Home Blog Page 2750

ஜி -20 மாநாடு ஒரு பார்வை

இம்முறை ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் ஜி-20 மாநாடு நடந்தது. இந்த ஜி- 20 மாநாடு என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற ஜி 8 நாடுகளும், ஆர்ஜென்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஸ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகள் சேர்ந்து மொத்தம் 20 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

உலகின் உயர்ந்த தரத்திலிருக்கும் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G 20. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜி 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் மொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கு சமனானதாக இருக்கும்.  உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவீத மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு டிசம்பர் மாதத்தில் ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து ஜி 20 சந்திப்புக்களை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் ஜி 20இல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக்கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். உதாரணமாக எல்லா ஜி 20 மாநாட்டிலும் ஸ்பெயின் அழைக்கப்படுவதை சொல்லலாம்.

முதல் ஜி 20 மாநாடு ஜேர்மனியின் பெர்லின் நகரில் 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜி 20 மாநாடு ஒரு ஜி 8 நாடுகளின் விரிவாக்கம் என்றுகூட சொல்லலாம் உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் உயர் பொருளாதாரம் கொண்டு நாடுகளான சீனா, இந்தியா பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த ஜி 20 மாநாடு.

தொடக்கத்தில் இந்த ஜி 20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் தான் சந்தித்தார்கள். ஆனால் 2008 பொருளாதார சரிவுக்குப் பின் ஜி 20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைத்து பெரிய தலக் கட்டுகளும் சேர்ந்து சந்திக்கத் தொடங்கினார்கள்.

எல்லா ஜி 20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விடயங்களைப் பேசுவார்களாம். அதோடு உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் கேட்பார்களாம். இந்த ஆண்டில் தீப்பற்றி எரியும் வர்த்தகப் போர், காலநிலை மாற்றங்கள், ஈரானுடனான உறவு போன்றவைகள் விவாதிக்கும் முக்கிய விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக உலகப் பொருளாதாரமும் முக்கிய விடயமாக இருக்கும்.

2009ஆம் ஆண்டு ஜி 20 மாநாட்டில், ஐந்து லட்சம் கோடி டொலரை பணத்தை உலக பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப் போவதாக ஒரு பெரிய முடிவு எடுத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலகப் பொருளாதாரம் 2008 சரிவில் இருந்து மீண்டு வந்தது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இதில் இல்லை என்பது தான் வருத்தம். வெறும் 20 உறுப்பினர்கள் என்பதால் முடிவுகள் கொஞ்சம் வேகமாக எடுக்க முடியும். அவ்வளவுதான். இந்த ஜி 20 கூட்டத்தில் வழக்கமாக ஐ.நாவில் வழங்குவது போல வாக்களிக்கும் உரிமை எல்லாம் கிடையாது. அதேபோல ஜி 20 போடும் ஒப்பந்தங்களும் சட்டப்படி பெரிதாக செல்லுபடியாகாது. ஆனால் இந்த ஜி 20 மாநாட்டை ஒட்டி பெரிய போராட்டங்கள் எல்லாம் நடக்கும். 2009இல் லண்டனில் நடந்த ஜி 20 மாநாட்டில் செய்தித் தாள் வியாபாரி கொல்லப்பட்டார். அவருக்காக ஆர்ஜென்டீனாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

 

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு தேவாலயத்தை புனரமைக்கும் பணிகளிலும் இராணுவம்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தனது இராணுவத்தினரை பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்துவதை சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தங்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தை புனரமைக்கும் பணிகளிலும் சிறிலங்கா அரசு தனது இராணுவத்தினரை ஈடுபடுத்தி வருகின்றது.

புனரமைக்கப்படும் தேவாலைத்தை பார்வையிடுவதற்கு சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (29) அங்கு பயணம் மேற்கொண்டதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை பிரதேசசபை விவகாரம் ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த நிலையில் மட்டக்களப்புக்கு பயணம் செய்வதன் மூலம் தமிழர் தரப்பை ஏமாற்ற ரணில் முயன்று வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் நிலவில் ஆய்வு –நாசா

சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.

சனிக்கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிடட்டுள்ளது.

