Home Blog Page 2711

ஏப்பிரல் தாக்குதல் – 4 மில்லியன் டொலர்களை இழந்தது சிறீலங்கா விமான சேவை

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து சிறீலங்கா விமானசேவை நிறுவனம் 4.3 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 1,000 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், அதனால் ஒரு மாதத்தில் 11,000 அமெரிக்க டொலர்கள் நேரிடையாகவும், 48,500 டொலர்கள் நேரிடையற்றும் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் கடந்த ஆறு மாதங்களில் 4.3 மில்லியன் டொலர்களை விமான நிறுவனம் மட்டும் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டணத்தை குறைத்தும், விமானங்களுக்கான எரிபொருள் வரியைக் குறைத்தும் தனது இழந்த பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த முற்பட்டு வருகின்றது சிறீலங்கா அரசு.

இதனிடையே, அனைத்துலக மக்கள் சிறீலங்காவை தவிர்த்துவரும் அதேசமயம் புலம்பெயர் தமிழ் மக்கள் விடுமுறைக்கு அங்கு செல்வதுடன், தென்னிலங்கை பகுதிகளுக்கு அதிக பயணங்களை மேற்கொள்வதால் தென்னிலங்கை சிங்கள மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் – மஹிந்த

“நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல.

சிறுபான்மை இன மக்களும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும் என்று பலர் கருதுகின்றனர். எனினும், இந்த இரு தேர்தல்களிலும் மூவின மக்களின் ஆதரவுடன் நாம் வெல்லுவோம்” – என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர் என்று கருதப்படும் கோத்தாபாய ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

முஸ்லீம் மாணவிகளுக்கு மனஉளைச்சல் வன்மையாகக் கண்டிக்கிறோம் – உலமாக்கள்

பரீட்சை மண்டபங்களில் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அ.இ.ஜ.உ சபை வெளியிட்டுள்ள அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடளாவியரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. இப்பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாக்களுடன் பரீட்சை எழுத அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.எனினும் நாட்டின் சிலபாகங்களில் கல்வி அதிகாரிகள் பர்தா அணிந்து சென்ற மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இதனால் இம்மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளானமை பெரும் கவலையளிக்கிறது.

அதிகாரிகளின் இந்தப் பாரபட்சமான போக்கைநாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்தபோதும் அதற்கான அனுமதியை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை நிலைய அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மாணவிகள் மன உளைச்சளுக்குள்ளாகி பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அவசரமாக நிரந்தர தீர்வொன்றை மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்க இவர்கள் முன்வர வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

நல்லூர் ஆலயத்துக்கு தன்னியக்க சோதனைச் கருவிகள்

நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுப் படுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

“நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. அடியவர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது பக்தர்களுக்கு சற்று சஞ்சலமாக இருப்பதை அறியமுடிகின்றது. ஆனாலும், பாதுகாப்பு முக்கியம். அதனால் இந்த நடவடிக்கைளை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கில் 4 விசேட சோதனை இயந்திரங்கள்  விரைவில் அங்கு பொருத்தப்படவுள்ளன. அதாவது ஆலயத்துக்கு வரும் அடியவர்களை மறித்து தனியாக சோதனை செய்வதைத் தவிர்த்து, வாசலில் பொருத்தப்படும் இந்த இயந்திரத்தின் வாயிலாக உள்நுழையும்போது அது தன்னியக்க சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலமாக பக்தர்களின் சஞ்சலம் சற்று குறையும். இந்த வேலையை மாநகர சபை அல்லது ஆலய நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனாலும் , நாம் செய்கின்றோம் என்றார்.

ஆயுதம் தாக்கிய படையினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சிறிதரன்

இந்துக்களின் கலாசாரத்தை உதாசீனம் செய்யும் வகையில் நல்லூர் ஆலய வளாகத்தில் ஆயுதம் தாக்கிய இராணுவத்தினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கைவிடுத்தார்.

வடக்கில் குண்டு வெடிப்புக்களோ வன்முறைகளோ இடம்பெறாத நிலையில், யாழ்ப்பாண வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நல்லூர் திருவிழாவில் பக்தர்கள் இராணுவத்தினரால் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலயத்துக்குச் செல்பவர்களை உடலியல் ரீதியாகப் பரிசோதனை செய்து அனுப்பிய வரலாறுகள் இல்லை. திருவிழா ஆரம்பிக்கப்பட் நாளிலிருந்து கலாசாரத்தை அடையாளப்படுத்திச் செல்லும் தமிழர்கள், இராணுவத்தினரின் சோதனைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளாகின்றனர்.

