Home Blog Page 3016

குண்டுத் தாக்குதல் சந்தேகநபர்களின் ரூ. 600 கோடி சொத்து முடக்கப்படும் – சிறிலங்காவின் காவல்துறை பேச்சாளர்

குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) இந்தச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்திருப்ப தாகவும், அவற்றை உரிய நேரத்தில் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் சிறிலங்காவின் காவல்துறை  பேச்சாளர்  கூறினார்.

13கோடி 40 லட்சம் ரூபா மதிப்புள்ள 41 சந்தேக நபர்களின் 100 இற் கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஏற்கனவே சி.ஐ.டியால் முடக்கப்பட் டன. அதே நேரத்தில் இரண்டு கோடி ரூபா சந்தேக நபர்களின் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 293 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 115 பேர் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர்.

178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படுகிறா ர்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 62 பேரை சி.ஐ.டி, 47 பேரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு, 41 பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, 16 பேரை அம்பாறை காவல்துறை  , மவுண்ட்லவேனியா மற்றும் கொழும்பு தெற்கு பொலிஸில் தலா நான்கு பேர், நுகேகொடாவில் மூன்று மற்றும் கண்டியில் ஒருவர் எனத்தடுத்து வைத்து விசாரிக்கிறது. – என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குண்டுதாரியின் உடற் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதற்கு தடை

மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில் முறையான அனுமதி பெறப்படாது புதைக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத குண்டுதாரியின் உடல் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 22 ஆவது அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் நிதிக்குழு மற்றும் சுகாதாரக் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அமர்வின் விசேட அம்சங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான துரைசிங்கம் மதன் மற்றும் விஜயகுமார் பூபாலராஜா ஆகியோரால் ஒருமித்து கொண்டு வரப்பட்ட “மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில் முறையான அனுமதி பெறப்படாது புதைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத குண்டுதாரியின் உடல் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதை தடை செய்தல்” தொடர்பாக பிரேரணை ஒன்றும் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.DSC 3853 குண்டுதாரியின் உடற் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதற்கு தடை

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இராசலிங்கம் அசோக் அவர்களால் முன்வைக்கப்பட்ட “உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதியின் உடற் பாகங்களை மாநகர சபையின் அனுமதி பெறாது கடந்த 26.08.2019 அன்று மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்” எனும் பிரேரணையானது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இப் பிரேரணைக்கு ஆதரவாக 15 வாக்குகளும்ää எதிராக 09 வாக்குகளும்ää நடுநிலையாக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நாடு விரைவில் பாதாளத்தில் வீழ்ந்து விடும்! மைத்திரிபால சிறிசேன கண்டுபிடிப்பு

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காகச்சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சவாலிலிருந்து நாட்டைக்காப்பதற்கு நாட்டை நேசிக்கும் ஒருகுழுவினாலேயே முடியும் எனவும்அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்சவின் பண்ஹி ந்தக விப்லவய (எழுத்தாணியின் புரட்சி)விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மல்வத்து, அஸ்கிரிய அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங் கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை மற்றும் கலைத்துறைவிருந்தினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த விரிவாக்கம் – தமிழ் மக்கள் பேரவை

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் பேரவையின்   ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

இராணுவ நிலைகளை அதிகரித்தல், அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விரிவாக்கத்தை நிலைநிறுத்த ஏதாவது கிராமங்களில் ஒரு சிங்களவரோ அல்லது பௌத்த விகாரையோ இருப்பின் அதனை தமிழ்ச் சிங்கள கிராமங்கள் என அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஆதிக்கச் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மண் சிதைவுற்றுள்ளதோடு, தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் தமிழ் மண் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

மைத்திரி,ரணில் நாளை யாழ் பயணம்

யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பப் பணி­க­ளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­பட்­டது.

இதே­வேளை, யாழ். மாந­கர சபையின் புதிய மாந­கரக் கட்­ட­டத்­துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியின் கணனியை FBI எடுத்துச் செல்லவில்லை

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி மொஹமட் சஹ்ரான் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும்  மடிக்­க­ண­னியில் இருந்து பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

குறித்த  மடிக் கணினி, அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ. எனப்­படும் மத்­திய விசா­ரணைப் பிரி­வி­னரால் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக  சிலர் தக­வல்­களை பரப்பி வரும் போதும், அந்த மடிக்­கணினி சி.ஐ.டி. பொறுப்­பி­லேயே உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர உறுதி செய்தார்.

