகளை பிரதமர் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுகிறது.

சஜித்தை விட சர்வதேச ஆதரவு தனக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வது இந்த சந்திப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். சர்வதேச விவகாரங்களைக் கையாளக்கூடிய ஒருவராக சஜித் இல்லை என ரணில் தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில், உத்தியோகப்பற்றற்ற ஒரு சந்திப்பாகவே வெளிநாட்டுத் தூதுவர்களுடனான இந்த சந்திப்பை ரணில் நடத்தினார்.

இருந்தபோதிலும் ரணிலின் இந்த நகர்வுகள் சஜித்தின் போக்கைத் தடுத்து நிறுத்தி விடுமா என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கின்றது. சஜித்துக்கு ஆதரவு தேடி முன்னெடுக்கப்பட்டுவரும் பேரணிகள் தொடரில் மூன்றாவது குருநாகலில் செப்டம்பர் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணிகள் ரணில் தரப்புக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனைவிட சஜித்தை பிரபலப்படுத்துவதற்கான செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஒழுக்க நடவடிக்கை மூலமாகவோ அல்லது, கட்சியின் யாப்பைக் காட்டியோ இதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற நிலையில்தான் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சஜித்தை அழைத்திருந்தார் ரணில்.

இது சஜித்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரணில் எடுத்த மூன்றாவது நகர்வு. அலரி மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த நேரடிப் பேச்சுக்கள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுக்களின் போது, கட்சியின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிப்பிட்டியவில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த சஜித், அலரி மாளிகையில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து உடனடியாகவே தனது நிகழ்வை இடைநிறுத்திக்கொண்டு கொழும்பு புறப்பட்டார். இரவு 9.30 மணி அளவில் அலரி மாளிகையை வந்தடைந்த அவர், ரணிலுடன் 11.00 மணி வரையில் பேசியுள்ளார். .

ராஜித சேனாரட்னவும், ஹர்ஷ டி சில்வாவும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சனாதிபதி வேட்பாளரை எவ்வாறு தெரிவு செய்வது என்பது குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்ததாக ஹர்ஷா தெரிவிக்கின்றார்.  இருவருக்குமிடையில் முரண்பாடுகள் மேலோங்கியிருக்கும் நிலைமையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு சுமூகமான நிலைமை ஒன்றை கட்சியில் ஏற்படுத்துவதற்கு எந்த அளவுக்கு உதவும் என்பதுதான் இன்றுள்ள கேள்வி. ரணில் தன்னுடைய மாலைதீவு விஜயத்தை முடித்துக்கொண்டு வரும்வரை வந்தபின்னர் இந்த நெருக்கடி மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், பத்து நாட்களுக்கு முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கும், தாக்குதல்களை நிறுத்துவதற்கும் இருவரும் இணங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க. நிலைமை இவ்வாறிருக்க பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான தேர்தல் குறித்து இதுவரையில் இணக்கப்பாடு முழுமை அடையவில்லை எனத் தெரிகிறது. சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் பொது ஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு அது தயாராக இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சினை. சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மொட்டுவில் தஞ்சமடைந்து இருக்கின்ற போதிலும் ஒரே அடியாக மொட்டு அணியுடன் இணைந்து கொள்வது சுதந்திரக் கட்சியை அழித்துவிடும் என்பதால் அவ்விடயத்தில் மைத்திரி கொஞ்சம் அவதானமாகவே இருப்பதாக தெரிகின்றது.

கட்சியை அழித்துவிட்ட பெயர் தனக்கு கிடைக்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கின்றார். அதனால்தான் பொதுவான முன்னணி ஒன்றை அமைத்து அதில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என்பதுதான் சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலை. பொது ஜன பெரமுனையும் இதற்குத் தயாராகத்தான் இருக்கிறது. சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் பெரும்பாலும் மொட்டுவில் இணைந்துவிட்டனர். தயாசிறி போன்ற ஒரு சிலர்தான் இன்னும் மைத்திரியுடன் இருக்கின்றார்கள். சந்திரிகா குமாரதுங்கவும் சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருக்கின்றார். சுதந்திரக் கட்சி பலமாக இருந்தால்தான் மகிந்தவுடனோ, ரணிலுடனோ தன்னால் பேரம்பேச முடியும் என மைத்திரி நினைக்கின்றார். அதனால்தான் கட்சி தாவும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை என தயாசிறி அறிவித்திருக்கின்றார்.

