இலங்கையில் குறைந்து வரும் தமிழர்களின் பிறப்பு வீதம் –பிமல் ரத்நாயக்க

இலங்கையில் தமிழர்களின் பிறப்பு வீதமானது குறைவடைந்து வருவதாக  ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்.

இலங்கையில் முதல் கணக்கெடுப்பு 1881இல் நடத்தப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை ஒரு இலட்சத்து 97ஆயிரமாக இருந்தது. அது மொத்த சனத்தொகையில் 7.2 வீதமாகும். சிங்கள மக்களின் தொகை 19 இலட்சமாகும்.

அது மொத்த சனத்தொகையின் 66.5 வீதமாகும். அதன் பின்னர் 130 வருடங்களின் பின்னர் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் மக்களின் சனத்தொகை 9.7 வீதமாகும்.

சிங்கள மக்களின் வீதம் 74.9 வீதமாகும். இதற்கமைவாக 130 வருடங்களின் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. சிங்கள மக்களின் சனத்தொகை 8 வீதத்தால் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி 130 வருடங்களுக்கு 24 வீதமாக காணப்பட்டது. எனினும் 2011இல் 16 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

130 வருடங்களின் முன்னர் இரு இன மக்களுக்கு இடையிலான வித்தியாசம் 17 இலட்சமாகும். இன்றைய தினத்தில் இரு இன மக்களுக்கு இடையிலான வித்தியாசம் 130 இலட்சமாகும்  என்றும் தெரிவித்தார்.