பலாலி விமான நிலையை தொழில் வாய்ப்பில் வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை

பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் விமான சேவை உத்தியோகபூர்வமாக 16ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த விஜயத்தின் போது ஊடகவியலாளரிடம் உரையாற்றுகையில், இலங்கையில் 4 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார். கட்டுநாயக்க, மாத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களே அவையாகும். இந்த விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.