ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேரடி தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் 10 வருடங்களுக்குப் பின்னர் நேற்று (08) ஹங்வெல்லையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
புலனாய்வு விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களுக்கமையவே அவர் கைது செய்யப் பட்டுள்ளதாக CID உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரலான ராஜபக்ஷலாகே லலித் ராஜபக்ஷ என்ற அதிகாரியே நேற்று கைது செய்யப்பட்டவராவார். 2014இல் ஜேர்மனுக்கான இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய இவர், 2017இல் இலங்கை திரும்பியிருந்தார். 2009 ஜனவரி 23ஆம் திகதி கம்பஹா இம்புல் கொடையில் தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது உபாலி தென்னகோன் மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்.
மேற்படி தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பலரின் கைவிரல் அடையாளங்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ வீரரின் விரல் அடையாளம் அதில் மிக நெருக்கமானதாக இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விரல் அடையாளங்கள் பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ அதிகாரியிடமும் விரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் மூலமான விசாரணையிலிருந்து இத் தாக்குதலுடன் அவர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பதாக இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த அதிகாரிகள் புலனாய்வு ரீதியான சாட்சி மற்றும் தொலைபேசி உரையாடல் மூலமான சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.
அன்று இடம்பெற்ற மோசமான அத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உபாலி தென்னக்கோன், அவரது மனைவியான தம்மிக்கா தென்னக்கோன் ஆகியோர் சந்தேக நபர்களை இனங்காண்பதற்கான அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக 2016இல் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.
விரல் அடையாள விசாரணையின் மூலம் நேற்று கைது செய்யப்பட்டவர் எட்டாவது சந்தேக நபராவார். அவரை இனம்காண்பதற்கான அணிவகுப்பொன்றை நடத்துவதற்கு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியையும் இலங்கைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
ரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சி.ஐ.டி.யினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்னவே சட்ட மாஅதிபர் சார்பில் மேற்படி கருத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
கீத்நொயரின் கடத்தல் மற்றும் கொலை முயற்சி சம்பந்தப்பட்ட வழக்கில் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளமை ஆதாரங்களுடன் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரி ‘ரிவிர’ ஸ்தாபகரான உப்பாலி தென்னகோனின் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஜூலை 08 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். இதற்கமையவே அவரை கீத்நொயரின் கடத்தலுடனும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி யினரிடம் கேட்டுக்ெகாண்டார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர்.
அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதுஇந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு நிற கொடிகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியை தகர்த்திய ஆர்ப்பாட்ட காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர். இதன் போது பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து , காலிமுகத்திடல் வரையான வீதி நேற்று பிற்பகல் 1.30 இற்கு பின்னர் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன், பொலிசார் சாரதிகளை மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் அவர்கள் கொழும்பு நவலோகா வைத்தி யசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்தற்போதும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவின் சுற்றுலா, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ஆனாலும் தமது அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த படகுச் சேவையை ஆரம்பிப்பதில் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தமிழக முதலமைச்சர் இதை விரும்பவில்லை. இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். என்றார்.
பலாலி விமான நிலையப் பணிகள் éர்த்தியடைந்ததும் இந்தியாவிற்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால், பயணச் செலவுத் தொகை மிகக் குறைவாகக் காணப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள், துப்பாக்கிகள் மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தி தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு.பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூரியவும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் தெரிவித்தனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தான் தெரிவுக்குழு முன்னிலையில் வரப்போவதில்லை என பாராளுமன்றத்தில் சிறப்புரிமை எழுப்பி கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவுக்கும் போதே சபாநாயகரும் சபை முதல்வரும் இதனைக் கூறினார்.
பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர்.
கல்முனை வாழ் தமிழ்மக்கள் சார்பாக கல்முனையில் உண்ணாவிரதமிருந்த வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிவஸ்ரீ.சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் தலைவரான கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ரணில் அரசாங்கம் இந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிவருகிறது. தமிழ்மக்களால் ஆட்சிக்குவந்த பிரதமர் அண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தமிழ்எம்பிக்களால் தப்பிப்பிழைத்த பிரதமர் ரணில் இம்முறை தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது என்றும் கோருகின்றோம்.
அந்தக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 30வருடகாலமாக இத் தரமுயர்த்தல் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றபோதெல்லாம் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாகஇருந்துவந்துள்ளனர். நாமும் பொறுமையாக இருந்துவந்தோம்.
எமது த.தே.கூட்டமைப்பினர் பல தடவைகள் கொழும்பில் பிரதமரையும் அமைச்சரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். எனினும் சிலபல தடங்கல்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளோம்.
தமிழ்மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்களுக்கான நிரந்ததீர்வை நோக்கி பயணிப்பதாக கூறுகின்றனர். அதற்காக வாக்களித்த மக்களை மறந்து தமிழ்பேசும் மக்கள் என்று அடிக்கடி உச்சரித்தும் வருகின்றனர்.
ஹரீசின் எச்சரிக்கை!
