கோத்தாவின் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை சிதறடிப்பதன் மூலம் கோத்தபாயாவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் பணிகள் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதற்கு ஏதுவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸநாயக்கா நேற்று (05) தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வேட்பாளர் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும் வேட்பாளர் தொடர்பில் நாம் இன்னும் முடிவு செய்யவில்லை.

எமது இந்த நடவடிக்கை பொதுஜன பெரமுனவின் வாக்குக்களை பாதிக்கும் என்பது தொடர்பில் நாம் எதனையும் கூறப்போவதில்லை. ஆனால் இது எமது கட்சி அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்துள்ள முடிவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்குலகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கா சிறீலங்கா சென்று சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொண்ட பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.