ஆலயவாளாகம் என்பது காலணிகளுடன் செல்ல முடியாத புனித வலயமாகப் பேணப்படுகிறது. இந்தப் புனித வலயப்பகுதியில் இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களுடனும்.ஆயுதங்களுடனும் நின்று பக்தர்களை உடற்சோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு வழங்குமாறு ஆலய நிர்வாகமோ, யாழ் மாநகர சபையோ அல்லது நாமோ இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

ஈழத் தமிழர்களை அழித்தவர்கள் காங்கிரஸ் வைகோ சாடல்

ஈழத் தமிழர்களை படுகொலை செய்து ஒரு இனத்தையே அழித்த பாவிகளான காங்கிரஸ் காரருக்கு மன்னிப்பே கிடையாது என ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து ஒரு இனத்தையே அழித்த பாவிகள் இந்த காங்கிரஸ்காரர். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

தி.மு.க உறுப்பினர்களும், ஸ்டாலினுமே என்னை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தயவினால் நான் அங்கு செல்லவில்லை. செல்லவும் மாட்டேன் என அவர் கூறினார்.

 

இலங்கையில் நீதித் துறை சுயாதீனமாக செயற்படுகின்றது என்கிறார் சம்பந்தன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அண்மையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களின் ஒற்றுமைகாரணமாகவே இலங்கையில் இன்று ஜனநாயகம் நிலவுகின்றது எனவும் இலங்கையில் நீதி மன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்தார் இவ் கருத்து தமிழ் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் 11ம் திகதி மகிந்தராஜபக்ஸ அவர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஆகிறார் அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருடன் அக்கட்சியில் இணைகின்றனர் 19வது அரசியல் அமைப்பின் படி தேர்தலில் போட்டியிட்ட கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாறுகின்ற பொழுது மகிந்தராஜபக்ஸ வகித்த எதிர் கட்சி தலைவர் பதவியை இழக்கின்றார் அப்பொழுது பாராளுமன்றத்தில்
இரண்டாவது பெரும்பாண்மை கட்சியாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது என கூறும் சம்பந்தன் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எதிர்கட்சி தலைவர் பதவியை மீண்டும் பெறுவாரா?

மேலும் காணாமல் போனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக வழக்குகள் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல்கைதிகள் விடயம் போன்றவற்றில் சிறப்பு விசேட நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்களின் வழக்குகள் திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் விசேட நீதிமன்றமும் செயலிழந்துள்ளது. நீதித் துறை சுயாதீனமாக இயங்குகின்றது என மார்தட்டி கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இது தெரியாதா?

நீதித்துறை சிறப்பாக இருந்திருந்தால் அரசியல் அமைப்பின் மூன்றாம் அத்தியாயமான அடிப்படை உரிமைகள் குறித்த விதியின் பத்தாவது பிரிவில் உள்ள பிரஜைகள் அனைவரும் மதச் சுதந்திரம், சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பனவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும் என்கிறது. ஆனால் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை திட்டமிட்ட வகையில் புகுத்துவது போன்ற செயற்படுகளை பார்க்கின்றபோது நீதித் துறை சுயாதீனமாக இயங்குகின்றது என எந்த வகையில் கூறுவது

காணாமல் போனவர்கள் தொடர்பாக சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் மற்றும் பரிகாரம் தொடர்பான
அலுவலகம் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்தவொரு அழுத்தமும் கொடுக்காமல் ஜநா மனித உரிமை பேரவையில் மூன்று தடவைகள்(2021 வரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுடைய  கையொப்பத்தோடு காலநீடிப்பை பெற்றுகொடுத்து காணமல் போனவர்கள் விடயத்தை நீர்த்துபோக செய்துவிட்டார்கள்.

