Home Blog Page 2738

யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து பணியாளர்

யாழ்ப்பாணத்திலுள்ள மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு சிறிலங்காவிலிருந்து 9 சிங்கள இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ உதவியாளர்கள் மூவரும், சாரதிகள் ஆறுபேரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

மகிந்த பிரதமராக இருந்த போது 61 இளைஞர்கள் மின்சார சபைக்கு நியமனமாகி வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, இந் நியமனங்கள் நிறுத்தப்பட்டன. இதன் பின்னர் ரணில் ஆட்சியில் வடக்கிற்கு சிங்களவர்கள் நியமனம் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இப்போது இந்நியமனங்கள் வழங்கப்பட்டு, இவர்கள் இங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வடக்கில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடும் நிலை இருக்கும் போது, இவ்வாறு சிறிலங்காவிலிருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அனுப்பப்படுவதது  மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.

 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி, வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், மட்டக்களப்பு – காந்திபூங்காவில், ​இன்று 13/07/2019 கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து தம்மை அரசாங்கம் ஏமாற்றிவருவதாகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இறுதி யுத்ததின்போது, தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எழுதப்பட்ட கடிதங்களும், அவரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செவ்விகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டிற்குப் பின்னர், சர்வதேசக் கூட்டுமுயற்சிகளுடன் தமிழ் இனவழிப்பு எனும் நிகழ்ச்சி நிரல் மிகத்தெளிவான முறையில்  ஐந்தாக் கட்ட ஈழப்போராக நடாத்தப்பட்டு வருகின்றது. ஏராளமான தமிழர்களும், தமிழீழச் செயற்பாட்டாளர்களும் இத்திட்டங்களுக்குள் அறிந்தும் அறியாமலும் சிக்குண்டுவிட்டனர்.

தேச விடுதலை, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற எமது தவிர்க்கமுடியாத,தவிர்க்ககூடாத கோட்பாடுகளை புறந்தள்ளி எம்மவர்கள் பலர் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மெய்யான விடுதலை பற்றி மீள வலியுறுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.book 2 cover print a4 “எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

இந்த நிலையில் இதுபோன்ற நூலின் மீள் வெளியீடு காலத்தின் தேவையாகிறது

எமது தேசிய சொத்தான இத்தகைய நூல்களை நாம் காண்பது அரிதாகிவிட்டது. இருக்கின்ற பல்வேறுபட்ட ஆவணங்கள் நூல்களை பலர் பதுக்கிவைத்து தமது தனியுடைமை போல் சொந்தம் கொண்டாடிவருகின்றனர்.

எமது தேசத்தின் வரலாற்றையும் , நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதையையும் தெளிவாக உணர்த்திநிற்கும் இத்தகைய நூல்கள் மற்றும் ஆவணங்கள் இன்றைய சந்ததிக்கு மட்டுமன்றி எமது எதிர்கால சந்ததிக்கும் அவசியமானவை.

எனவே இதனையுணர்ந்து நாம் அனைவரும் இவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்றி பரவலாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். இதன் அடிப்படையிலேயே ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஒப்பற்ற நூல் மீளவும் வெளிவருகிறது

நிகழ்வின் விபரங்கள்:

காலம்  –  04.08.2019 ஞாயிற்றுக்கிழமை,  காலை 11.00 மணி முதல்

இடம் –    தமிழர்களரி, 01 ஐரோப்பாத்திடல்  3008 பேர்ண், சுவிற்சர்லாந்து

                       தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.  

 

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது – தயாசிறீ

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறீ ஜெயசேகரா நேற்று (12) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து வழக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனியான பிரதேச செயலகத்தை வழங்குவதற்கு உறுதி வழங்கிய ரணில் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் ஒவ்வொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

தற்போதைய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் தான் இயங்கி வருகின்றது. எனவே ஐ.தே.க – த.தே.கூ அரசு என நாம் அதனை அழைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்!, கூட்டமைப்பின் தந்திரோபாயம் வெற்றி” அத்தனையும் வெறும் புனைவு என்கிறார் ஹரிஸ எம்பி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாமலிருக்கும் போது நிரந்தர கணக்காளரை நியமித்ததாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது போன்று அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பணிபுரியும் கணக்காளரை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தராக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததில் எந்தவித மாற்றமும் நடைபெற வில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மேலும்  எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வெளியான செய்தி முற்றிலும் சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். அதில் உண்மைகள் எதுவுமில்லை என மறுக்கிறேன் என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

கல்முனை உப செயலக விவகாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நிலையில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து பிரேரணை தொடர்பில் வாக்களிக்கும் தினமாக இருந்தது. கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழுவொன்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் பிரதமர் ரணிலை சந்தித்து கல்முனை பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் உப பிரதேச செயலக தரமுயர்த்தலினால் முஸ்லிம் சமூகத்துக்கு நடைபெற உள்ள அநீதிகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்ட போது பிரதமரினால் முஸ்லிங்களுக்கு அநீதி ஏற்படாவண்ணம் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முஸ்லிம் தூதுக்குழுவுக்கு திருப்தியாக அமைந்தது.

சட்டமுதுமானியும்,அரசியல் ஆய்வாளரும் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வரும் வை.எல்.எஸ்.ஹமீட், சட்டத்தரணி ஹாலித், தொழிலதிபர் ஜிப்ரி (கம்பளை ஜிப்ரி), கல்முனை வர்த்தகசங்க தலைவர் கே.எம்.சித்திக், சட்டத்தரணி யூசுப், போன்ற கொழும்பு வாழ் கல்முனை புத்திஜீவிகள் குழு கலந்துகொண்டிருந்த பிரதமருக்கும் முஸ்லிம் தரப்புக்குமான சந்திப்பின் போது அங்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை விவகாரத்தில் சில விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாகவும் அது சம்பந்தமாக பேச விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்புடன் பேச விரும்புவதாக தெரிவித்த சுமந்திரன் அவர்கள் கணக்காளர் விவகாரத்தை தெரிவித்த போது ஓரிரு வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்க இருக்கும் இவ்வேளையிள் இது தேவையில்லாத ஒன்றாகும் என முஸ்லிம் தூதுக்குழு கடுமையாக எதிர்த்தவுடன் பிரதமரும் கணக்காளர் நியமனம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என அங்கு தெரிவித்தார். நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து நிரந்தர கணக்காளரை நியமிக்க உடன்படாமல் இருந்தோம்.