த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதீயில் செய்றபட்டுவருகின்றனனர். ஆனால் ஹரீஸ் போன்ற எம்பிக்கள் அதனை உதாசீனப்படுத்தி தமிழர்பிரச்சினைக்கு தீர்வு என்பது எங்களில்தான் தங்கியுள்ளது என மார்தட்டுகிறார்.
கல்முனையில் தமிழ்த்தரப்பு விட்டுக்கொடுக்கவேண்டும் இன்றேல் வேறுபாதையில் பயணிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கிறார்.இத்தனைக்கும் முஸ்லிம்கள் தமிழருக்காக விட்டுக்கொடுத்தது என்ன? ஆனால் தமிழர்கள் நியாயமான அனைத்துவிடயங்களிலும் விட்டுக்கொடுத்தே வந்துள்ளனர்.
இவர்களுக்கு இவ்வளவுகாலமும் கிழக்குமாகாணமுதலமைச்சர் தொடக்கம் அத்தனை விடயங்களிலும் விட்டுக்கொடுத்துவந்ததன் விளைவே அவரது முட்டாள்தனமான பேச்சு என்பதனை மறந்துவிடமுடியாது.
தமிழ்மக்களின் போராட்டம் வரலாறு தியாகம் என்ன என்பது தெரியாமல் வாய்க்குவந்தபடி பேசுகிறார் ஹரீஸ். இந்தச்சலசலப்புக்கெல்லாம் இந்த தமிழர் அஞ்சமாட்டார்கள்.வீரத்தோடு பிறந்து உலகம்போற்றும்வகையில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் நாம்.
கல்முனை மாநகரம் தமிழர்தாயகம். அது எந்தக்காரணம் கொண்டும் யாருக்காகவும் யாருக்கும் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்கள். ஒரு மாதகாலத்துள் இது நிறைவேற்றப்படாவிட்டால் நாம் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிப்போம். எமது இனத்திற்காக எமது உயிரை விடுவதற்கு கிஞ்சித்தும் தயங்கமாட்டோம்.
தமிழ்பாராளுமன்றஉறுப்பினர்களே!
தமிழ்மக்களால்தான்; நல்லாட்சி உருவானது. நாமே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அமைத்தோம். எனவே உங்களது ஆதரவு இல்லாவிட்டால் எந்தக்கொம்பனாலும் அரசாங்கம் கவிழ்வதைத்தடுக்கமுடியாது.
எனவே தயவுசெய்து பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறத்தமிழன் என்றரீதீயில் ஒற்றுமையாக எமது கல்முனை உப பிரதேசசெயலகம் தரமுயர்த்தலுக்கு ஒத்துழைத்து உலகத்திற்கு ஒற்றுமையைக்காட்டுங்கள்.
பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
இன்னும் ஓரிருதினங்களில் ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனி கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் உண்ணாவிரதிகள் தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் மனோகரன் ரஜீகர் (பிறந்த திகதி 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பிறந்த திகதி 04.03.1985, அகவை 21), லோகிதராஜா ரோகன் (பிறந்த திகதி 07.04.1985, அகவை 21), தங்கதுரை சிவானந்தா (பிறந்த திகதி 06.04.1985, அகவை 21), சண்முகராஜா கஜேந்திரன் (பிறந்த திகதி 16.09.1985, அகவை 21) ஆகியோர் கடற்படையின் சோதனைச் சாவடியில் மறித்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மாணவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றார்கள்.
மகிந்த ராஜபசவின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் பாதிக்கப்பட்ட கடும்பங்களின் கோரிக்கைகள் பல்வேறு போராட்டங்கள், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாக சம்பவம் இடம்பெற்று 7 வருடங்களின் பின்னரே அதாவது 2013 ஆம் ஆண்டே சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரொருவர் உட்பட 12 பேர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அன்று முதல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி அன்று அனைத்து குற்றவாளிகளையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட தாயகத்தில் நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட மனோகரன் ரஜீகரின் தந்தையான (தற்போது லண்டனில் வசித்துவரும்) வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் இலக்கு மின்னிதழுக்கு மின்னஞ்சல் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதன் முழுவடிவம் வருமாறு,
பதில்- இந்த தீர்ப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதுவரை எனக்கு எந்த அழைப்பாணையும் அனுப்பப்படாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்கான காரணமாக போதிய ஆதரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. என்னிடம் போதிய அளவு ஆதாரம் உள்ளதால் இந்த தீர்ப்பை நான் முழுமையாக எதிர்க்கின்றேன்.
பதில்- இலங்கை மீது சர்வதேச நாடுகளின் அழுத்தம் இல்லாதவரை தமிழர்களின் நீதிக்கான விடயங்களில் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டுவரும் என்பதை உலகம் உணரும்வரை எமக்கான நீதி என்பது சாத்தியமற்றது. இதை உலக சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.
