டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70 தொகுதிகளில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். பட்பர்கஞ்ச் தொகுதியில் மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.
டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலை போலவே இம்முறை மும்முனைப் போட்டி நிலவியது. ஆளும் ஆம் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்தது.
டெல்லியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இங்கு ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்றாலும் அக்கட்சி கடந்த தேர்தலை விட இம்முறை குறைந்த தொகுதிகளையே கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
உலகில் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடு, கலாச்சாரமும் தொன்மையானது என தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் அதற்கான சரியான காலத்தை வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு அவை மிகத் தொன்மை யானவையாக காணப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் தமிழையும், தமிழ் மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாடுகளையும் அழிக்கவும் அவற்றை திரிபுபடுத்தி மாற்றி அமைப்பதற்கும் ஒருசாரார் முயற்சி செய்து வருகின்றனர். இதேவேளை இவற்றை எதிர்த்து தமிழை வளர்க்கவும், தமிழரின் தொன்மையை உலகறியச் செய்வதற்கும் தற்போதைய இளைய சமுதாயம் முயற்சி செய்து வருகின்றது. இவர்களின் முயற்சியினால் தமிழ் மீண்டும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழரின் கலை, சிற்பம், ஓவியங்கள் இன்றும் உலகில் எல்லோராலும் போற்றப்படும் ஒன்றாகவும், அதிசயிக்கத்தக்க ஒன்றாகவும் விளங்குகின்றது. அத்துடன் தமிழனின் கட்டடக்கலையின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் அமைந்த ஓர் இடம் தான் இந்தியா, தமிழ்நாடு தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பெருங்கோவில் ஆகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்ட, இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்தியா, தமிழகம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருவுடையார் கோவில் குடமுழுக்கு கடந்த 05ஆம் திகதி பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. முன்னர் 1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இந்தக் கோவில் இந்தியாவிலேயே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் சிவத்தலம் என்பதுடன், இதன் கட்டடக்கலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1000 வருடங்களைக் கடந்தும் புதுப் பொலிவுடன் விளங்கும் இந்த கோவில், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது. இந்த தலம் திருவிசைப்பா பாடல் பெற்ற ஓர் சிவத்தலமாகும். இந்த கட்டடக் கலையை ஆராய்ச்சி செய்வதற்கும், பார்த்து ரசிப்பதற்குமாகவே உலக மக்கள் இங்கு வருவதுண்டு.
இந்தக் கோவிலின் அளவைப் பார்த்த மக்கள் இதை பெருங்கோவில் எனக் குறிப்பிட்டு வந்தமையால், அது தஞ்சைப் பெருங்கோவில் என தற்போதும் அழைக்கப்படுகின்றது.
குடமுழுக்கு நிகழ்வில் பெரும்பாலான அரசியல்வாதிகள் கலந்து கொள்வதை தவிர்த்தனர். பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாகவே இருந்தது. இம்முறை தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென இந்து சமய அறநெறித்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பில் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. 1980 மற்றும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலுமே மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. இலட்சகணக்கான பக்தர்கள் குடமுழுக்கு காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
காலை 7 மணி முதல் பக்தர்கள் குடமுழுக்கு காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோயில் உருவான வரலாறு
சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் கி.பி.943ஆம் ஆண்டு ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்த அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்) என்பவரே இந்தக் கோவிலைக் கட்டியவராவார். 1004இல் கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டது.
இவர் ஓர் சிவபக்தராவார். இவர் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் ராஜராஜ சோழன் மற்றும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றார். ஆனால் இப்போது ராஜராஜ சோழன் என்ற பெயரே எல்லோராலும் வழங்கப்பட்டு வருகின்றது. அவர் அரியணையில் ஆட்சி செய்த போதே இந்தப் பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிவபாத சேகரன் என்ற பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவிலைப் பார்த்ததும் ஆசைப்பட்ட அருண்மொழித்தேவன் தானும் ஓர் கோவிலைக் கட்ட வேண்டும் என எண்ணியே தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.
