பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வாளர்கள் சிறிலங்காவிற்கு வழங்கினர்

ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா அதிகாரிகளுக்கு, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அதிகாரிகள் வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்   தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த இந்தியர்களின் தொலைபேசி அழைப்பு விபரங்களை வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள இந்திய புலனாய்வுப் பிரிவினர், ஐந்து சிறிலங்கா பிரஜைகள் இந்தியாவில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் தொடர்பை பேணி வருகின்றமையை கண்டு பிடித்துள்ளனர். இத்தகவல்களை சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.