Home Blog Page 3017

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம் பொருளாதாரம் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற முடக்குவாதங்களால் இந்நாட்டு பொருளாதாரம், ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளன என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு கலப்புபட பொருளாதார முறையைப் பின்பற்றுவதோடு ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஏற்றுமதி மூலம் கிடைக்கின்ற அந்நியச் செலாவணி உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டிய அதேவேளை இறக்குமதிக்காகச் செலவு
செய்யப்படுகின்ற செலவீனம் குறைந்த மட்டத்தில் இருந்தால் தான் ஒரு நாட்டில் பொருளாதரம் வளர்ச்சியினை எட்ட முடியும்.

எமது நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற அடைமொழியோடே அழைக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடு என்ற
அடைமொழியை நாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுகளால் நிர்மூலமாக்கப்பட்ட ஜப்பான் நாடு அபிவிருத்தியில் உயர்ந்து நிற்கின்றது.

எமது நாட்டின் ஏற்றுமதியின் அளவு ரீதியான தொகை அதிகரித்தால் மட்டும் போதாது ஏற்றுமதிப் பொருட்கள் தரம் வாய்ந்தததாக அமைய வேண்டும். சர்வதேசப் போட்டிச் சந்தையில் எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நல்ல கேள்வி இருக்க வேண்டும். அதற்காக இப்பொருட்களின் தரத்தினை உய்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

எமது நாடு அரசியற் தவறுகள், பொருளாதாரத் தவறுகள், சமூகத் தவறுகள் போன்றவற்றால் ஆட்சியாளர்களாலும் அடிப்படைவாதிகளாலும் குட்டிச்சுவராக்கப்பட்டிருக்கின்றது. கடன் சுமை கொண்ட நாடாகவும், துண்டுவிழும் தொகை கொண்ட நாடாகவும் எமது நாடு மறைகணிய பெறுமானத்தை காட்டி வருகின்றது. எனவே நாம் பல்வேறு முற்போக்கான செயற்பாடுகளைக் கடைப்பிடித்தாலே ஒழிய எமது நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியாது.

உலகமானது வேட்டை யுகத்தில் இருந்து விவசாய யுகத்தை நோக்கி நகர்ந்து, கைத்தொழில் யுகத்தை நோக்கி முன்னேறி, தற்போது தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப அரசியலாளர்கள், பொருளாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் மாற்றமடைய
வேண்டும். “தக்கன பிழைக்கும் தகாதன அழியும்” என்பது கூர்ப்புத் தத்துவமாகும். எனவே மாற்றத்திற்கு ஏற்ப எமது நாடும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சில பிரதேச செயலகப் பிரிவுகள் கூடுதலான சீர்குலைவுகளை அடைந்துள்ளன. எனவே ஏற்றுமதிகளை ஏற்படுத்தக் கூடிய கைத்தொழிற்சாலைகளை மாகாணங்கள், மாவட்டங்கள், தொகுதிகள், பிரதேசங்கள் தோறும் சாத்தியவள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்கு முற்பட்ட காலத்திலும் யுத்த காலத்திலும் பல கைத்தொழிற்சலைகள் இயங்கியும், இயங்கத் தொடங்கும் நிலையிலும் காணப்பட்டன. வாழைச்சேனை காகித ஆலை, தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, இலுப்படிச்சேனை ஓட்டுத் தொழிற்சாலை, கும்புறுமூலை அரச அச்சகம், போன்றவற்றை இதற்கான
உதாரணங்களாகக் கூறலாம். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட எந்தவொரு தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை. இவை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் எடுத்தியம்பியும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இருக்கின்றன.

ஆனால் பிறண்டிக்ஸ் என்படும் ஆடைத் தொழிற்சாலையொன்று ஆரையம்பதி கோவில்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்தொழிற்சாலையில் நான்காயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும். இத்தெழிற்சாலை மாத்திரம் இந்த மாவட்டத்தில் பொருளாதாரத்தினை
செழுமைப் படுத்துவதற்கு போதுமானதல்ல. எனவே எமது சூழல், வளக் கிடைப்புகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு சூழலைப் பாதிக்காத பல தொழிற்சாலைகளை நிறுவ வேண்டிய தேவை உணரப்படுகின்றது.

அந்த வகையில் காகித ஆலை, அரிசி ஆலைகள், ஓட்டுத் தொழிற்சாலைகள், பாற்பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகள், மீன்பிடிக் கைத்தொழிற்சாலைகள், அரச அச்சகம், போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கக் கூடிய சாத்திய நிலைமைகள் காண்படுகின்றன.

மேலும் எமது விளைபொருட்களுக்கு பெறுமதியினை அதிகரிக்கக்கூடிய விதத்தில் அவற்றை கைத்தொழிலினூடாக உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன. இந்த மாவட்டம் தன்நிறைவுள்ள மாவட்டமாக மாற்றுவதற்கு பல கருத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு ஆலைகளை ஆரம்பிக்க வேண்யுள்ளது.

அனைத்திற்கும் மேலாக எமது நாட்டில் புறையோடிப்போய் இருக்கின்ற தேசியப் பிரச்சினையைத் தீர்க்காமல் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. பன்மை சமூகங்களிடையில் பரஸ்பர புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பவற்றினூடாக அரசியல்வாதிகளால் தேசிய இன்பிரச்சினைக்குரிய நிலையான தீர்வு எட்டப்பட வேண்டும்.
எமது புத்திஜீவிகள் அந்நிய நாட்டின் சேவகர்களாக இல்லாமல் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்றவிதத்தில் இங்குள்ள தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பண்டங்கள் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை விட இங்குள்ள புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை இந்த நாட்டில்
பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புத்திஜீவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள் என்பதை விட அரசியல்வாதிகளின் தப்புகளால் அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர் என்றே கூற வேண்டும்.

இது எமது நாட்டிற்கு ஒரு சாபக் கேடாக உள்ளது. புத்திஜீவிகளை ஏற்றுக் கொள்ளுகின்ற நாடுகள் அபிவிருத்திப் பாதையில் செல்லுகின்றன புத்திஜீவிகளை இழக்கின்ற நாடுகள் அதிருப்திப் பாதையில் செல்லுகின்றன எனவே பெறுமதியான மனித வளத்தை இழக்காமல் இருப்பதற்கு அறிவியல் ரீதியாகச் சிந்தித்து நல்ல பொறிமுறைகளை ஆட்சியாளர்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

அடிப்படைவாதம், பிற்போக்குவாதம், உழுத்துப்போன, வெளுத்துப்போன சிந்தனைகள் பிழைப்புவாதம், சுயநலவாதம் என்பன எமது நாட்டின் தேசிய ஐக்கியத்தையும் பொருளாதாரத்தையும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்களால் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. உண்மையில் இவர்கள்தான் ஆட்சி செய்தார்களா? இவர்களை ஆட்டிப் படைக்கின்ற பிற்போக்குவாத, அடிப்படைவாத மறைகணிய மனப்பாங்குகள் ஆட்சி செய்துள்ளனவா? என்று நாம் சிந்திக்க
வேண்டியுள்ளது. அழகான, அருமையான இந்த நாட்டை அடிப்படைவாதிகள்
அசிங்கப்படுத்தியுள்ளனர். இனவாதம், மதவாதம், சுயநலவாதம், பிழைப்புவாதம் போன்ற முடக்குவாதங்களால் இந்நாட்டு மக்கள் அடக்கப்பட்டு வந்தனர், பொருளாதாரம் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளன.

எனவே ஏற்றுமதி அபிவிருத்திகள் மூலமாக அபிவிருத்தி வரிகள் மூலமாக இந்த நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் மறைகணிய, எதிர்க்கணிய, மனப்பாங்குகள் அடிப்படைவாதிகளின் மனங்களில் இருந்து களையப்பட வேண்டும். பெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம்
நாட்டின் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.

எனவே கடந்தகாலப் படிப்பினைகளை படிப்புகளாக எடுத்துக் கொண்டு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் செழிப்பாக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

உலக கடல் மட்டத்தை உயர்த்தும் மிகப் பெரிய பனிப்பாறை உருகியது

உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீற்றருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறீன்லாந்தின் பெரும்பாலான பனிப்படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவற்றில் உலக கடல் மட்டத்தை உயர்த்தும் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004ஆம் ஆண்டில் இருந்து 100 மீற்றர் வரை உருகிவிட்டதாக டென்மார்க்கைச் சேர்ந்த ஜேசன்பொக்ஸ் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரான தமிழர்களின் பூர்வீகம்

திருகோணமலையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான மூதூரில் இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் எம் மூதாதையர்கள் இரும்பை உருக்கிப் பாவித்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர். மூதூரின் தங்கநகர் பகுதியில் இதற்கான தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆதி மனிதர்களின் இரும்புப் பாவனை தொடர்பாக கிழக்கில் கண்டறியப்பட்ட தொன்மையான சான்று இதுவாகும். கரடுமுரடான குறித்த பகுதியில் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் இரும்புப் பொருட்களும், தீக்குழிகளும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகா குறித்து ஐ.தே.க. வெளியிட்ட செய்தி

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரேரிக்குமாறு கோரி குருநாகலில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இப்படிக் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா என்ன சொல்கின்றார், என்ன செய்கின்றார் என்பது குறித்து கூறமுடியாதுள்ளது. முன்னர் ராஜபக்ஷக்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். இப்போது சஜித்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். அடுத்து யாரைப் பற்றி பேசுவாரோ தெரியாதுள்ளது.

சரத் பொன்சேகா இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டு அரசியல் செய்யாமல் இருந்தால் சிறந்தது என தற்போது தமக்கு தெரியவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபராக கனகேஸ்வரன்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதங்கேணி பிரதேச செயலராக இருந்த திரு கனகசபாபதி கனகேஸ்வரன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்த திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு யாரையும் நிரந்தரமாக நியமிக்காத காரணத்தால், பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஆழ்வாப்பிள்ளை சிறி, மேலதிக பொறுப்பெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை நிர்வாக சேவையின், அதிவிசேட தரத்தில் 78ஆவது இடத்திலிருக்கும் யாழ். மாவட்ட அரச அதிபர் திரு வேதநாயகன், வரும் 2020 மே மாதம் ஓய்வுபெறவுள்ளதால், அடுத்த அரச அதிபருக்கான பெயர் கோரல்கள் வேண்டப்படுகின்றன.

 

 

வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்

‘நல்லாட்சி’ அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது.

ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல படுகொலைகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்திருந்த ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்பதை கடந்த காலங்களில் நடந்த பல விசாரணைகளின் மூலம் ஏற்கனவே கண்டறிந்த அரசாங்கங்கள் அந்த குற்றவாளிகளை இன்றுவரை தண்டிக்கவில்லை.

இதற்கான சாட்சியாக கிழக்குப் பல்கலைகழகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் நடந்த விசாரணை அறிக்கைகளை கூறலாம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்று நடந்தது என்ன?

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேர் குறித்தும் அதன்பின்னர் கைது செய்யப்பட்ட 26 பேர் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்ட “வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்களே இம்மாவட்டத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய கைதிகளை கொண்ட குழுவாகும். இக் கைதுகள் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 மற்றம் 23 திகதிகளில் நடைபெற்றன.

முதலாம் நாள் 158 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டாம் நாள் 16 பேர் சிறையில் வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் என கருதப்பட்ட 158 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இவ்வாணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட 158 பேரில் 92 பேர் காணாமல் போனதை 83 சாட்சிகள் நிறுபித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கைதில் காணாமல் போன 16 பேரில் 10 பேருக்கான சாட்சியங்களும் கொடுக்கப்பட்டன.

சாட்சிகளின் பிரகாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டு யூலை மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 45000 மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவ் அகதிமுகாமானது பேராசிரியர் மனோ சபாரெட்ணம்,டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அந்தக்காலப்பகுதியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஆதரவும் வழங்கப்பட்டது.

1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி காலை 6மணிக்கு கொம்மாதுரை இராணுவமுகாமில் இருந்த இராணுவத்தினர் வேறு சில முகாமில் இருந்த இராணுவத்தினருடன் இ.போ.ச பஸ்வண்டியில் கிழக்குப் பல்கலைக்கழக வளவினுள் நுழைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளைவான் வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் அகதிகள் அனைவரும் மூன்று வௌ;வேறு வரிசையில் நிற்குமாறு வேண்டப்பட்டனர்.

12 லிருந்து 25 வயதுவரையானோர் முதலாவது வரிசையிலும், 26 இல் இருந்து 40 வயதானோர் இரண்டாவது வரிசையிலும்ää 40 வயதிற்கு மேற்பட்டோர் மூன்றாவது வரிசையிலும் நிற்குமாறு வேண்டப்பட்டதுடன் இம் மூன்று வரிசையில் உள்ளவர்களை குறிப்பிட்ட இடம் ஒன்றை கடந்துசெல்லுமாறு வேண்டப்பட்டனர்.