 மடிக் கணினி  தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்­ள­தா­கவும், அது சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்­பாய்வு அறையில் விஷேட பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாதி மொஹமட் சஹ்­ரானின் கல்­முனை பகுதி தொடர்­பா­ள­ராக செயற்­பட்ட கல்­முனை சியாம் என அறி­யப்­படும்  சாவுல் ஹமீட் ஹமீஸ் அல்­லது  அபூ ஹசன் என்­ப­வ­ரிடம்  மேற்­கொள்­ளப்­பட்ட தடுப்புக் காவல் விசா­ர­ணை­களில் இருந்து பெறப்­பட்ட தக­வல்கள், தேசிய உள­வுத்­துறை தக­வல்­களை மையப்­ப­டுத்தி சஹ்­ரானின் மடிக்­க­ணினி கடந்த மே 31 ஆம் திக­தி­யன்று மீட்­கப்­பட்­டது.

கடந்த  மே 22 ஆம் திகதி,  தேசிய உளவுத் துறையின் தக­வல்­களை மையப்­ப­டுத்தி அம்­பாறை வலய சிறப்பு  பொலிஸ் குழு கல்­முனை சியாம் எனும் சஹ்­ரானின் பிர­தான தொடர்­பா­ளரைக் கைது செய்­தி­ருந்­தது.  அதன் பின்னர் குறித்த நபரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான தடுப்புக் காவலில் வைத்து  விசா­ர­ணை­களை  பொலிஸார் ஆரம்­பித்­தனர்.

அதன்­படி கடந்த மே 28,29 ஆம் திக­தி­களில்  5,10 இலட்­சங்கள் என்ற ரீதியில் 15 இலட்சம் ரூபா பொலி­ஸாரால் முதலில் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்தே மே 31 ஆம் திகதி  கல்­முனை  சியாமின்  மனை­வியின் வீட்டில் இருந்து மேலும் 35 இலட்சம் ரூபா  கைப்­பற்­றப்­பட்­டது.

கல்­முனை சியா­மிடம்  முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் பயங்­க­ர­வாதி சஹ்ரான் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மடிக்­க­ணனி ஒன்று அக்­க­ரைப்­பற்று – பால­முனை களப்பில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரான மற்­றொரு பயங்­க­ர­வாதி சைனிக்கு சொந்­த­மான  பென் ட்ரைவ் ஒன்றும், வன் தட்­டொன்றும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கல்­முனை சியா­மிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே  மடிக்­க­ணனி தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

சி.ஐ.டி. பயங்கரவாதி சஹ்ரானின் மடிக்கணினி மற்றும் பயங்கரவாதி சைனியின் பென் ரைவ் உள் ளிட்ட வற்றை பொறுப்பேற்று பகுப்பாய்வு செய்து பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமரின் ‘முன்கூட்டிய தேர்தல்’ கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கையை எம்.பிக்கள் நிராகரித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் சட்டமூலத்தை தாக்கல் செய்து, பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை வாக்கெடுப்பு நடந்த போதும் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால் அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்காக கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி பிலிப் லீ, அக்கட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்ததையடுத்து பொரிஸ் ஜோன்சன் பெரும்பான்மையை இழந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஒக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

கோத்தாவின் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை சிதறடிப்பதன் மூலம் கோத்தபாயாவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் பணிகள் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதற்கு ஏதுவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸநாயக்கா நேற்று (05) தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வேட்பாளர் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும் வேட்பாளர் தொடர்பில் நாம் இன்னும் முடிவு செய்யவில்லை.

எமது இந்த நடவடிக்கை பொதுஜன பெரமுனவின் வாக்குக்களை பாதிக்கும் என்பது தொடர்பில் நாம் எதனையும் கூறப்போவதில்லை. ஆனால் இது எமது கட்சி அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்துள்ள முடிவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்குலகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கா சிறீலங்கா சென்று சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொண்ட பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ; 2 நேட்டோ படையினர் உட்பட 10 பேர் பலி , 42 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தலிபானியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலாலி விமான நிலையை தொழில் வாய்ப்பில் வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை

பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் விமான சேவை உத்தியோகபூர்வமாக 16ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த விஜயத்தின் போது ஊடகவியலாளரிடம் உரையாற்றுகையில், இலங்கையில் 4 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார். கட்டுநாயக்க, மாத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களே அவையாகும். இந்த விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.