நிறுத்தச் சொல்கிறார் மைத்திரி முடியாதென்கிறார் சபாநாயகர்

பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது எமது நோக்கமும் அல்ல.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களாக சென்றவடைத் தடுப்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறியிருந்தார். இது தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தெளிவுபடுத்தல் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.