Home Blog Page 2716

இந்திய பாகிஸ்தான் போர்

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொத்து எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமது எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாகவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாலேயே தாங்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறுகின்றது.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாலும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அந்த மாநில அரசு தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது.

“எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல், 04.08.2019 அன்று, தமிழர் களறியில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் 1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதத்தில் இந்நூல் உத்தியோகபூர்வமாக வெளியிடு செய்யப்பட்டிருந்தது

காலத்தின் தேவைகருதி, உலகத் தமிழர் ஆவண மையத்தின் உதவியுடன் , அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் இந்நூல் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்நூலின் முதற் பிரதி மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், திருமதி மணிமொழி அவர்கள் இந்நூலின் அறிமுகவுரையை நிகழ்த்தினார். இவ்வுரையின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் எமக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர் என்பதனையும், „எனது மக்களின் விடுதலைக்காக“ எனும் நூல் ஓர் வரலாற்றுமறை என்றும் எடுத்து விளக்கியதோடு, தலைவர் அவர்களுடனான சந்திப்பின் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார். அத்தோடு விடுதலைப் பாதையில் நடைபயிலும் ஒவ்வொருவரும் எம்மைநாமே மீள உறுதிப்படுத்திக்கொள்ளவும், புடம்போடவும் இன்றைய நிகழ்வானது காலம் இட்ட கட்டளையாக அமைந்திருக்கிறது என்றே கருதுகிறேன் என்றும் அவர் தனது உரையிலே தெரிவித்தார். மேலும் அடுத்தடுத்த சந்ததி தமிழீழ விடுதலைப்பாதையில் உறுதியுடன் நடைபோட்டு தமிழீழத்தை வென்றடையும், அதற்கு அக்கினிப்பறவைகள் அமைப்பே எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.DSCN2090 e1564994561656 768x1024 “எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து இந்நிகழ்வில் நூலின் வெளியீட்டுரை இடம்பெற்றது. இவ்வெளியீட்டுரை அக்கினிப் பறவைகள் அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இந்நூலின் மீள்பதிப்பு உருவாக்கத்தின் தற்போதைய தேவை இவ்வுரையினூடாக விளக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வல்லாதிக்கச் சக்திகளின் முயற்சிகள் தமிழீழத் தேசியத் தலைவரின் நெறியாள்கையில், முறியடிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. சிங்களத் தேசியவாததின் சித்தாந்தமாகிய தமிழினவழிப்பின் ஓர் கருவியாகவே இலங்கையின் ஒற்றையாட்சி வடிவம் திகழ்கிறது. இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியல் இக்கருவியில் முழுமையாகத் தங்கியிருக்கின்றது. பூகோள அரசியலின் வடிவங்கள் மாறிக்கொண்டிருந்தாலும், அதன் நலன் தங்கியிருக்கும் ஒற்றையாட்சி வடிவம் மாறப்போவதில்லை. அத்தோடு போராட்டத்தினை முன்னகர்த்தும் பலர் வழிதவறி நிற்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்தும் எம் தலைவரும், அவரது அடிபணியாச் சித்தாந்தங்களும் இருக்க வேண்டும் என்பதினை உறுதி செய்யும் வகையில் இம்மீள்பதிப்பு அமைந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.tt “எனது மக்களின் விடுதலைக்காக “ –சுவிற்சலாந்தில் மீள்வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் தங்களது கூட்டு முயற்சியால் தமிழீழ நடைமுறை அரசினை அழித்த வல்லாதிக்க சக்திகள், ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும் பூகோள அரசியலின் அடிப்படையில் இலங்கைத் தீவினை தங்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த நினைக்கின்றனர். இவர்களை எவ்வாறு கையாள்வது என்பதனை தலைவரின் கருத்தியலினூடாக இந்நூல் வழிகாட்டுவதோடு, இறைமையுள்ள தமிழீழதிற்கான விடிவு எமது மக்களின் கைகளில் தங்கியிருக்கின்றது என்பதையும் இவ்வுரை தெளிவாக விளக்கியது.

இறுதியாக நன்றியுரையினைத் தொடர்ந்து, இந்நூலை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

ஒரு பெரிய குண்டினுள்  பல சிறிய குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவையே கொத்து எறிகுண்டுகள் ஆகும்.

தாக்கும் இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் ஏவப்படும். என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்த பின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்குள்ளாகும். ஒரே இலக்கின் பல இடங்களைத் தாக்கும் தன்மை இந்தக் குண்டுகளுக்கு உள்ளது.

ஆட்களை தாக்கக்கூடியவை, டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களைத் தாக்கக்கூடியவை, கண்ணிவெடிகளைப் போன்று மண்ணிற்குள் புதைத்து வைத்து பின்னர் வெடிக்கும் தன்மை உடையவை என கொத்துக் குண்டுகளிலும் பலவகை உள்ளன.

இந்தக் கொத்துக் குண்டுகளை விமானங்களிலிருந்தும் வீச முடியும், தரையிலிருந்தும் இலக்கை நோக்கி ஏவவும் முடியும்.

