சிறீலங்காவில் பொதுத்தேர்தல்?

தற்போதைய அரசியல் குழப்ப நிலையை கருத்திற் கொண்டு சிறீலங்காவில்  பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர்  மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சாதகமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை.  அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

குறித்த தீர்மானத்தை பாராளுமன்றில் நிறைவேற்றுவதென்றால், அனைத்துக் கட்சியும் ஒரே தீர்மானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.