பின்னர் பிரதமரின் சந்திப்பில் நடைபெற்ற விடயங்களை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் அடங்கலாக அங்கிருந்த எங்கள் 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தெரிவித்தவுடன் மாலை ஆறு மணிமுதல் பிரதமரை நாங்கள் எல்லோரும் சந்தித்து எங்களுடைய பிரச்சினைகளை தெளிவாக விளக்கினோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எவ்வித முன்னெடுப்புக்களுக்கும் நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்பதை தெளிவாக வலியுறுத்தி பேசினோம். வாக்களிப்பு நடைபெற சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கணக்காளர் விவகாரத்தில் எவ்வித முடிவும் செய்யவில்லை என்பதை உறுதிபட கூறினார்.

பிரதமரின் சந்திப்பில் என்ன நடைபெற்றது, அங்கு என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பதை கலந்து கொண்டிருந்த கொழும்பு வாழ் முஸ்லிம் புத்திஜீவிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்றாக அறிவார்கள் என மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்

இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் மண்ணை விட்டு மறைந்தமை வேதனையே.

1996இல் முல்லைத்தீவு பகுதியிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து, பின்னர்  அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .66287131 619701611852527 3878257938170642432 n இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.

உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் அன்பை வென்றெடுத்தார்.

2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .

2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உக்கிரம் அடைந்த நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .

தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் மறைவுக்கு தமிழர் நாம் எமது இறுதி வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்.

நன்றி – சிவவதனி பிரபாகரன்

 

தமிழர்களின் நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளைப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் சொந்த நிலங்களில் 27.5 ஏக்கர் காணிகளை பொது மக்களுக்கு மீள வழங்கும் நிகழ்வு நேற்று (12) அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இக்காணிகளை மீளவும் தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமைவாக இந்த காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் ஆளுநர் இந்தக் காணிக்குரிய ஆவணங்களை யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கினார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த 2963 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டதுடன், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் சொந்த நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்குவது போன்ற ஒரு நிகழ்விற்கு தலைமை தாங்கிய தமிழரான ஆளுநர், தனது செயலில் ஒரு தன்னிறைவை எட்டியது போல படங்கள் அமைந்துள்ளது.

 

 

 

 

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD – 11 விமானம் நேற்று (12) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்தது.  அமெரிக்கத் தயாரிப்பான இந்த விமானம் அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடியது.

கடந்த நாட்களில் இந்த விமானம் சிலநாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. NCSA உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த விமானமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த USS John C.Stennis போர்க் கப்பலுக்கு கட்டுநாயக்க ஊடாக ஏற்கனவே பொருட்கள் பரிமாறப்பட்டுள்ளன.

இதேவேளை பஹ்ரெனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு WGN 1710 இலக்க விமானம் வருகை தந்துள்ளது. பஹ்ரெனிலிருந்து கட்டுநாயக்காவிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள், விசேட சரக்கு விமானங்களின் ஊடாக, கட்டுநாயக்காவிலிருந்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விமானம் வந்ததை உறுதி செய்த சுங்கப்பகுதியினர் அதில் என்ன பொருட்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் இல்லை, சோதனை செய்யவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் போதிலும், விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட மாட்டாது என சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

 

சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி

சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் தேர்தல் தொடர்பாக சட்டவாளர்களும், வயதானவர்களும் கலந்துயைரடல் ஒன்றை மேற்கொண்டிருந்தவேளையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அல்கைடாவுடன் தொடர்புடைய அல்-சபாப் எனப்படும் ஆயுதக்குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், சோமாலியா அரசை கவிழ்ப்பதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும், சோமாலியா காவல்த்துறை தெரிவித்துள்ளது.

முதலில் கார்க் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் ஆயுததாரிகள் விடுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது, பெருமளவான சடலங்கள் விடுதிக்குள் கிடக்கின்றன. எனினும் நாம் விடுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என படைத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் – இந்தியா கடுமையான எதிர்ப்பு

அமெரிக்காவுக்கும் – சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒப்பந்தத்தை இந்தியா விரும்பவில்லை எனவும், அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் படைத்தளங்களை சிறீலங்காவில் அமைப்பதற்கு வழி ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்காவுடன் எந்த உடன்பாட்டிலும் கைச்சாத்திடவில்லை என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை (10) தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தியா மதிக்கின்றது.

தனது அயல்நாட்டில் இடம்பெறும் அன்னியநாட்டு ஊடுருவலை இந்தியா கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் கேந்திர நலன்களுக்கு அது அவசியமானது எனவும் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை தான் அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவின் இறைமையை பாதிக்கும்வண்ணம் அன்னிய நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை, ஜே.ஆர் ஜெயவர்த்தனா மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் பரிமாறப்பட்ட கடிதங்களிலும் திருமலைத்துறை முகத்தையோ அல்லது வேறு எந்த துறைமுகத்தையோ அன்னிய நாடுகளுக்கு வழங்ககூடாது என்ற உடன்பாடுகள் இருந்ததாக ரணில் கடந்த புதன்கிழமை தனது உரையில் தெரிவித்திருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.