இதற்காக டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான ட்ராகன் ஃபிளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

85 கோடி டொலர் (சுமார் 5,850கோடி) செலவில் மேற்கொள்ளப்பட்டு, 2034ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

சிலோன் கொலனியிலிருந்து நியுசிலாந்திற்கு சென்ற 243 பேர் நடுக்கடலில் மாயம்

இந்தியா தெற்கு டில்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது சிலோன் கொலனி இங்கு இருப்பவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதால் அந்த இடத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி நியூசிலாந்து சென்ற 243பேரில் 164பேர் இந்தப் பகுதியிலிருந்து சென்றவர்களாகும். கேரளாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட படகில் இவர்களின் தற்போதைய நிலை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இவர்களிடம் கடவுச்சீட்டோ, விசாவோ எந்தவொரு அத்தாட்சியோ இருக்கவில்லை.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக பசுபிக் பெருங்கடல் கரையில் உள்ள நாடுகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஆனால் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இவர்களுடன் ஜனவரி 11ஆம் திகதி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். வீடுகள், சொத்துக்கள், நகைகளை விற்றே இவர்கள் பயணித்ததாகவும், கேரளாவின் ஏர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சராய் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதில் குடும்பத்தினர் சென்றுவிட கணவன் மட்டும் தனியாக விடப்பட்டுள்ளார். இவர்களை ஏற்ற வந்த வாகனத்தில் இவருக்கு இடம் கிடைக்காததால், அடுத்த வாகனத்தில் இவரை அழைத்துச் செல்வதாக கூறி வாகனம் சென்று விட்டது. இவரின் குடும்பத்தினர் குறித்த படகில் சென்று விட்டனர்.

இது தொடர்பாக கேரள பொலிசார் தெரிவிக்கும் போது, முனம்பம் கடற்கரையில் 80 பைகள் கிடப்பதாக  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்தே தங்களுக்கு இந்தப் பயணம் குறித்து தகவல் தெரியவந்ததாக குறிப்பிடுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த பயணத்திற்காக சென்று பயணிக்காது திரும்பியவர்களாவர்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது, படகில் சென்றவர்களின் உறவினர்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக கூறுகிறார்.

newzealand boat 3 சிலோன் கொலனியிலிருந்து நியுசிலாந்திற்கு சென்ற 243 பேர் நடுக்கடலில் மாயம்தே மாதா – 2 என்று அழைக்கப்பட்ட அந்தப் படகு குறித்து  அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 2013இல் டெல்லியில் உள்ள மதன்கிரியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு 70பேர் பயணம் செய்ததாக அவர்கள் தெரிவித்ததால், அவுஸ்திரேலியாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

படகு குறித்து எந்தவொரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்திற்கோ, காவல்துறையினருக்கோ கிடைக்கவில்லை. தங்கள் உறவினர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் முன்னரும் நடைபெற்றுள்ளன. முன்னர் நடைபெற்ற சம்பவங்களை அறிந்தும், இப்படியான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றால் இவர்கள் இந்தியாவில் இந்தப் பயணத்தைவிட கொடுமையான சூழ்நிலையில் இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.

தங்களுக்கு ஒரு விடியல் கிடைக்கும் என இவர்கள் நம்பியே இப்படியான உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணங்களை செய்கின்றனர். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பதானால், எமது நாட்டில் நாங்கள் சுதந்திரமாக வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்து இப்படியான தமிழர்களின் அழிவுகள் நிச்சயமாக நடைபெறாது.

கட்டாருக்கு எஃப்-22 தாக்குதல் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

முதல் முறையாக எஃப்-22 தாக்குதல் விமானங்களை கட்டாரில் உள்ள தனது தளத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது, இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உருமறைப்பு முறை மூலம் எதிரிகளின் ரடார்களில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எஃப்-22 தாக்குதல் விமானங்கள் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாகும்.

இந்த விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா இதுவரை அனுப்பியதில்லை. தற்போது இந்த விமானங்கள் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எத்தனை விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அமெரிக்க வான்படை வெளியிடவில்லை ஆனால் ஐந்து விமானங்கள் வானில் பறப்பதை கண்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொன்றும் 150 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை லொக்கீட் மாட்டின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்க வான்படையின் எஃப்-15 தாக்குதல் விமானத்திற்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் வான் தாக்குதல், தரைத் தாக்குதல் மற்றும் வேவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியது.

வெளியானது மரணதண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் 8 முஸ்லிம்கள், 08 தமிழர்கள், 04 சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர் இவர்களில் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் ஆகியோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த பட்டியலுக்கு அமைய எம்.கே.பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம். மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம்.சமிந்த, எஸ்.கணேசன், டபிள்யு.விநாயகமூர்த்தி, எஸ்.ஏ.சுரேஷ்குமார், எம்.குமார், எஸ்.மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ்.முஹம்மது ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி.சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், பி கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் ஆகியோருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சிங்களத்தின் அச்சம் ஏன் ?

