Home Blog Page 2773

தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை- சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது பாராளுமன்றத்தின் வேலை. அது நிறைவேற்று அதிகாரத்தின் வேலையல்ல. எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்”என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவி விலகினார்

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.

உடல் நலக்குறைவால் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தமது பதவியை இராஜினாமா செய்வதாக சிசிர மென்டிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி பதவிக்கு நிலவியுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில், சிசிர மென்டிஸ் அண்மையில் வாக்குமூலமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் யமாம் இலங்கைக்கு உதவி

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரவேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளது.

இஸ்ரவேலில் தொழில்பார்க்கும் இலங்கையர்கள், அந்நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு தனது பொலிஸ் பிரிவின் மூலம் உதவி வழங்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

உலகிலுள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இஸ்ரேலின் யமாம் பொலிஸாருக்கு மாத்திரமே பயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த யமாம் பொலிஸார் எந்த இடத்திலிருந்து செயற்படுகின்றார்கள் என்பதை இஸ்ரேல் மக்களே அறியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியொன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவைச் சந்தித்து உரையாடிய முஸ்லீம் தலைவர்கள்

 

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் மஹிந்தவிடம் விளங்கியதாக அறியமுடிறது.

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால்,

பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன 08.06.2019இன்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் என்றை மேற்கொண்டிருந்தார்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் 824ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஜனாதிபதியவர்களை ஏற்கெனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.

ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்ஙவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.

ஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும்.

எங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், உண்மையிலேயே தர்மத்தினைப் போதித்த புத்தருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இந்த அரசும், புத்த தேரர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஒரு முடிவுகட்டுவத்கு அவர்களின் மனம் இடம்கொடுக்கவில்லை.

நாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா, இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதற்காகவா எங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவில்லை.

சர்வதேசமே தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் இங்கு இறக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் இங்கு கூடுதலாக இருக்கின்றோம். ஒரு கணம், ஒரு நிமிடம் எங்களைப்பற்றிச் சிந்தியுங்கள்.

காணாமல் போனவர்களின் நிலை என்ன. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள். பதில் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அந்தப் பதிலின் ஊடாக நாங்கள் நின்மதியாக இறப்பதற்காவது வழிவிடுங்கள் என்று கோருகின்றோம். என்றனர்.

மேலும் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியப் பிரதமரும் தங்களுடைய விடயத்தில் கவனம் செலுத்த வேண்டு்ம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

சுமைகளை அதிகரிக்கும் ‘க்ளியர் பேக்’

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். அதற்காக எடுக்கப்பட்ட பலவிதமான நடவடிக்கைகளில் ‘க்ளியர் பேக்’ எனப்படும் ஊடுருவிப் பார்க்கக் கூடிய பைகளை மாணவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என சில பாடசாலைகளில் கூறியுள்ளார்கள். ஆனால் கல்வியமைச்சு அதனை கட்டாயமாக கொண்டுவர வேண்டும் எனக் கூறவில்லை.

பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்காக பெற்றோரை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது. இந்த நாட்டில் பாரிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட பிள்ளைகள் இந்தளவு அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை என்கின்றனர் பெற்றோர்.

கண்டி போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்க இதுபற்றிக் கூறும் போது, அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியது. முக்கியமாக பாடசாலைகளுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பயப்பட்டார்கள். அதனால் பாடசாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிலொன்று ஊடுருவி பார்க்கக் கூடிய புத்தகப் பைகள். இந்தப் பைகள் பற்றி குறிப்பிடப்பட்டவுடன் சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மேலதிக சுமையாகும். மூன்று, நான்கு பிள்ளைகள் உள்ள வீடுகளில் ஒரே நேரத்தில் பைகள் வாங்க போதியளவு பணம் இல்லாமல் இருக்கலாம். அதேபோல் எல்லாக் குடும்பங்களும் ஒரே மாதிரியான பொருளாதார வசதிகளை கொண்டிருப்பதில்லை. இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஊடுருவி பார்க்கக் கூடிய பைகளை கொண்டு வராத மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளை பாடசாலை கேட்டருகிலேயே விட்டு செல்லவேண்டிய நிலைமை சில பாடசாலைகளில் காணப்பட்டது. இது நகைச்சுவைக்கிடமான செயலாகும். பையில் எதுவும் இல்லை என்றால் ஏன் வெளியே விட்டு செல்ல வேண்டும்.