அதேவேளையில் மொட்டுவுடன் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து இப்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பேராளர் மாநாடு செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு முன்னர் இந்த பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டுவிடும் என சுதந்திரக் கட்சித் தலைவர்கள் நம்புகின்றார்கள். பேச்சுவார்த்தைகள் இரவு – பகலாக நடைபெறுகின்றன. இரு தரப்பிலும் காணப்படும் நெருக்கடிகளுக்கு அடுத்த வாரத்துக்குள் தீர்வு கிடைத்துவிடும் என அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணிக்க பாக்கிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட பாக்கிஸ்தான் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிற‌கு நவம்பர் மாதத்தில் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க‌ப்படும் என்றும் கூறியுள்ளனர்.  ஆனால் இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யவிப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்‌பப்படுகிறது.

அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும் பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க வீதி அமைக்கப்பட்டது.

அங்கு வழிப்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அதிகாரி ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக சேவை கட்டணம் பெற பாகிஸ்தான் விரும்பியதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழிப்பாடுகளுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்கள் கொண்டு வந்த பைகளில் என்ன இருந்தது – விமல் வீரவன்ச

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் பைகளை சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், சிறிது நேரத்துக்குப் பின்னர், அமெரிக்க தூதரகத்துக்குச் சொந்தமான KL 6586 என்ற இலக்கமுடைய ஜீப் ஒன்று விடுதிக்கு வந்து அந்த பைகளை எடுத்துச் சென்றது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார் .

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முனைந்தனர். அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த பைகள் ஆய்வு செய்யப்படவில்லையா? அவற்றில் சந்தேகத்துக்கிடமான அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களால், ஸ்கானர்களின் மூலம் பைகளைச் சோதனையிட அவர்கள் அனுமதிக்கவில்லையா? என்பதே எமது கேள்வி.

அமெரிக்கர்கள் வழக்கமாக நாட்டிற்கு வருவதால் பைகளில் என்ன கொண்டு வருகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘எண்ணியல் சுவர்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் புதிய எண்ணியல் சுவர் (Digital Wall) ஒன்றை  நிறுவியுள்ளது. எண்ணியல் சுவர் மூலமாக மாணவர்களின் ஈடுபாடு உயர் மட்டத்தில் பிரதிபலிக்கப்படும் என்பதுடன், 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் பயிலலுக்கு கல்வி முறையை மாற்றியமைப்பதாக அமைந்திருக்கும்.

எண்ணியல் சுவர் நூலக சுவர் (Digital Library Wall) என்பது  புத்தகங்கள், அறிக்கைகள், பொட் காஸ்ட்கள் மற்றும் பயிலும் app கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதுடன், இவற்றை தொலைவிலிருந்தும் (remotely) அணுகி பயன்படுத்த முடியும்.

இதனூடாக கல்வி வாய்ப்புகளை அணுகும் வாய்ப்பு மேம்படுத்தப்படும் என்பதுடன், அறிவு பகிர்வு மற்றும் யாழ்ப்பாணத்தில் உயர் தரம் வாய்ந்த ஐக்கிய இராஜ்ஜிய கற்றல் முறைகளை ஊக்குவிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

பல்கலைக்கழக நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சுவரில், உலகை மாற்றியமைத்த புத்தகங்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. IELTS அடங்கலாக பயிலல் app கள் காணப்படுவதுடன், ஆங்கில இலக்கணம் பயில்வதற்கு உதவி, ஜொனி இலக்கண சொல் சவால், IELTS குறிப்புகள் மற்றும் தயார்ப்படுத்தல் உதவிகள், கவிதைப் பகுதி, பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கைகள், வன்முறைக்கு எதிரான தவிர்ப்பு முறைகளை கட்டியெழுப்பல், அடுத்த தலைமுறை, சமாதான அறியாற்றல் வாக்கெடுப்பு, தெற்காசியாவில் ஆங்கிலம் மற்றும் திறன் அபிவிருத்தியின் பங்கு, சமாதானம் மற்றும் அதற்கு அப்பாலும், பொட் காஸ்ட்கள், இணைக்கும் இசை, திரைப்படம் மற்றும் கேமிங், நாம் எழுதுவதற்கான திறவுகோல், இன்றைய காலத்தில் வானொலியொன்றில் பணியாற்றுவதற்கான குறிப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

