Home Blog Page 2434

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில்2019 ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம்

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது.
கடந்த 5 வருட காலத்தில் அதிகப்படியான வருமானத்தினை ஈட்டிய வருடமாக2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பண்ணையின் நிகர இலாபமாக 5 மில்லியன் ரூபாவாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் விதை நெல் விற்பனை மூலமான வருமானமாக 4.2 மில்லியனும் விதை நடுகைப்பொருட்கள் மூலமாக 4.5 மில்லியன் ரூபாவும் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை கால்நடை உற்பத்தி வருமானமாக 2015 இல் இருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சராசரியாக 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வருமானமாக பெறப்பட்ட போதிலும் 2019 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் வருமான காட்சிப்படுத்தல்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது.

தானியங்கள் தூற்றல் மூலமான வருமானமாக 1.2 மில்லியன் வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கியமை உட்பட ஏனைய துறைசார் வருமானமாக 2.5 இலட்சமும் வருமான பெருக்கமாக உள்ளது.

இந் நிலையில் விற்பனைக்கு தயாராக உள்ள மரக்கன்றுகளாக பல வித கன்றுகள் .37 மில்லியன் பெறுமதியானவை கையிருப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் அதிகரித்த இலாபத்தினை அடைந்த முறை தொடுர்பாக விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலா பானுவிடம் கேட்டபோது கூடிய முகாமைத்துவம், கண்காணிப்புபண்ணை முகாமையாளரின் அர்ப்பணிப்பான சேவையுட்பட ஊழியர்களின் ஒன்றிணைந்த சேவையாற்றும் மனப்பான்மை அதிக லாபத்தினை பெற வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார்.
image வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில்2019 ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது

வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகளால் இன்று உடைக்கப்பட்டு சொரூபம் தூக்கிசெல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் மது போதையில் இது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கி நடவடிக்கை எடுக்க உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

30 வருடங்களின் பின்னர் நடைபெற்ற தேர்த் திருவிழா

காங்கேசன்துறை, மாம்பிராய் ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா கடந்த 30 வருடங்களின் பின்னர் கோலாகலமாக நடைபெற்றது.

1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 வருடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த கோயில் அமைந்துள்ள பகுதி காணப்பட்டது.

2018ஆம் ஆண்டு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இப்பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் போது மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அப்பகுதி மக்கள் தமது சொந்த முயற்சியில், புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களது நிதிப் பங்களிப்பில் புதுப்பொலிவுடன் கட்டி முடித்தனர்.

தேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி மக்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைக்க, அரோகரா கோஷத்துடன் தேர்த்திருவிழா இனிதே நடைபெற்றது.

இந்திய பயணத்தை முடித்து மகிந்த நாளை நாடு திரும்புகின்றார்

நான்கு நாட்கள் விஜயமாக இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தனது விஜயத்தை முடித்து நாளை நாடு திரும்புகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, கடந்த 7ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டிருந்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேநேரம், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் வாரணாசி, சாரநாத் உள்ளிட்ட இடங்களுகு்கு பயணித்திருந்தார்.

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பினார் மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பிக் கொடுத்து விட்டாரென சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

“13ஆவது அரசியல் திருத்தம் ஏற்கவே நடைமுறையில் உள்ளது. இதில் உண்மை என்னவென்றால், அந்தச் சட்டத்தை மாகாணசபை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாகக் கூறினால், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யாமல் திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதேவேளை எனது இந்த டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் மாதத்தில் சிறீலங்கா ஜனாதிபதியான கோத்தபாயா ராஜபக்ஸ சந்திப்பின் போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவிற்காக போடப்பட்ட அத்திவாரம். இதனூடாக மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் பிரதமர் மோடியுடனான சந்திப்பு, மிகவும் பயன் மிக்க சந்திப்பாக அமைந்தது. இரு நாடுகளுக்குமிடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன. நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

நிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை

நிக்கிரகுவாவில் உள்ள மழைக் காடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த பூர்வீகத் தலைவர்கள் ஆறு பேர் ஆயுததாரிகளால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 10 தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

போசாவாஸ் பயோஸ்பெயர் வனப்பகுதியினுள் நுளைந்த 80 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள வனப்பிரதேசங்களில் கனிம வளங்கள், கட்டிட வேலைகளுக்குரிய மர வகைகள் மற்றும் தங்கம் என்பன உள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து கனிமங்களை அகழ்வதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் சில நிறுவனங்கள் முயன்று வந்துள்ளன.

ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து, வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தலைவர்களே தற்போது கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர்.

அமேசான் மழைக் காடுகளுக்கு அடுத்த நிலையில் நிக்கரகுவா பகுதியில் உள்ள மழைக்காடுகளே பெரிய மழைக்காடுகளாகும்.

 

 

எரிவாயு குழாய் எதிர்ப்பு;பூர்வகுடிகளை கைது செய்தது கனடா

வடக்கு பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள தமது பூர்வீக நிலங்களில் இயற்கை வாயு குழாய்கள் அமைப்பதற்கு எதிராக ஜனநாயக வழிகளில் போராட்டம் மேற்கொண்டு வந்த மக்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை நாய்கள் சகிதம் கடந்த வியாழக்கிழமை (06) சென்ற கனேடிய காவல்துறையினர் 6 போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.

வெற்சுவேறன் பகுதி மக்களே 670 கி.மீ தூரத்திற்கு விளை நிலங்களின் ஊடாக 4.5 பில்லியன்  அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்படும் எரிவாயுக் குழாய்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் துப்பாக்கி வைத்துள்ளார்கள், அவர்களிடம் பொறிமுறை உள்ளது, அவர்கள் ஒரு போருக்கு தயாராகவே உள்ளனர் என இந்த கைது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெற்சுவேறன் பூர்வீகத் தலைவர்  கூறியுள்ளார்.

மாகாண அரசுக்கும் அந்த பிரதேச பூர்வீக மக்களுக்கும் இடையில் இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்தே கனேடிய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை தொடர்பில் தகவல்களை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டதுடன், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதமும் கனேடிய காவல்துறை 12 செயற்பாட்டாளர்களை கைது செய்திருந்தது.

 

காஷ்மீர் முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளது இந்தியா

சுயாட்சியை இரத்துச் செய்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் முன்னள் முதலமைச்சர்கள் இருவர் 6 மாத காலமாக விசாரணைகள் இன்றி தடுத்துவைக்க்பபட்ட பின்னர் தற்போது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒமார் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரே பி.எஸ்.ஏ எனப்படும் கடுமையான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் விசாரணைகள் இன்றி ஒருவரை இரண்டு வருடங்கள் வரையில் சிறையில் தடுத்து வைக்க முடியும். காஷ்மீரின் சுயாட்சியை இந்தியா இல்லாது செய்தது தொடர்பில் போராட்டங்களை மேற்கொள்பவர்களை அடக்குவதற்கே இந்தியா இந்த சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது.

இந்த சட்டம் மிகவும் மோசமானது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் மூலம் மேலும் பல அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

கிமாலயா பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரத்திற்கான 370 ஆவது சரத்தை இந்தியாவில் ஆட்சியில் உள்ள தேசிய இந்துத்துவக் கட்சி அரசு நீக்கியிருந்தது. அதற்கு முன்னரே கடுமையான சட்டங்களை அங்கு அது நடைமுறைப்படுத்தியிருந்தது.

அதன் மூலம் ஆயிரக் கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தனர். மனித உரிமை அமைப்புக்கள் அதனை கண்டித்திருந்தன. கடந்த 70 ஆண்டுகள் அங்கு ஆட்சி புரிந்த பாரூக் குடும்பத்தை சேர்ந்த பாரூக் அப்துல்லாவையும் இந்தியா கைது செய்திருந்தது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மூன்று தடவைகள் முதலமைச்சராக பதவி வகித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்துல்லா ஆறு மாதங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவின் இந்த ஜனநாய விரோத நடவடிக்கையினால் சுற்றுலாத்துறை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன், அரசியல் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் மக்களை அதிகம் பாதித்து வருவதாக அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தடவைகள் போரில் ஈடுபட்ட போதும் இரு நாடுகளும் பகுதியாகவே அதனை தக்கவைத்து வருகின்றன.

 

 

 

 

 

 

இலக்கு-இதழ்-64-பெப்ரவரி9-2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-64-பெப்ரவரி9-2020

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு!!வீடியோ இணைப்பு

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1086நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம்ஆண்டு இதேநாளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களிற்குமிடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்று மூன்றுவருடங்கள் கடக்கின்ற நிலையிலும், எமக்கு வழங்கிய உறுதிமொழிகள் வழங்கப்படவில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.