Home Blog Page 2742

காத்தான்குடியில் இஸ்லாமிய சரீஆ சட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு மரணதண்டனை; விசாரணை செய்யப் பணிப்பு

காத்தான்குடியில் சரீஆ சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஜூலை 4 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைகுழுவில் இந்த 20 பேரின் கொலை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அத்தனை ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாகவும் தேரர் கூறியிருந்தார்.

எந்தவொரு நேரத்திலும் பொலிஸில் அதனைச் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தேரர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இந்த வேண்டுகோளை பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.   (மு)

தமிழர்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லையாம் – இரா. சம்பந்தன்!

தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவை முன்னிட்டு மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் கோரிக்கை பாரபட்சமற்ற முறையில் நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும். பிரிவினையற்ற, ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எமது ஆட்சி நிலைமைகள் மாறிவிடும்.

தற்போதும் தமிழ் மக்கள் நீதியையும் சமாதானத்தையம் தங்களுக்கு தருமாறு கோரி நிற்கின்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளிலும் வரையறை காணப் படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஈழத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் என்ற இனமே இருக்காது – பழ. நெடுமாறன்

ஈழத்தில் மிகுதியாக இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்படா விட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு தமிழனே இருக்க மாட்டான் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பொது அரங்கத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

அந்த மக்கள் அழிவின் விளிம்பில் இருந்து கதறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழரைக்கோடி மக்களுக்கும் உண்டு. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு அவர்களைக் காக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு நின்றால் உலககை ஈடுத்தமிழர்களின் பக்கம் திருப்ப நம்மால் முடியும்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948இலிருந்து தொடர்ந்து திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகின்றது. படுகொலை மட்டுமல்லாது, பண்பாட்டு, அடையாளங்களும் அழிக்கப்படுகின்றன. இதை சிங்களப் பேரினவாதிகள்  மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படும் போது, உலகமே வேடிக்கை பார்த்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையகம் அறிக்கை வெளியிட்டது  ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஐ.நா அறிக்கை மட்டும் வெளியிட்டது. உலகம் எம்மை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இந்தியாவில் பல போராட்டங்கள் நடைபெற்ற போதும் எதுவும் நடக்கவில்லை. உலகம் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

ஈழத்தில் மிகுதியாக இருக்கும் மக்களாவது இனிமேல் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்காக நாம் குரல் கொடுப்போம். என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வை கோ, எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மார்க்சிஸ்ட் கம்êனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ.நீலமேகம், இந்திய கம்êனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரா.திருஞானம், மாவட்டச் செயலர் மு.அ.பாரதி, விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிராசன், வழக்குரைஞர் அ.நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இலக்கு 33 07-07-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 33 07-07-2019

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு சீன அரசாங்கம் வழங்கிய பெரிய கப்பல் இன்று (08.07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. P 625 என்னும் பெயர் கொண்ட இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி சீனாவின் சங்ஹாயில் உள்ள கடற்படைப் பிரிவில் இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் நிசாந்த உலுகே தென்னக்கோனின் தலைமையிலான குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

1994இல் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பலின் நீளம் 112 மீற்றர் என்பதுடன், அகலம் 12.4 மீற்றர் என கடற்படைத் தரப்பினர் கூறினர். 2300 தொன்கள் எடை கொண்ட இந்தக் கப்பலில்  18 அதிகாரிகள் உட்பட 110 பேரைக் கொண்ட பணியாளர்கள் கடமையில் ஈடுபட முடியும்.

மேலும், சிறிலங்கா கடற்படைக் கப்பல் குழுவில் இணைந்து கொண்ட பின்னர் சிறிலங்காவிற்கு உட்பட்ட ஆழ்கடல் வலயத்திற்குள் தேடுதல், மீட்டெடுத்தல் போன்ற பணிகள், கடல் வளங்களை பாதுகாத்தல், கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் மற்றும் வளங்களுக்கு உதவிகளை வழங்குவது ஆகியவற்றிற்காக இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்

இராஜதந்திர ரீதியிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வருமாறு கனேடிய அரச தலைவரை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். இதனை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொதுவாக இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவிவகார அமைச்சகங்கள் மற்றும் தூதுவராலயங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுவது வழமை.

ஜனாதிபதியின் மரண தண்டனை அமுல்ப்படுத்த காட்டிய ஆர்வம், ராஜதந்திர நடவடிக்கைகளில் அனுபவமின்மை போன்ற செயல்களும், ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக பேசியமையும் இந்த கனேடிய அரசாங்கத்தின் மறுப்பிற்கான காரணமாக கருதப்படுகின்றது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை கனடா வருமாறும் கனேடிய அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.

