சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய போர்க் கப்பலை பணியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இக்கப்பல் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் றோகித அபேசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர்க்கப்பலை பணியில் இணைக்கும் ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்வில், சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Gajabahu2 சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க போர்க்கப்பல்அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் பணியாற்றியிருந்த இந்த கப்பலானது 115 மீற்றர் நீளமும், 13 மீற்றர் அகலமும் கொண்டதுடன், மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

22 மாலுமிகளும், 111 கடற்படையினரும் பயணிக்கும் வசதி கொண்ட இந்த கப்பலில் அதி நவீன ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளன.