வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட அமைச்சர்!

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று (26) பார்வையிட்டார்.

பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ ஆதார மருத்துவமனை வளாகத்தில் இதற்கான கூட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

அத்துடன் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களின் காணிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தனர்.

மேலும் இராணுவத்தின் படைத் தளங்கள் அமைந்துள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஒவ்வொரு இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

இதேவேளை, நீண்ட காலமாக இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வலி. வடக்கு மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.