அந்த சிறிய குண்டுகள் சிதறும் வேகத்தால், சிலவேளைகளில் தாக்குதல் இலக்கிற்கு  அருகில் இருக்கும் பகுதிகளையும் தாக்குகின்றன. இதன் போது பொதுமக்கள் உயிரிழக்கவும், காயப்படவும் நேரும்.

cluster bomb 1 கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?பெரிய குண்டு வெடித்து சிதறும் போது வெளியாகும் சிறிய குண்டுகள் மண்ணிற்குள் புதைந்து பிற்காலங்களில் வெடித்து சேதத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் குண்டுகளுக்குள் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும்.

இதனாலேயே கொத்துக் குண்டுகளை போரின்போதோ, தாக்குதலின் போதோ பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி “கன்வென்ஷன் ஒப் க்ளஸ்டர் ம்யுனிஷன்ஸ் (Convention on Cluster Munitions) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, கொத்துக் குண்டுகளை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடந்த இந்தக் கொத்து எறிகுண்டுகள் தொடர்பான சர்வதேச ராஜீயப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் இதுவரை 106 நாடுகள் இதை அமுலாக்கியுள்ளன.

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுத வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிறநாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில், தமிழீழப் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் போதும் இதே போன்ற கொத்துக் குண்டுகளே பாவிக்கப்பட்டன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தாங்கள் இந்தக் குண்டுகளைப் பாவிக்கவில்லை என கூறியிருந்தது. அப்போது உலக நாடுகள் இந்தக் குண்டுகள் பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் பாவிக்கப்படும் போது மட்டும் இந்தக் குண்டுகள் பற்றி பெரியளவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

 

 

வளைகுடாவில் இன்னுமொரு எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது

வளைகுடா பகுதியில் ஈரான் மற்றொரு எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது அரபு நாடு ஒன்றிற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டிற்குரியது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தக் கப்பலில் 7இலட்சம் லீற்றர் எண்ணெயும், 7 மாலுமிகளும் இருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, அதே பகுதியில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலான “ஸ்டெனா இம்பெரோ“ என்ற கப்பலை கடந்த மாதம் 19ஆம் திகதி ஈரான் சிறைப்பிடித்திருந்தது. அதையடுத்து இன்றைய தினம் (04.08) மற்றுமொரு கப்பலை சிறைப்பிடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடையை விதித்ததை அடுத்து கடந்த மே, ஜுன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

தடை செய்யப்பட்ட சிரிய நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக “கிரேஸ் 1“ என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா கடந்த மாதம் 4ஆம் திகதி சிறைப்பிடித்தது.

 

மட்டு. காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் தாக்குதல்

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை உந்துருளியாள் மோதி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அமல நாயகி மற்றும் அவரது மகள் ஆகியோர் காயமடைந்து மட்டக்களப்பு கரடியனாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் தனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் எதிர்த்திசையில் வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரால் வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அமலநாயகி தெரிவிக்கையில்.,

தாம் எதிர் திசையில் வருவதை அறிந்து வேண்டுமென்றே தனது உந்துருளியை நோக்கி எதிரே வந்தவர்கள் செலுத்தியதாகவும் அதன்போது விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டதாகவும், இவ்வாறு எதிர்த்திசையில் வந்தவர்கள் புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மோகன் அவர்களின் மைத்துனர் எனவும் ஏனைய இருவர் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அமலநாயகி தெரிவித்தார்.

இவ்வாறு மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு காயமடைந்த அமல நாயகி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருப்பதுடன் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கே போராட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்ற இந்த நிலையில், கடந்த காலங்களில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் வேண்டுமென்றே உந்துருளியால் மோதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஒருவகையிலான அச்சுறுத்தல் செயற்பாடாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக மனு- இந்து அமைப்புகள்

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­து­வ­ரும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் வர­லாற்­றுக் காலம் முதல் அமைக்­கப்­பட்­டி­ருந்த இந்து ஆல­யங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தும் ஆலய வளைவு உடைக்­கப்­ப­டு­வ­தும், பௌத்­தர்­கள் வாழ்ந்­தி­ராத பிர­தே­சங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­டு­வ­தும் இலங்கை வாழ் இந்­துக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யி­ருப்­பதை நன்கு உணர்ந்த நிலை­யில் இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­ய­மா­னது அமைதி வழி­யில் மேற்­படி அதர்ம செயல்­க­ளைக் கண்­டித்­தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தி­யும் அகிம்மை முறை­யில் கவ­ன­வீர்ப்பை இந்து சம­யப் பேர­வை­யு­டன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளது.

இலங்­கை­யின் ஜனாதிபதி, பிரதமர் மற்­றும் இந்­திய தலைமை அமைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் இந்து சமய விவ­கார அமைச்­சர் ஆகி­யோ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு இந்­துக்­கள் அனை­வ­ரும் அச்­ச­மின்றி சமய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தி உத­வு­மாறு தய­வாக வேண்­டு­கின்­றோம்.