 

போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-

1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால்  ‘’வோட்ட செட்” நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம் பகுதியில் நின்றிருந்த ஒரு இளநிலை படையதிகாரி, யாழ்ப்பாணத்தில் படையப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் தனது நண்பனான அதிகாரியுடன் நடத்திய உரையாடல்  விடுதலைப்புலிகளால் இடைமறிப்புச் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பெண்போராளிகளின் உடல்களைப் பார்க்கும் போது தனக்கு மிகுந்த கவலையாக இருப்பதாக அம்பகாமத்தில் இருந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதற்கு யாழில் இருந்த புலனாய்வுப் படையாளி;

“இதற்காக நீ ஏன் வருந்த வேண்டும். இவர்களை மட்டுமல்ல இந்த இனத்தையே வைக்கக் கூடாது. இவர்களுக்கு இருக்கும் இந்த போராட்ட குணத்தை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களின் சந்ததிக்கே போராட்டகுணம் இருக்கக்கூடாது.

அதற்கான நடவடிக்கைகள் பலேகல்ல ஐயா பொறுப்பாக இருந்த நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. நாங்கள் இப்போது போதைப் பொருட்கள், பாலியல் படங்கள் போன்றவற்றை இங்கு பரப்பும் வேலையை செய்துவருகிறோம்…..” என அந்த உரையாடல் தொடர்ந்து சென்றது……..radio operator போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

“வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு அரசாங்கத்தின் திட்டமிட்டநிகழ்ச்சி நிரலே காரணம்” என அன்றைய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

2014இல் பாராளுமன்றில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் “வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு படையினரே காரணம்” என அழுத்தமாகக் கூறியிருந்தார்.

இது போன்றே பல்வேறு தரப்புகளிலிருந்தும் சிறிலங்கா அரசுமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கருத்துக்களில் உண்மை இல்லையெனில், இந்த பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக  சிறிலங்கா அரசால் அன்றே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு எந்த நடவடியும் எடுக்கப்படவில்லை.

இந்த போதைப்பொருள் விநியோகம் திடீரென வானத்தில் இருந்து இறங்கிய சாபமல்ல. அது எதிரிகளால் இரண்டு சகாப்தங்களாக நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் ஒரு இனவழிப்பு நிகழ்ச்சிநிரல்.

இத்தகைய செய்திகள் பலருக்கு ஆச்சரியத்தை தோற்றுவித்திருக்கக் கூடும். இன்னும் சிலருக்கு இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை பற்றிய ஐயங்கள் எழவும் கூடும். ஆனால் இதில் ஆச்சரியப்படவோ ஐயம் கொள்ளவோ எதுவுமில்லை.487 1 news போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

இங்கு மட்டுமல்ல. எழுப்பப்படும் உரிமைக் குரல்களை வலுவிழக்கச் செய்யவும், ஒடுக்குமுறைகக்கு எதிராக போராடும் குணாம்சத்தை நீத்துப் போகச்செய்யவும் அடக்குமுறையாளர்கள் போதைப்பொருட்களை ஒரு கருவியாக உபயோகித்தே வந்துள்ளனர்.

இன்றும் அவுஸ்ரேலியா, கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் அந்த நாட்டின் சுதேச மக்கள் அந்த நாட்டு ஆளும் தரப்புகளால் திட்டமிட்டு பரப்பப்பட்ட, பரப்பப்படுகின்ற போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகி அழிந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் அதி கூடிய தற்கொலை விகிதம் அவுஸ்ரேலிய சுதேச மக்களின் மத்தியில் நிலவுகிறது. சனத்தொகையில் 03 வீதத்திற்குக் குறைவான கனேடிய சுதேசிகள், கனேடிய சிறைச்சாலைகளில் 19 வீதத்தை நிரப்புகின்றனர்.

இவ்வாறே சிங்கள அரசும் போதையூட்டி தமிழரின் போர்க்குணத்தை அழிக்க கடந்த பல தசாப்தங்களாக முயன்றுவருகின்றது. இதன்மூலம் இனவழிப்பை இலகுபடுத்த முடியுமென்பது அவர்களின் நம்பிக்கை. அது உண்மையானதும் கூட.

இவ்வாறு ஒரு இனத்தை  அழித்தொழிப்பதற்காக போதைப்பொருட்களை ஆயுதமாக பயன்படுத்திவரும் கேவலமான ஒரு தேசத்தின் அன்றைய அரசியல்வாதி, இன்றைய சனாதிபதி, போதைப்பொருள் பற்றி இப்போது அதிகம் பேசிவருகிறார். அவரது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அமைச்சர்கள் மீது கூட போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் தமிழர் தரப்பு  நோக்கி எந்தவித குற்ற   உணர்ச்சியுமின்றி கைநீட்டுகிறார்.