அந்த இடத்தில் முகமூடி அணிந்து இராணுவ உடை அணிந்த ஐந்துபேர் கதிரையில் அமர்ந்திருந்தனர். முகமூடி அணிந்தவர்களுக்குப் பின்னால் ஏழு முஸ்லீம்கள் நின்றுகொண்டிருந்தனர். முகமூடி அணிந்தவர்கள் சைகை காட்டும் வேலையில் வரிசையில் இருந்த மக்கள் வேறொரு பக்கத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கை முடிவுற்றதும் வரிசையில் இருந்து இழுத்தெடுக்கப்பட்ட 158 பேரும் அவர்களது உறவினர்களால் காட்டப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் இராணுவத்தினரால் இழுத்துச்செல்லப்பட்டு இ.போ.ச பஸ்வண்டியில் ஏற்றி கொண்டுசெல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்!

“வடகிழக்கு பகுதிகளில் காணாமல் போனோருக்கான விசாரணை ஆணைக்குழு” வினால் 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையானது கிழக்கப்பல்கலைகழகத்தில் நடந்த கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் என பின்வரும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இக்கைதுகள் ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த இராணுவத்தினரின் உதவிகளுடன் கொம்மாதுறை இராணுவமுகாமினால் செய்யப்பட்டதற்கும் பின்வரும் இராணுவ உத்தியோகத்தர்களே இச்செயலை புரியவைத்தார்கள் என்பதற்கும் சாட்சியம் இருந்தது.

கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த,கப்டன் குணரத்தின, மேஜர் மஜீதும், மேஜர் மொகான் ஆகியோரே கிழக்குப் பல்கலைகழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் சம்பவத்திற்கு காரணமானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கைதுகள் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அதாவது 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி கிழக்குப்பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு வருகைதந்த றெஜி டீ சில்வா தமது பொறுப்பில் எடுத்துச்செல்லப்பட்ட 158 பேரும் குற்றவாளிகள் என்று அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த உத்தியோகத்தர்களிடம் கூறியதற்கு சாட்சிகள் இருந்தது. எனினும் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பதனைக் கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அத்துடன் அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை தருமாறு கேட்டதற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை என்பதற்கும் சாட்சிகள் உண்டு.

சமாதானக் குழுவின் செயற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக்காலப்பகுதியில் செயற்பட்ட சமாதானக் குழு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களை மீட்பதற்கு மிகுந்த பிரயத்தனம் எடுத்திருந்தது.

1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமாதானக் குழுவின் தலைவராகிய தளையசிங்கம் அருணகிரிநாதன் அவர்கள் அப்போதைய விமானப்படைத் தளபதியாக இருந்த ஏ.டபிள்யூ.பெர்ணான்டோ அவர்களின் ஊடாக பாதுகாப்பு படையினருக்கு காரியதர்சியாக இருந்தவரிடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றார்.

அதில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதியன்று கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் இருந்து ஆக 32 பேரே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் 24 மணிநேரத்திற்குள்ளேயே விடுவிக்கப்பட்டனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சாட்சியத்தில் வெளியாகியுள்ளது. அக் கடிதத்தில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 32 பேரின் பெயர்பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் அதில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட எவரும் குறித்த அகதிமுகாமிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ திரும்பவில்லை என்றும் அவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்த்துப்போன உள்ளக நீதிப் பொறிமுறைகள்!

கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உள்நாட்டுப் பொறிமுறைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன்பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரினால் உருவாக்கப்பட்ட பாலகிட்ணன் ஆனைக்குழு உட்பட மனிதவுரிமை இல்லத்தினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான பிரான்சிஸ் சேவியர் அவர்கள் அந்தக்காலப் பகுதியில் சமாதானக்குழுவுடன் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அது விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் பல சாட்சியங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில். சம்பவத்திற்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீதி மன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாக குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக இந்தச் சம்பவம் குறித்து உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துவகையான விசாரணைகளும் நீதிமன்ற செயற்பாடுகளும் பொய்த்துப்போயுள்ளது.

இன்நிலையில் ஏற்கனவே விசாரணைகள் மூலம் உண்மைகளை கண்டறிந்த சம்பவங்கள் குறித்து காணாமல் போனோர் அலுவலகம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்பது எந்தவகையில் நியாயமானது என்பதுடன் அது எந்தவகையில் சாத்தியப்படப்போகின்றது என்ற கேள்விகளும் எழவே செய்கின்றது.

குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை மீண்டும் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் நடாத்துவது என்பது உண்மைகளை கண்டறிய உதவுவதற்கு பதிலாக உண்மைகள் மறைப்பதற்கே உதவும் என்பது இதற்காக உழைத்தவர்களின் வாதமாக உள்ளது.

ஏற்கனவே இதற்கு சாட்சியாக இருந்தவர்கள் பலர் இறந்துபோயுள்ளனர். இதற்கு காரணமானவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தெரியாது இன்நிலையில் இது குறித்து மீண்டும் விசாரணைகளை மேற்கொள்வதொன்பது காலத்தை வீணடித்து உண்மைகளை இல்லாமல் செய்வதற்கு சமனானதாக அமைந்துவிடும்.

எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டு குறித்த சம்பவங்களுக்கான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை வெளியிடவேண்டியது காணாமல்போனோர் அலுவலகத்தின் பணியாக அமையவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்!

கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிற்கு அன்று பொறுப்பாக இருந்தவரும் முன்னாள் பல்கலைகழகத்தின் உபவேந்தராக இருந்தவருமான பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்கள் 26 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து மீண்டும் தனது கருத்தை பதிவுசெய்யும் போது பின்வருமாறு கூறினார்.

இன்று கானாமல் போனோர்கள் பற்றி அரசாங்கம் மிகவும் சிறப்பான முன்னெடுப்போன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை திறந்தது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அவற்றின் செயற்பாடுகள் என்பது எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? என்பதை நாம் விமர்சித்துக்கொண்டே போகலாம் எதுவும் நடக்கலாம் எதுவும் நடக்காது என்று கூட கூறலாம் ஆனால் இது ஒரு முதல் படி என்ன நடக்காது என்று நாம் 28 வருடங்களுக்கு முன்னர் கூறினோமோ அது தற்போது நடந்துள்ளது.

அடுத்து நிலைமாறுகால நீதி அது இன்று ஒரு எடுகோளாக வந்துள்ளது. அவற்றில் நான்கு அம்சங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது உண்மையை கண்டறிதலாகும். எந்தவோரு செயற்பாட்டிற்கும் மிக முக்கியமானது உண்மையை கண்டறிவதாகும். உண்மையை கண்டறிந்ததன் பின் அதனை எதற்கு பாவிக்கின்றோம் என்பது யாருக்கும் வித்தியாசப்படலாம்.

அவை நல்லிணக்கம் தண்டணைவழங்கள்ää மீளநிகழாமைää இழப்பீடுவழங்கள்; என எதற்கும் பாவிக்கலாம் அது பின்னர் நாம் யோசிக்கவேண்டியது. ஆனால் எல்லோருக்கும் விசேடமாக தங்களது உறவினர்களை தொலைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிவதற்கான சட்டரீதியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதன் ஊடாக நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக தேடித்தேடி அலைந்து கஸ்டப்பட்டதற்கான ஒரு பலனை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் என நான் கருதுகின்றேன் என்றார்.

கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அனுமதி மறுப்பது ஏன்?

05.09.2018 கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை அனுஸ்டிப்பதற்கு கிழக்குப்பல்கலைகழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

கடந்த காலங்களில் கூட தாங்கள் வீதியில் உள்ள ஒரு மின்சாரத் தூணில் விளக்கு வைத்தே நினைவு கூர்ந்ததாகவும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு அமைவாக இம்முறையாவது கிழக்குப்பல்கலைகழக வளாகத்திற்குள் காணாமல்போனவர்களுக்கான நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் பல்கலைகழகத்திற்கு வெளியே அதனை அனுஸ்டித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்நிலையில் இதற்கான நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கும் இடம் ஒதுக்கித்தரப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் என பலர் கடந்த பல வருடங்களாக முன்வைத்துவந்த நிலையில் அதனை பல்கலைகழக நிர்வாகம் நிராகரித்தே வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தங்களது உறவினர்களை ஏற்றிச் சென்றதை நேரில் கண்ட சாட்சி என்பதுடன் அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதி முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும் மீண்டு 29 வருடங்களுக்கு பிறகாவது உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும் என்பதோடு அங்கும் இங்குமாக அலைந்து திரியும் இம்மக்கள் ஒரு இடத்தில் கூடி தங்களது உறவுகளை நினைவு கூறுவதற்கு நல்லாட்சி அரசாங்கமும் கிழக்கப்பல்கலைகழக நிர்வாகமும் அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிதர வேண்டு என்பதே அனைவரினது வேண்டுகோளாகவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை செய்யப்பட்டோரின் 29 ஆவது ஆண்டுநினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில்  கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவணஈர்புபேராட்டத்தில் ஈடுபட்டனர் உறவுகள் மற்றும் மாணவர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மொன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

