ஏப்பிரல் தாக்குதல் – 4 மில்லியன் டொலர்களை இழந்தது சிறீலங்கா விமான சேவை

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து சிறீலங்கா விமானசேவை நிறுவனம் 4.3 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 1,000 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், அதனால் ஒரு மாதத்தில் 11,000 அமெரிக்க டொலர்கள் நேரிடையாகவும், 48,500 டொலர்கள் நேரிடையற்றும் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் கடந்த ஆறு மாதங்களில் 4.3 மில்லியன் டொலர்களை விமான நிறுவனம் மட்டும் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டணத்தை குறைத்தும், விமானங்களுக்கான எரிபொருள் வரியைக் குறைத்தும் தனது இழந்த பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த முற்பட்டு வருகின்றது சிறீலங்கா அரசு.

இதனிடையே, அனைத்துலக மக்கள் சிறீலங்காவை தவிர்த்துவரும் அதேசமயம் புலம்பெயர் தமிழ் மக்கள் விடுமுறைக்கு அங்கு செல்வதுடன், தென்னிலங்கை பகுதிகளுக்கு அதிக பயணங்களை மேற்கொள்வதால் தென்னிலங்கை சிங்கள மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.