சிறீலங்க அரசின் பிரதி அமைச்சர் புத்தியா பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லக்கி ஜெயவர்த்தனா மற்றும் அனோமா கமகே ஆகியோர் சிறீலங்கா அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்களின் வெற்றிடங்களே சிங்கள அமைச்சர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
இன்று (10) காலை இந்த நியமனங்கள் சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
புத்தியா பத்திரனா, வர்த்தக மற்றும் தொழில்துறை மீள்குடியமர்வு பிரதி அமைச்சராகவும், லக்கி ஜெயவர்த்தனா நகர திட்டமிடல், குடிநீர் வினியோகம் மற்றும் கல்வித்துறை பிரதி அமைச்சராகவும், அனோமா கமகே நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி எரிபொருள் வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது எமது நோக்கமும் அல்ல.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களாக சென்றவடைத் தடுப்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறியிருந்தார். இது தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தெளிவுபடுத்தல் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம் அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது. பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய திருமுருகன்
சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றிய அரசே மெரினாவில் “நினைவு தூண்” அமைக்கும் வரை மே17 இயக்கம் தொடர்ந்து போராடும்.
ஏனென்றால் சிங்காரவேலன் ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக வருடா வருடம் நினைவேந்திய இடம் இந்த மெரினா.தந்தை பெரியார் “தமிழ்நாடு தமிழர்க்கே”
என்று முழங்கிய இடம் இந்த மெரினா.
தமிழர் கடலை(மெரினா) மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸதான் எனவும், இதில் கலந்துரையாடல்களுக்கு இடமில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ல.பொ.பெரமுனவுக்கு பலமான வேட்பாளர் ஒருவர் உள்ளது போன்று, நிறைவான வேலைத்திட்டமும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தையும் நிறைவடைந்து, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ ல. பொதுஜன பெரமுன நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தற்போதைய ஜனாதிபதிதான் ஜனாதிபதி வேட்பாளர் எனவும், எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் எனவும் கட்சியின் கருத்தைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடுகளின் உதவி எமக்குத் தேவையில்லை மேலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களையும் திருப்பி எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை எமக்கு ஆதரவான நாடுகளான சீனா ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலைத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்தன தேரர் செவ்வி ஒன்றில் சீறியுள்ளார்.
அரபியர்களின் அரபு எமக்குத் தேவையில்லை அரபியர்களின் செல்வாக்கும் எமக்குத் தேவையில்லை இது சிங்கள பூமி சிங்களவர்கள் மட்டுமே இங்கு வாழ உரிமை உண்டு தமிழர்களாக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் அவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு அவர்கள் வெளியேற வேண்டும் இல்லையேல் பௌத்த சமய விதிப்படி இலங்கையில் வாழ வேண்டும் என்றும் பொங்கினார்.
எதிர்வரும் காலங்களில் இது நூறு வித பௌத்தர்கள் வாழும் பூமியாக மாற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் அதற்காக செயல்படுவதே எங்களது குறிக்கோளாக இருந்து கொண்டு இருக்கின்றது என்றும் ரத்தன தேரர் கருத்துத் தெரிவித்தார்.
முகநூல் வலைத்தளங்களில் அரபு நாடுகள் இல்லாவிட்டால் இலங்கை இல்லை என்று தம்பட்டம் அடிக்கும் அரபிய அடிமைகளே இந்த பௌத்த பூமி அரபியர்களுக்கு என்றைக்கும் அடிமையாக இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு அரபுநாடு தேவை என்றால் நீங்கள் தாராளமாக வெளிச் செல்லலாம் என்று அத்துரலிய ரத்தன தேரர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும் மக்களை பாதுகாக்க தவறிய அரசாங்கம், தொடர்ந்து பதவியில் இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும்.
அதேபோன்று உரிய காலத்தில் நடத்த வேண்டிய தேர்தலையும் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பிற்போட்டு வருகின்றது.
மேலும் வாழ்க்கை செலவு, நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு மக்களுக்கு தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வரும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென நாடாளுமன்றத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை மேலும் வலுவடைய செய்வதற்காகவே குறித்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா அதிகாரிகளுக்கு, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அதிகாரிகள் வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த இந்தியர்களின் தொலைபேசி அழைப்பு விபரங்களை வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள இந்திய புலனாய்வுப் பிரிவினர், ஐந்து சிறிலங்கா பிரஜைகள் இந்தியாவில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் தொடர்பை பேணி வருகின்றமையை கண்டு பிடித்துள்ளனர். இத்தகவல்களை சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
தற்போதைய அரசியல் குழப்ப நிலையை கருத்திற் கொண்டு சிறீலங்காவில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சாதகமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
குறித்த தீர்மானத்தை பாராளுமன்றில் நிறைவேற்றுவதென்றால், அனைத்துக் கட்சியும் ஒரே தீர்மானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.06) 11மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு போயிங் 737 என்ற விமானத்தில் 59 பேர் அடங்கிய குழுவினருடன் வந்து சேர்ந்தார். இதைத் தவிர இன்னுமோர் விமானமும் பாதுகாப்புக் கருதி இவர்களுடன் வந்து சேர்ந்தது. இந்த விமானம் தொடர்பாக குழப்பம் அடைந்து பின்னர் அது ஆய்வு செய்யப்பட்ட போது மோடியின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானம் என அறியப்பட்டது. வந்த குழுவினர் 59 பேரில் 16பேர் இரண்டு விமானங்களின் விமானப் பணியாளர்களாவர்.