விடுதலைப் புலிகளை தமது படையினர் வெற்றிகொண்டதாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை சில நாட்களிலேயே முடிந்துவிட்டதாக பெருமைப்படும் சிறிலங்கா அரசு வடக்கில் காவாலிக் குழுக்களையும் கஞ்சா கடத்தலையும் முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் இருப்பது முரண்நகை இல்லையா?Vaal 2 போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

சிங்கள தேசத்தின்  கோட்டைகளுக்குள்ளேயே புகுந்து விளையாடிய தமிழர் தேசத்தின் பிள்ளைகள்  சிறிலங்கா அரசுபோல குறுக்கு வழிகளில் கீழ்த்தனமாக சிந்தித்திருந்தால் ;

சிங்கள தேசத்தை போதையில் மிதக்கவிட்டிருக்கமுடியும். இரசாயன குண்டுகளை வெடிக்கச்செய்து பலசந்ததிகளையே அழித்திருக்க  முடியும். உயிரியல் போர்முறைமூலம் சத்தமின்றி சாவைக் கொடுத்திருக்கமுடியும் ; ஆகக்குறைந்தது சிறிலங்காவின் விவசாய பொருளாதாரத்தை வீணடித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் என்றுமே இவ்வாறான ஈனத்தனங்களில் ஈடுபடவில்லை.

“தமிழ்மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம். விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னர்தான் வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகின்றது“.

இவ்வாறு  மைத்திரியின் கூற்றுக்கு காட்டமாக மறுப்புத் தெரிவித்திருப்பது ஒரு தமிழரோ அல்லது தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரோ அல்ல. விடுதலைப்புலிகளை பல சமர்களில் எதிர்கொண்ட சிறிலங்காவின்  முன்னைநாள் படைத்தளபதி சரத்பொன்சேகா. இவ்வாறு அவர் உரையாற்றிய இடம் சிறிலங்காவின் நாடாளுமன்றம்.

விடுதலை வீரர்களின் உயர்வான கட்டுப்பாடுகளும், மேன்மை மிக்க ஒழுக்கவியல் விழுமியங்களும், போரிடும் வீரமும் இன்று என்றுமில்லாதவாறு சிறிலங்காவில் மட்டுமன்றி  உலகெங்கும் உணரப்படுகிறது.

இந்த நிலையில் சிறிலங்கா சனாதிபதியின் இத்தகைய கூற்றை நாம் சாதாரணமானதாக எடுத்துவிடமுடியாது. சிறிலங்கா சிங்கள அரசு தமிழரை இல்லாதொழிக்கும் தனது நீண்டகால நிகழ்ச்சிநிரலை பல வழிகளிலும் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றிவருகிறது. இந்தவகையில் இதுபோன்ற நடவடிக்கைகளும் அந்த நிகழ்ச்சிநிரலின் ஒருபகுதியாக இருக்கலாம்.

 

 

கூட்டமைப்பினர் எங்களை மறந்து செயற்படுகின்றார்கள்-காணாமல் போன உறவுகளின் உறவுகள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது தலைவர்கள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சினி இந்த கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது அரசியல் தலைமைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. வெளிநாடுகளிற்கு செல்கின்றனர், பிரதிநிதிகளாக ஜெனிவாவிற்கு செல்கின்றனர். நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்துகொள்கின்றனர். ஆனால் எமது பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பேசியதாக தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறை அற்றவர்களாகவும், மறந்தவர்களாகவும் எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனிற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்காகவும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயங்களை மறந்து இன்று கம்பெரலியவிற்கு்ம, சமுர்த்தி உள்ளிட்ட அபிவிருத்திகளிற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதை நாம் காண்கின்றோம்.

எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவார்கள் என எதிர்பார்த்த அவர்கள் இன்று அவற்றை மறந்து செயற்படுகின்றனர்” என குற்றம் சாட்டினார்.

 

புனித ஞாயிறு தாக்குதல் – யாழ் திரையரங்குகள் பாதிப்பு

கடந்த ஏப்பிரல் மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை யாழ் திரையரங்குகளை அதிகம் பாதித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் திரையரங்குகளை தவிர்ப்பதால் சில படக் காட்சிகள் நிறுத்தப்படுவதுடன், திரையரங்குகள் தமது கட்டணத்தை 500 ரூபாயில் இருந்து 300 ரூபாய்களாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.

பிரித்தானியா துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான கோசம்

சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியின் போது இந்தியாவுக்கு எதிரான கோசங்களைத் தாங்கிய விமானம் வானில் பறந்தது தொடர்பில் இந்திய துடுப்பாட்ட சபை அனைத்துலக துடுப்பாட்ட சபையிடம் தனது முறைப்பாட்டை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் துடுப்பாட்டப் போட்டி இடம்பெற்றவேளையில் வானில் பறந்த விமானம் “காஷ்மீரில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும்” “ கஷ்மீரில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்களை தாங்கியவாறு பறந்து சென்றிருந்தது.

இந்த நடவடிக்கை தொடர்பில் இந்தியா அதிக சீற்றம் அடைந்துள்ளதுடன், தனது துடுப்பாட்ட அணியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மூன்று தடவைகள் விமானங்கள் வெவ்வேறு வாசகங்களைத் தாங்கியவாறு பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.