குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு தேவாலயத்தை புனரமைக்கும் பணிகளிலும் இராணுவம்

தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தனது இராணுவத்தினரை பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்துவதை சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தங்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தை புனரமைக்கும் பணிகளிலும் சிறிலங்கா அரசு தனது இராணுவத்தினரை ஈடுபடுத்தி வருகின்றது.

புனரமைக்கப்படும் தேவாலைத்தை பார்வையிடுவதற்கு சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (29) அங்கு பயணம் மேற்கொண்டதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை பிரதேசசபை விவகாரம் ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த நிலையில் மட்டக்களப்புக்கு பயணம் செய்வதன் மூலம் தமிழர் தரப்பை ஏமாற்ற ரணில் முயன்று வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.