வெற்றுப் புத்தகப் பைகள் வெடிக்குமா? வெடிகுண்டை பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் புத்தகங்களையும் அதற்காகப் பாவிக்கலாம் அல்லவா? அவ்வாறாயின் புத்தகங்களையும் நுழைவாயிலுக்கு அருகில் விட்டுச் செல்ல வேண்டுமா? அத்துடன் அந்தப் பைகளின் பாவனைக் காலமும் குறைவாகவே உள்ளது. சூரிய கதிர் மற்றும் வேறு சூழல் காரணங்களால் இந்த பைகள் விரைவாக பழுதடைந்து விடும்.

இவ்வாறான நிலைமைகளின் போது பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் இது தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கலந்துரையாடி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் ஒளி ஊடுருவி தெரியக் கூடிய பைகளை கொண்டு சென்றாலும் மேலதிக வகுப்புகளுக்கு அவ்வாறான பைகளை கொண்டு செல்வதில்லை. சில இடங்களில் பாடசாலைக்கு வரும் மாணவர்களை விட அதிக எண்ணிக்கையான மாணவர்கள் தனியார் வகுப்புகளில் இருக்கின்றார்கள். அங்கு ஆபத்து இல்லையென உறுதி கூற முடியுமா?

மோடியின் மூன்று மணிநேர இலங்கை வருகை – மைத்திரி, மஹிந்த ,ரணில் மற்றும் சம்பந்தனுடனும் பேச்சு

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது மூன்று மணித்தி யாலங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாளை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை மாலைதீவு சென்றுவிட்டு , நாளை ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா திரும்பும் வழியில் கொழும்பில் இவ்வாறு தரித்துச் செல்லவிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை வருகின்றார்.இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் -,மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,அரசியல் தீர்வு விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், ஐ.நா. தீர்மானம் மற்றும் இலங்கை – இந்திய விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்திய பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாச வரவேற்கவுள்ளனர்.

தொடர்ந்து இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கு அவருக்கு மதியபோசன விருந்துபசாரம் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் இருவருக்கும் இடையில் இருதரப்பு சந்திப்பும் அங்கு நடைபெறும். அதன்போது அண்மையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனையடுத்து இந்திய தூதரகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடான சந்திப்பும் இரண்டு மணியளவில் இந்திய தூதகரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, மு.கா. தலைவர் , ரவூப் ஹக்கீம் – , மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரையும் இந்திய தூதரகத்திலேயே பிரதமர் மோடி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி செயலகத்திலும் இந்திய தூதகரத்தில் மட்டுமே சந்திப்புக்களை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் மூன்றாவது தடவையாக இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என யாரும் நினைத்துவிடக்கூடாது (காணொளி) – ஹிஸ்புல்லா

காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர் உரையாற்றுகையில் அவர் அவர் இவ்வாறு கூறினார் . அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டில் மடடும் தான் சிறுபான்மையினர், ஆனால் உலக அளவில் நாங்கள் பெரும்பான்மையினர். எம்மை அடக்கி ஒடுக்கி விடலாம் என எவரும் நினைக்கக் கூடாது என்றார் .

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய போர்க் கப்பலை பணியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இக்கப்பல் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் றோகித அபேசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர்க்கப்பலை பணியில் இணைக்கும் ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்வில், சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Gajabahu2 சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க போர்க்கப்பல்அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் பணியாற்றியிருந்த இந்த கப்பலானது 115 மீற்றர் நீளமும், 13 மீற்றர் அகலமும் கொண்டதுடன், மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

22 மாலுமிகளும், 111 கடற்படையினரும் பயணிக்கும் வசதி கொண்ட இந்த கப்பலில் அதி நவீன ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

7 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் சிறிலங்காவை விட்டு வெளியேற உள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று (07) வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு இந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மீதி அனைவரும் அப்பாவிகள்.

தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட, ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோன்று அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது ஜுப்பா ஆடையில் சௌதி அரேபியாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததற்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், கடைகளையும் எரித்தவர்கள், வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை எனவும் அவரது நீண்ட உரையில் மேலும் கூறியுள்ளார்.