முக்கியமாக, பிராந்தியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமது திறனை கட்டியெழுப்பிக் கொள்வதற்கான பயிலல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு மையமாக இந்த டிஜிட்டல் நூலக சுவர் அமைந்திருக்கும். பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் கில் கல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில், ´கல்வி என்பது மாற்றங்களை எதிர்கொண்டு வருவதுடன், பிரிட்டிஷ் கவுன்சில் தொடர்ச்சியாக புத்தாக்கமான புதிய தீர்வுகளை அறிமுகம் செய்து, சகல வயதைச் சேர்ந்தவர்களுக்கும் பயிலலை ஈடுபாட்டுடனும், இலகுவில் மனதில் கொள்ளக்கூடிய வகையில் பேணுவதற்கு பங்களிப்பு வழங்கி வருகின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது கல்வியில் பிரதானமாக உள்வாங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களை கவர்ந்து, அவர்களுக்கு இலகுவாக நினைவில் கொள்ளக்கூடிய வகையில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு டிஜிட்டல் சாதனங்களை தமது நடவடிக்கைகளில் உள்வாங்க வேண்டிய தேவையை ஆசிரியர்கள் மற்றும் இதர கல்விப் போதனைகளில் ஈடுபடுவோர் உணர்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் டிஜிட்டல் நூலக சுவரை நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், அறிவு கட்டியெழுப்பல், கலைக்கான அன்பு மற்றும் சமூகத்துக்கான வலுவூட்டல் போன்றவற்றில் பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும் எனவும் கருதுகின்றோம்.´ என்றார்.

மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் என்பது கலை, சமூகம் மற்றும் கல்வி ஆகியவற்றை சிறந்த ஐக்கிய இராஜ்ஜிய பொருளடக்கத்தை டிஜிட்டல் நூலகத்தில் கொண்டுள்ளது. இதனூடாக நூலகமொன்றை அணுக முடியாதவர்களுக்கும் அனுகூலம் பெறக்கூடியதாக இருக்கும். இந்த டிஜிட்டல் சுவர் நிறுவப்பட்டுள்ளமைக்கு இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரதான நூலகங்கள் ஆகியவற்றிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளதுடன், இந்த திட்டத்தில் கைகோர்த்து, தமது வளாகத்தில் நிறுவுவது குறித்தும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில்,
பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகர் திருமதி. அருளானந்தம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி ஆகியோர், பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் கில் கல்டிகொட் அவர்களையும் அவரின் அணியினரையும் வரவேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய விருந்தினர்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், சகல பீடங்களினதும் உதவி நூலகர்கள் மற்றும் மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீள பெறப்பட்டுள்ளது

கடந்த 05 மாதங்களுக்கும் அதிக காலமாக மத்திய ஹொங்கொங்கின் பிரதான செயற்பாட்டு அதிகாரி கெரி லெம் (Carrie Lam) சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமூலத்தை மீளப் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் தொலைக்காட்சியில் விளக்கமளித்த கெரி லெம் (Carrie Lam), பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இந்த சட்டமூலத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்வதாக தெரிவித்தார்.

ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் புரிந்தவர்களுக்கு எதிரான விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள், சீனாவுக்கு நாடு கடத்தப்படுவதை அனுமதிக்கும் சட்டத்தை கெரி லெம்மின் அரசு முன்மொழிந்ததையடுத்து ஹொங்கொங்கில் கடந்த ஜுன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன

ஐதேக வே தமிழருக்கெதிரான இனக்கலவரங்களுக்கு காரணம்;பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் அவர்களே – வாசுதேவ

யார் இனவாதிகள், யார் இன, மத கலவரங்களை கையில் எடுத்தது”  என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார எம்.பிக்கும்  அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட  ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் வாசுதேவ நாணயக்கார ஐக்கிய தேசியக் கடசியின் இனவாதச் செயற்பாடுகளை குறிப்பிட்டுப் பேசினார்,

ஐக்கிய தேசிய கட்சி 1958இலும் அதேபோல் 1983 ஆம் ஆண்டிலும் கலவரங்களை செய்து இனவாத மதவாத குழப்பங்களை ஏற்படுத்தும் தலைவர்களை கொண்ட கட்சி.

இந்த குற்றத்தை எமது பக்கம் சுமத்த முயற்சிப்பதென்றால் அதனை ஆதரங்களுடன் கூற வேண்டும். எமது பக்கம் இனவாதம் பரப்பும் தலைவர்கள் இல்லை. பண்டா -செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன செயற்பட்டதை நீங்கள் மறந்திருக்க முடியும்.

1983 ஆம் ஆண்டு சிறில் மேத்திவ் வீதியில் இறங்கி தமிழ் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ததை நீங்கள் மறந்திருக்க முடியும். இதெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியும். ஆனால் எமக்கு இனவாத மதவாத பிளவுகள் தேவையில்லை.

வேலை செய்யும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். பண்டாரநயாக செல்வநாயகம் உடன்படிக்கையை அன்று எதிர்த்ததே ஐக்கிய தேசிய கட்சி தான் . ஆதரங்களுடன் நாம் கூறுகின்றோம், ஆனால் ஆதாரம் இல்லாத கருத்துக்களை நீங்கள் கூறுகின்றீர்கள் என்றார்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் 83 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை கையில் எடுத்ததும் யார் என்பதை மறந்துவிட வேண்டாம் என சபையில் சாடினார் வாசுதேவ எம்.பி.