2009ல் ஆயுத மோதல்களின் முடிவுக்கு பின்னராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற வி.உருத்திரகுமாரன் அவர்களே, எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களின் ஒருவரென சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் றோகன் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில ஊடமொன்று பதில் அளித்துள்ள அவர், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்களின் அடிப்படையில் பல அமைப்புக்களும், பலரும் தடைசெய்யப்பட்டனர்.

அதில் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பணியாற்றிய வி.உருத்திரகுமாரன் அவர்களே, தற்பபோது எஞ்சியுள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் ஒருவராக அமெரிக்காவில் காணப்படுகின்றார் என்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் முன்னிணி அமைப்பை அவர், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஒஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் முன்னெடுத்து வருகின்றார் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களின் அரசாங்கமாக இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழீழத்தை உருவாக்குவதனை இலக்காக கொண்டு செயற்படுகின்றது என்றும், இதனை சர்வதேச நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதும், அதன் பிரதமர் மீதும் தமது அச்சத்தையும், எதிர்ப்பையும் சிங்கள தலைவர்கள் பலரும் தொடர்சியாக வெளியிட்டு வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசியற்துறை, 2009 மே மாத்தில் பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த சிங்கள அரசு, தமிழர்களின் சுதந்திர வேட்கையினை இல்லாது செய்து விடலாம் என நினைத்திருந்தது.

ஆனால் அந்த சுந்திர வேட்கையினையும் தாகத்தினையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையில், சரியாக ஒரு மாத காலத்தில் (யூன் 2009) அறிவிக்கப்பட்டட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இன்று பத்து ஆண்டுகளாக வலிமையான ஒரு தேசிய அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்த வலிமையினை உணர்ந்தபடியால்தான் சிங்கள் கொள்கை வகுப்பாளர்களும் , தலைவர்களும் அச்சப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் குறைந்து வரும் தமிழர்களின் பிறப்பு வீதம் –பிமல் ரத்நாயக்க

இலங்கையில் தமிழர்களின் பிறப்பு வீதமானது குறைவடைந்து வருவதாக  ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்.

இலங்கையில் முதல் கணக்கெடுப்பு 1881இல் நடத்தப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை ஒரு இலட்சத்து 97ஆயிரமாக இருந்தது. அது மொத்த சனத்தொகையில் 7.2 வீதமாகும். சிங்கள மக்களின் தொகை 19 இலட்சமாகும்.

அது மொத்த சனத்தொகையின் 66.5 வீதமாகும். அதன் பின்னர் 130 வருடங்களின் பின்னர் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் மக்களின் சனத்தொகை 9.7 வீதமாகும்.

சிங்கள மக்களின் வீதம் 74.9 வீதமாகும். இதற்கமைவாக 130 வருடங்களின் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. சிங்கள மக்களின் சனத்தொகை 8 வீதத்தால் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி 130 வருடங்களுக்கு 24 வீதமாக காணப்பட்டது. எனினும் 2011இல் 16 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

130 வருடங்களின் முன்னர் இரு இன மக்களுக்கு இடையிலான வித்தியாசம் 17 இலட்சமாகும். இன்றைய தினத்தில் இரு இன மக்களுக்கு இடையிலான வித்தியாசம் 130 இலட்சமாகும்  என்றும் தெரிவித்தார்.

கோத்தபயா மீது வழக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதி – மகிந்த

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபயா ராஜபக்ஸ மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, புலம்பெயர்ந்த தமிழர்களின் திட்டமிட்ட சதியாகும் என்று சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவரும், கோதபயா ராஜபக்ஸவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

28.06 வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பத்திரிகையாளரிடம் உரையாற்றும் போது, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வழக்கானது கோதபயா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக அமையாது என்று தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார். வேட்பாளர் யார் என்பது அனைவருடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும். சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் இன்னும் கலந்துரையாடல்களே இடம்பெற்று வருகின்றன.  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால். எமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராக வருவதை அனைவரும் விரும்பலாம்.  ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை.

நால்வரின் தூக்குத் தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் 4பேரைத்  தூக்கிலிடுவது தொடர்பாக எடுத்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை என்று ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதியை அந்த முடிவு மீறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்த 4பேரும் தூக்கிலிடப்பட்டடால், அது சர்வதேச சமுதாயத்திற்கும், முதலீட்டளர்களுக்கும் சிறிலங்கா மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தூக்குத் தண்டனை முடிவை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை, இங்கிலாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகள் கோரியிருந்த நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் வருத்தம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் வேறு பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை இங்கிலாந்து மறுபரிசீலனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.