இவர்களை வரவேற்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சென்றிருந்தனர். மோடியின் வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில இடம்பெறவுள்ளது. கடும் மழையின் மத்தியில் மோடி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
மோடியின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் 11.00 மணிமுதல் 12.00 மணிவரையிலும், 1.45 முதல் 3.30 வரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா – கொழும்பு அதிவேக பாதையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் வந்தடைந்த மோடி, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியர் தேவாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இங்கேயே ஏப்ரல் 21இல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற இடமென்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியப் பிரதமர் மோடியை அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டது. ஆனாலும் அதையும் மீறி மோடி அங்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது மோடிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
தேவாலயத்திற்கு சென்ற மோடி அங்கு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நிகழ்வுகளைக் காட்டும் புகைப்படங்களை பார்வையிட்டார்.
இதன் பின்னர் காலிமுகத்திடலில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இசை வாத்தியங்கள் முழங்க சிங்கள பாரம்பரிய கண்டி நடனத்துடன் பெரும் மரியாதை செலுத்தப்பட்டது. கொட்டும் மழையிலும் குடைபிடித்து மைத்திரி அவரை வரவேற்றார். அங்கு மரநடுகை, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த 10 நாட்களில் தான் இரண்டாவது தடவையாக மைத்திரியை சந்திப்பதாக மோடி தெரிவித்திருந்தார். பயங்கரவாதம் என்பது ஒரு அச்சுறுத்தலாகும். ஒற்றுமையாகவும், ஒருமித்த நிலைப்பாட்டுடனும் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என மோடி மைத்திரிக்குக் கூறினார். பாதுகாப்பான இலங்கைக்கும், வளமான எதிர்காலத்திற்கும் இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.
இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு நன்றி தெரிவித்த மைத்திரி, இலங்கை தொடர்பாக உங்கள் மதிப்பையும், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தான் மிகவும் பாராட்டுவதாகவும், நீங்கள் எங்கள் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் என்றும் கூறினார்.
மோடிக்கு சிறிலங்கா பிரதமர் மைத்திரி ஓர் புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். சமாதி நிலையிலுள்ள வெண்தேக்கு மரத்தினாலான இந்த சிலையை செதுக்க 2 ஆண்டுகள் பிடித்ததாக அறிய முடிகின்றது.
இதனை பெற்றுக் கொண்ட மோடி, ஒரு சிறப்பு நண்பரிடமிருந்து கிடைத்த சிறப்புப் பரிசு இது எனக் கூறியதுடன், இந்த பரிசினால் தான் நெகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
பின்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8 நிமிட சந்திப்பொன்றை இந்த தூதரகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பிரதமர் மோடி பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இது பற்றி முன்னரும் தன்னுடன் பேசியிருக்கின்றீர்கள் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்தியாவிற்கு வந்து விரிவான கலந்துரையாடலில் பங்குபற்றி விரிவாக ஆராயும்படி தெரிவித்தார். அவர்களுக்கான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு தூதரக அதிகாரிகளிடம் மோடி தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தில் சிறியரக விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்துமாறு கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டமையையடுத்து, இது குறித்து கவனமெடுக்கும்படி தூதரக அதிகாரிகளிடம் மோடி கூறினார்.
இதனையடுத்து தூதரகத்தின் வெளியே இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய பின் மோடி சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் மோடியை வரவேற்றது முதல் மீண்டும் விமானம் ஏறும் வரை சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் கூட சென்றார். மோடிக்கும் ரணிலுக்குமான பேச்சுக்கள் அப்போது நடந்தன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சந்திப்பின் தொடக்கத்தில், மோடியின் இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி.
முன்னதாக திட்டமிட்டதை விட குறைவான நேரமே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற மஹிந்தவுடனான சந்திப்பு சற்று நேரம் அதிகமாக இடம்பெற்றதால், இந்த சந்திப்பு சுமார் 7 அல்லது 8 நிமிடங்கள் அளவிலேயே இடம்பெற்றது.
சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களிற்கு எதிராகவே அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது.
இந்த கோரிக்கையை மிக கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்த மோடி, “இது பற்றி என்னிடம் ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறீர்கள்“ என குறிப்பிட்டதுடன் இந்தியாவுக்கு வருமாறும் அதுபற்றி விரிவாக பேசலாமென்றும் குறிப்பிட்ட மோடி, கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடமும் குறிப்பிட்டார்.
பின்னர், பலாலி விமான நிலையத்தை பற்றியும் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். முதலில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் என கேட்டுக் கொண்டனர். இதை செவிமடுத்த மோடி, இதில் கவனம் செலுத்தும்படி தூதரக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.