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சட்டமூலம் அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றும் போது வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கபட்டோர்களுக்கான எட்டு மாவட்டத்தை சேர்ந்த சங்கத்தினருடன் சட்டமூலம் தொடர்பான சாதக பாதகங்களையும் நேரடியாக பாதிக்பட்டவர்களின் விருப்பங்களையும் அறியாமல் விவாதம் நடைபெற்ற நாள் அன்று காலையில் இவ் சட்டமூலத்தில் ஒன்றும்
இல்லை என்று பேசிவிட்டு மாலையில் இவ் சட்டமூலத்திற்கு ஆதரவாக
வாக்களித்தார்கள். இது காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.

காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு,கிழக்கில் பல தடவைகள் காணமால் ஆக்கபட்டோர் அலுவலகம் (OMP) வேண்டாம் என்று கவனஈர்ப்பு போராட்டம் செய்தபோது கூட்டமைப்பினர் OMP வேண்டும் என்று அவர்களுடைய போராட்டத்தில் குழப்பம் விளைவித்தனர் கடந்த
மூன்றரை வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதி பிரதமருடன் சம்பந்தன் கூட்டமைப்பினர் தேனும் பாலுமாக இருந்தபோது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களுக்கு முன் உயிருடன் கையளித்தவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை இன்று வரை பெற்றுக்கொடுப்பதற்கு தயார் இல்லதா நிலையில் அரசாங்கத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படி இருக்கையில் நீதி துறை சுயாதீனமாக இயங்குகின்றது என்றும் காணமால் ஆக்கபட்டோர் விவகாரத்தில் தாம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் சம்பந்தர் கூறுவது 900 நாட்களாக வீதியில் இருக்கும் அவ் உறவுகளையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றப்பார்க்கின்றார் என்பது தெளிவாகிறது தமிழ் மக்கள் இனியும் இவர்களது பசப்பு வார்த்தைகளுக்கு ஏமார தயார் இல்லை என்பதை குறுகிய காலத்திற்குள் நிருபித்து காட்டுவார்கள் என புத்தஜீவிகளும் சமூக ஆர்வலர்களும்
கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா உளவு விமானத்தை சோதனை செய்த ரஷ்யா

ரஷ்ய அரசு அதிக வலுவுள்ள ஆளில்லா வேவு விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. “ஓகோட்னிக்” என்று பெயரிடப்பட்ட இந்த உளவு விமானம், புறப்பாடு, நடுவானில் பயணிக்கும் போது இறங்குவது போன்ற கோதனைகளை அடக்கிய வீடியோவை அந்நாடு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தை பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான சுகோய் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், 20 தொன் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும், 5ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவுக்கு அமெரிக்க ஆங்கில ஆசிரியர்கள்

அமெரிக்காவில் இருந்து 30 ஆங்கில ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் உடன்பாடு ஒன்றில் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ்ம் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசமும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் இடம்பெறும் ஆங்கில ஆசிரியர்கள் சிறீலங்காவில் உள்ள பின்தங்கிய இடங்களில் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக சிறீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் படைத்துறை மற்றும் பொருளாதாரத்துறை ஆகியவற்றில் தலையீடுகளை மேற்கொண்டுவரும் அமெரிக்கா தற்போது பொதுமக்களுக்கான சேவைத் துறையிலும் தனது தலையீடுகளை மேற்கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள்

செவ்வாய் கிரகத்தில் களிமண் துகள்கள் இருப்பதாக கியூரியாசிற்றி ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ஆம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து, உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக செவ்வாய்க்கிரகம் கருதப்படும் நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் கிரனைட் கற்கள் இருப்பதாக ரோவர் கண்டுபிடித்துள்ளது என கடந்த 2013ஆம் ஆண்டே நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பியுள்ள ரோவர் செவ்வாயில் சுமார் 13 மைல்கள் சுற்றித் திரிந்தும், 1,207 அடி உயரம் ஏறியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள கேல் கேட்டர் என்ற வறண்ட ஏரி மையத்தில் 16,404அடி உயரமுள்ள மலையில் ஆய்வுகளை நடத்தி வருகின்றது. அந்த பகுதியில் களிமண் துகள்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரோவர், மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு எடுத்துள்ளது.

இது குறித்து கூறிய கலிபோர்ணியா இன்ஸ்டிடியுட் ஒப் டெக்னோலஜியில் களிமண் ஆய்வு இணைத் தலைவரான வலேரிஃபாக்ஸ், ரோவரின் கமரா செவ்வாயின் பல பகுதிகளை  படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது. இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை தாங்கள் கண்டதாகவும்  தெரிவித்தார்.