யாழ். பல்கலைக்கழகத்தில் ‘எண்ணியல் சுவர்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் புதிய எண்ணியல் சுவர் (Digital Wall) ஒன்றை  நிறுவியுள்ளது. எண்ணியல் சுவர் மூலமாக மாணவர்களின் ஈடுபாடு உயர் மட்டத்தில் பிரதிபலிக்கப்படும் என்பதுடன், 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் பயிலலுக்கு கல்வி முறையை மாற்றியமைப்பதாக அமைந்திருக்கும்.

எண்ணியல் சுவர் நூலக சுவர் (Digital Library Wall) என்பது  புத்தகங்கள், அறிக்கைகள், பொட் காஸ்ட்கள் மற்றும் பயிலும் app கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பதுடன், இவற்றை தொலைவிலிருந்தும் (remotely) அணுகி பயன்படுத்த முடியும்.

இதனூடாக கல்வி வாய்ப்புகளை அணுகும் வாய்ப்பு மேம்படுத்தப்படும் என்பதுடன், அறிவு பகிர்வு மற்றும் யாழ்ப்பாணத்தில் உயர் தரம் வாய்ந்த ஐக்கிய இராஜ்ஜிய கற்றல் முறைகளை ஊக்குவிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

பல்கலைக்கழக நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சுவரில், உலகை மாற்றியமைத்த புத்தகங்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. IELTS அடங்கலாக பயிலல் app கள் காணப்படுவதுடன், ஆங்கில இலக்கணம் பயில்வதற்கு உதவி, ஜொனி இலக்கண சொல் சவால், IELTS குறிப்புகள் மற்றும் தயார்ப்படுத்தல் உதவிகள், கவிதைப் பகுதி, பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கைகள், வன்முறைக்கு எதிரான தவிர்ப்பு முறைகளை கட்டியெழுப்பல், அடுத்த தலைமுறை, சமாதான அறியாற்றல் வாக்கெடுப்பு, தெற்காசியாவில் ஆங்கிலம் மற்றும் திறன் அபிவிருத்தியின் பங்கு, சமாதானம் மற்றும் அதற்கு அப்பாலும், பொட் காஸ்ட்கள், இணைக்கும் இசை, திரைப்படம் மற்றும் கேமிங், நாம் எழுதுவதற்கான திறவுகோல், இன்றைய காலத்தில் வானொலியொன்றில் பணியாற்றுவதற்கான குறிப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

முக்கியமாக, பிராந்தியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமது திறனை கட்டியெழுப்பிக் கொள்வதற்கான பயிலல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு மையமாக இந்த டிஜிட்டல் நூலக சுவர் அமைந்திருக்கும். பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் கில் கல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில், ´கல்வி என்பது மாற்றங்களை எதிர்கொண்டு வருவதுடன், பிரிட்டிஷ் கவுன்சில் தொடர்ச்சியாக புத்தாக்கமான புதிய தீர்வுகளை அறிமுகம் செய்து, சகல வயதைச் சேர்ந்தவர்களுக்கும் பயிலலை ஈடுபாட்டுடனும், இலகுவில் மனதில் கொள்ளக்கூடிய வகையில் பேணுவதற்கு பங்களிப்பு வழங்கி வருகின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது கல்வியில் பிரதானமாக உள்வாங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களை கவர்ந்து, அவர்களுக்கு இலகுவாக நினைவில் கொள்ளக்கூடிய வகையில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு டிஜிட்டல் சாதனங்களை தமது நடவடிக்கைகளில் உள்வாங்க வேண்டிய தேவையை ஆசிரியர்கள் மற்றும் இதர கல்விப் போதனைகளில் ஈடுபடுவோர் உணர்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் டிஜிட்டல் நூலக சுவரை நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், அறிவு கட்டியெழுப்பல், கலைக்கான அன்பு மற்றும் சமூகத்துக்கான வலுவூட்டல் போன்றவற்றில் பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும் எனவும் கருதுகின்றோம்.´ என்றார்.

மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் என்பது கலை, சமூகம் மற்றும் கல்வி ஆகியவற்றை சிறந்த ஐக்கிய இராஜ்ஜிய பொருளடக்கத்தை டிஜிட்டல் நூலகத்தில் கொண்டுள்ளது. இதனூடாக நூலகமொன்றை அணுக முடியாதவர்களுக்கும் அனுகூலம் பெறக்கூடியதாக இருக்கும். இந்த டிஜிட்டல் சுவர் நிறுவப்பட்டுள்ளமைக்கு இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரதான நூலகங்கள் ஆகியவற்றிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளதுடன், இந்த திட்டத்தில் கைகோர்த்து, தமது வளாகத்தில் நிறுவுவது குறித்தும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில்,
பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகர் திருமதி. அருளானந்தம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி ஆகியோர், பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான பணிப்பாளர் கில் கல்டிகொட் அவர்களையும் அவரின் அணியினரையும் வரவேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய விருந்தினர்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், சகல பீடங்களினதும் உதவி நூலகர்கள் மற்றும் மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.