பதில்- எமக்காக குரல் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் உள்ளார்கள். தற்போதைய உலக ஒழுங்கிலும் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் எமது அரசியல் சிவில் சமூகங்களின் வேலைத்திட்டங்கள் பரந்த அளவிலே ஒன்றிணைந்து முழுமூச்சுடன் முன்னெடுக்கும்போது நிச்சயம் என்னைப்போன்ற நீதிக்காக ஏங்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும். இந்த விடயத்திலே சர்வதேச சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு பொருத்தமான செயற்திட்டங்களை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்தால் எமக்கான நீதியை சாத்தியப்படுத்தமுடியும்.
பதில்- இலங்கையின் நீதிக்கட்டமைப்பு அரசியல் தலையீடு இல்லாமல் சுயா தீனமாக இருந்திருந்தால் நாம் இன்று எமது பிள்ளைகளை இழந்திருக்கத் தேவையில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கல் செய்த எந்தவொரு வழக்கிற்கும் நீதி கிடைத்ததாக நான் அறியவில்லை. அதை எமது வழக்கிலும் கண்டுகொண்டேன். ஆகவே மேன்முறையீடு செய்வதால் எவ்விதமான நியாயத் தினையும் இலங்கையின் நீதித்துறைக்குள்ளே பெற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி :- நீங்கள்சர்வதேசஅரங்கிலேபலதரப்பினருடன்இந்தவிடயம்குறித்துபேச்சுக்களையும், முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும்அளித்துள்ளநிலையில்அவர்களின்முயற்சிகள்எவ்வாறுஉள்ளன?
பதில்- உலகநாடுகளின் அழுத்தமில்லாத வரையில் இலங்கை அரசாங்கம் தான் தோன்றித்தனமாகத்தான் செயற்படும் என்பது வெளிப்படையானது. ஆகவே நாங்கள் சந்திக்கின்ற அனைத்து சர்வதேச தரப்புக்களிடத்திலும் அழுத்தங்களை அளிக்குமாறே தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவர்களும் அதுதொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமலில்லை. எனினும் நாம் மேலும் அழுத்தங்களை வழங்குமாறு தற்போதைய சந்தர்ப்பத்திலும் கோருகின்றோம்.
கேள்வி :- தாயகத்தில்இருக்கின்றபாதிக்கப்பட்டஏனையபெற்றோர்கள்அடுத்தகட்டமாகஎன்னசெய்யலாம்என்றுகருதுகிறீர்கள்?
பதில்- தாயகத்தில் உள்ள பெற்றோர்கள் இன்று எதனையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். காரணம் தமது நீதிக்காக நடவடிக்கைகளை முன்னெடுக் கின்றபோது முப்படையினரும், புலனாய்வுத்துறையினரும் அவற்றை முடக்குவதற்கே திட்டமிட்டு முயல்வார்கள். நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். ஆகவே அவர்களால் எதனையும் செய்ய முடியாது. புலம்பெயர்ந்தவர்களே பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நடவடிக்கைகளை வெளியிருந்து மேற்கொள்ள முடியும். அது தான் சாத்தியமானதொரு வழியாக இருக்கின்றது.
கேள்வி :- மாவட்டநீதவான்நீதிமன்றம்போதியஆதரங்கள்இல்லையென்றுகூறுகின்றநிலையில்தங்களிடத்தில்எத்தகையஆதாரங்கள்இருக்கின்றன?
பதில்- என்னிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. எனது மகனை தொலைத்துவிட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக இருக்கும் என்னையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னதாக அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதன்மூலம் அரசியல்வாதிகளின் பிடியில் நீதித்துறை இருக்கின்றது என்பதையும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டே நீதித்துறை செயற்படுகின்றது என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டுகின்றது.
கேள்வி :- அவற்றைபயன்படுத்திதாயகத்தில்அடுத்தகட்டநடவடிக்கைகளைஉள்நாட்டில்முன்னெடுக்கமுடியுமா?
பதில்-என்னிடம் ஆதாரங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. காரணம், உள்நாட்டில் நாம் இத்தகைய விடயங்களை முன்வைத்து நீதித்துறையை நாடுகின்றபோது எமது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகின்றது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்ட தருணங்களில் எல்லாம் இந்த கொடூரம் தொடர்பான அநேகமான சாட்சிகள் தமது பாதுகாப்பு நிமித்தம் தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். இவ்வா றான நிலையில் எவ்வாறு அவர்களிடத்தில் நீதியை எதிர்பார்க்க
முடியும்.
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாருடன் ஐநா மனித உரிமை பேரவை நீதிக்காக முன்நிற்கும் என மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நீதி அமைப்பில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இல்லாமையானது, திரிகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் விடுதலை செய்யப்பட்டமை எடுத்துக்காட்டுகின்றது என அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை குறிப்பிடுகின்றது.
முக்கிய சாட்சியங்களும், பாதிக்கப்பட்டவர்களும் முன்வந்து சாட்சியங்களை வழங்குவதற்கு போதுமான பாதுகாப்பை உணரவில்லை என்பது உண்மை என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, மிக மோசமான மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலும் இந்த விடயம் பாரிய சவால்களை இலங்கைக்கு விடுத்திருந்தது.