02 கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01 கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் இடைநிறுத்தம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

இந்நிலையில் நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதால், மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அத்தோடு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று நியமனம் வழங்குவதை பிற்போடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட நியமங்களுக்கு மாறான அல்லது தவறான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அவை தொடர்பான விபரங்களை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசாரணைகள் முடியும் வரையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் பிற்போடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறித்த பட்டியலை வடக்கு மாகாண சபையின்இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை அறிய முடியுமெனவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-external-candidates-who-faced-interview-2/

 

மன்னார் முள்ளிக்குளம் காணிகள் கையளிக்கப்படவில்லை- மன்னார் பிரஜைகள் குழு குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் தாயக பிரதேசமான  மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் இருப்பிடங்கள், அவர்களின் காணிகளிலிருந்து படையினர் வெளி யேறுவது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை என்று மன்னார் பிரஜைகள் குழு அதிருப்பதி வெளியிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழு சர்வதேச செய்தித் தளத் தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்திருந்த கடற்படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நீடித்த உண்ணாவிரத போராட்டதில் அவ்வப்போது அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.போராட்டம் உச்ச நிலையை எய்தியிருந்த நிலையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முள்ளிக்குளம் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை அடுத்து முள்ளிக்குளம் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

எனினும் முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று வரை இலங்கைக் கடற் படையினரால் மீள அளிக்கப்படவில்லை. மேலும் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் வீடுகளிலிருந்து கடற்படையினரை வெளியேறுமாறு கோரி பாதிக்கப் பட்ட பொது மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இலங்கை கடற்படையி னருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

சுமார் இரண்டு வருடங்கள் சென்ற நிலையிலும் குறித்த வழக்கு விசாரனைகள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தொடர்ந்தும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பள்ளிமுனை பொது மக்கள் கூறுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, முள்ளிக்குளம், வெள்ளாங்குளம், திருக்கேதீஸ்வரம், பள்ளிமுனை, பேசாலை ஆகிய பகுதிகளில் பொது மக்களு க்கு சொந்தமான காணிகளிலும் அவர்களின் இருப்பிடங்களிலும் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டங்களிலும், பண்ணைகளிலும் இலங் கை கடற்படையினரும், இராணுவத்தினரும் பல வருடங்களாக நிலை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த  சனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின்போது தேர்தல் பிரச் சாரங்களுக்காக மன்னாருக்கு வருகை தந்த இலங்கை சனாதிபதி மைத் தரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிசாட் பதியூதின், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவி ப்பதாக உறுதியளித்திருந்தனர்.

எனினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக பிரஜைகள் குழு கூர்மைச் செய்தித் தளத்திற் குத் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.

உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 ஆயிரத்து 134 தொன் எடை கொண்ட தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

3 ஆயிரத்து 367 தொன் தங்க கையிருப்புடன் ஜெர்மனி 2ம் இடமும், 2 ஆயிரத்து 451 டன் தங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் 3ம் இடத்திலும் உள்ளன.

இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து , ப்பானை அடுத்து இந்தியா 618   தொன் தங்க கையிருப்புடன் 10ம் இடத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை பட்டியலில் இருந்து நீக்கினால் இந்தியா 9ம் இடத்தில் இருக்கும்.

கடந்த  லையில் இந்தியாவின் செய்த தங்கக் கொள்முதல் 13 புள்ளி 1 தொன் ஆகும். இது அதற்கு முந்தைய ஜூன் மாதத்தைக் காட்டிலும் 90 சதவீதமும், 2017 ஆகஸ்ட் முதலான கணக்கீட்டில் மாதத்தின் மிகக் குறைந்த கொள்முதல் என்றும் ஆய்வு மேற்கொண்ட அமைப்பின் இயக்குனர் அலிஸ்டெய்ர் ஹெவிட் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் தங்க கையிருப்பு 357 தொன் ஆகும். கடந்த மார்ச் மாதம் 607 தொன் ஆக இருந்த தங்க கையிருப்பு தற்போது 618 தொன்னாக அதிகரித்துள்ளது. 64 தொன் தங்க கையிருப்புடன் பாகிஸ்தான் 45வது இடம் பிடித்துள்ளது.