ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்பட்டது ம் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் -செஹான் சேமசிங்க

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  யார் என்று அறிவிக்கப்பட்டதுடன் கட்சி மூன்றாகப் பிளவுபடும். ஐக்கிய தேசிய கட்சியின்  உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைமைத்துவத்தால் ஒருபோதும் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் எதிரணிக்குள் கிடையாது. தலைமைத்துவத்தின் கருத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இதுவரையில் இணக்கம் தெரிவித்து தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று உத்தியோகபூர்வமாக இம்மாதம் 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஏற்று  ஜனாதிபதி வேட்பாளரையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்” – என்றார்.