இலங்கை வேந்­தன் இரா­வ­ணண் காலம் முதல் இந்­துக்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு பாரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்த கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் பகு­தி­யை­யும் அங்­கி­ருந்த ஆல­யங்­க­ளை­யும் தடை­யே­து­மின்றி மீள­வும் அமைத்து வழி­பாடு செய்­ப­வ­தற்­கும் இந்­தப் பகுதி சைவத் தமி­ழ­ரின் நிர்­வா­கத்­தின் கீழ் தொடர்ந்து இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தல். இந்­தப் பிர­தே­சத்­துக்கு அண்­மை­யில் பௌத்த விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடுத்­தல். வவு­னியா வெடுக்­கு­நாறி சிவன் ஆல­யத்­துக்­குச் செல்­லும் பாதை­யூ­டாக தடை­யின்றி போக்­கு­வ­ரத்­துச் செய்­வது, அடி­வா­ரத்­தி­லி­ருந்து மலை உச்­சிக்­குச் செல்­வ­தற்­கான ஏணிப் படி­களை அமைக்க பொலி­ஸா­ரும் தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் தடை ஏற்­ப­டுத்­தாது இருத்­தல்.

மத­நல்­லி­ணக்­கத்­தைச் சிதைக்­கும் நோக்­கில் இடித்து அழிக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திருக்­கே­தீச்­சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்­தில் சமா­தா­ன­மான முறை­யில் மீள அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து மத நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­தல்.

தொல்­லி­யில் திணைக்­க­ளம் நடு­நி­லைமை தவறி பக்­கச்­சார்­பா­கச் செயற்­பட்டு பௌத்த வர­லாற்­றுச் சின்­னங்­கள் காணப்­ப­டாத இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தி வரு­வதை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தோடு அத்­தி­ணைக்­க­ளத்­துக்கு தகு­தி­யான சைவத் தமி­ழர் களை­யும் நிய­மித்து குறித்த திணைக்­க­ளம் பக்­கச்­சார்­பின்றி செயற்­படு வதை உறு­திப்­ப­டுத்­து­தல்.

மத­மாற்­றங்­க­ளைத் தடை செய்­தல்.

முல்­லைத்­தீவு செம்­ம­லைப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­யா­தி­ருத்­தல்.

நீரா­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தி­யில் பௌத்த மத வழி­பாட்­டுத் தலங்­கள் இருந்­த­மைக்­கான ஆதா­ரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்­க­ளமே கூறி­யுள்ள நிலை­யில் அங்கு விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடை செய்­ய­தல்.

வடக்கு, கிழக்கு பிர­தே­சத்­தில் பௌத்த மேலா­திக்க செயற்­பா­டு­களை நிறுத்­து­தல்.

மேலே விவ­ரிக்­கப்­பட்ட எமது நியா­ய­மான கோரிக்­கை­களை சாத­க­மா­கப் பரி­சீ­லித்து அவற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து மத நல்­லி­ணக்­கத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத் தித் தரு­மாறு அன்­பு­டன் வேண்­டு­கின்­றோம், என்­றுள்­ளது.

 

கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே எனது ஆதரவு – குமார வெல்கம

ஜனநாயகத்தை மதிக்கும், கொலைகளை செய்யாத, கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத மற்றும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெறக் கூடியவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றி தற்போது எப்படியான கதைகளை கூறினாலும் இந்த வருடத்தின் இறுதியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அப்போது அதற்கு தகுதியான நபர் தெரிவு செய்யப்படுவார் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்கள் தயார் என்றால் தானும் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச தொடர்பாகவே குமார வெல்கம மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் குமார வெல்கம தொடர்ந்தும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்பட்டது ம் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் -செஹான் சேமசிங்க

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  யார் என்று அறிவிக்கப்பட்டதுடன் கட்சி மூன்றாகப் பிளவுபடும். ஐக்கிய தேசிய கட்சியின்  உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைமைத்துவத்தால் ஒருபோதும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் எதிரணிக்குள் கிடையாது. தலைமைத்துவத்தின் கருத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இதுவரையில் இணக்கம் தெரிவித்து தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று உத்தியோகபூர்வமாக இம்மாதம் 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஏற்று  ஜனாதிபதி வேட்பாளரையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்” – என்றார்.

பூமியை கடந்து செல்லவுள்ள மிகப்பெரிய விண்கல்

அடுத்த வாரம் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.  இந்த வேளை விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

1870அடி விட்டத்தைக் கொண்ட 2006கிபூகிபூ33 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் எதிர்வரும் 10ஆம் திகதி பூமியை மிகவும் அருகில் கடந்து செல்லவள்ளது. தற்போது சுமார் 7இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் குறித்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனால் எந்த ஆத்தும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் விண்கற்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விண்கற்கள் தொடர்பாக கண்டுபிடித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் நாசாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

பலாலி விமான நிலையத்திற்கு அனைத்துலக வான் போக்குவரத்து அனுமதி

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கான அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்தின் (IATA) அனுமதி கிடைத்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்தார்.  அத்துடன் பலாலி விமான நிலையத்திற்கான தனித்துவமான குறியீடாக JAF  என்பதையும் வழங்கியுள்ளது.

தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பலாலியிலிருந்து தென்னிந்தியாவிற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச  வட்டாரங்கள் தெரிவித்தன.