கோயில் வடிவமைப்பு
தமிழனின் கட்டடக்கலைக்கு ஓர் சிகரமாக விளங்கும் இக்கோவில் 750 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்ட கோட்டைச் சுவருக்குள் அமைந்துள்ளது. உள்ளே 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதியைக் கொண்ட இக்கோவிலின் நடுப்பகுதியில், கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக அமைந்துள்ளதுடன், மொத்தம், 13 நிலைகளயும் கொண்டுள்ளது.
இதன் உயரம், 216 அடி ஆகும். ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில், ‘பிரமிட்’ போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதுவே உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்று கூறப்படுகின்றது. இது தட்சிணமேரு என்று அழைக்கப்படுகின்றது. பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல்லினாலே கட்டப்பட்டுள்ளது. புராணங்களில் இது பொற்கிரி என்று போற்றப்பட்டுள்ளது. எட்டுத் திசைகளும் ஒவ்வொரு சந்நிதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் 216 அடி உயரமுடைய கோவிலுக்கு அத்திவாரம் வெறும் 5அடி மட்டுமேயாகும்.
மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதானது தமிழனின் கட்டடக்கலையின் நுட்பத்தையும், திறமையையும் எடுத்துக் கூறுகின்றது. இந்தக் கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள். இங்கு கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டு கல்வெட்டு அறிஞர் ஹல்ஸ், 1896 இல் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஒரு அங்குலம்கூட அளவில் பிழைக்காது ஒரேயளவாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.
இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுயில் நேர் மேலாக சென்றால் அது கோபுரத்தின் மையப் பகுதியாக இருக்கும். விமானத்தின் மேல் முனையில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட கல் காணப்படும். விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் அருண்மொழித் தேவன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை.
இந்தக் கோவிலில் உள்ள ஓர் சிறப்பம்சம் என்னவெனில், எல்லாக் கோயில்களிலும் கோபுரங்களே உயரமாகக் காணப்படும். ஆனால் இங்கு மூலவர் சந்நிதான கருவறையின் விமானத்தைப் பெரிதாகவும், கோபுரத்தை சிறிதாகவும் கட்டியுள்ளனர். இங்கு இருக்கும் சிவலிங்கம் 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகும்.
பிரமாண்ட கோவிலைப் போலவே 80 தொன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 14மீற்றர், நீளம் 7மீற்றர், அகலம் 3 மீற்றர் ஆகும்.
தமிழ் பெருமையை எடுத்துக் கூறும் அம்சங்கள்
கருவறை உயரம் 216 அடியாகும். உயிர்மெய் எழுத்துக்கள் 216இந்தக் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் 12 அடி உயரமுள்ளது. உயிர் எழுத்துக்கள் 12இது ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடியாகும். மெய் எழுத்துக்கள் 18 ஆகும். சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும் இந்த அளவுகள் தமிழ் மொழியை ஒத்திருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Inscriptions at Thanjavur Periya Kovil
இங்கு காணப்படும் 107 கல்வெட்டுக்களும் தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளதானது தமிழை எடுத்துக் கூறும் ஒரு சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டிலே கோவிலைக் கட்டியவர்கள், கோவில் கட்டுவதற்கு உதவி புரிந்தவர்கள் மற்றும் கோவில் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பேராக அருண்மொழிச் சோழனின் பெயர் ராஜராஜ சோழன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலை 1987இல் யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுச் சின்னம் என்று அறிவித்தது. இதையடுத்தே வெளிநாட்டவர்களும், மதவேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்தக் கோயில் பற்றிய மூட நம்பிக்கைகள்
இந்தக் கோயில் பற்றி பல மூடநம்பிக்கைகள் பரவி வருகின்றன. இந்தக் கோயிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் பதவிகளை இழப்பதுடன், அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரும் என்பது பலரின் நம்பிக்கையாகவும் உள்ளது. இதன் காரணமாகவே கோயில் குடமுழுக்கு நடைபெற்ற போது, பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை.
மற்றும் இக்கோயிலின் நிழல் நிலத்தில் விழாது என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் இந்தக் கோபுரத்தின் நிழல் கீழே விழும் என்பதே அறிவியல் கருத்தாகவும் இருக்கின்றது.
சவால்களும் சாதனையும்
இந்தக் கோவில் தமிழர்களின் பெருமையையும், தமிழனின் கட்டடக்கலை நுட்பங்களையும் கலை, சிற்பம், ஓவியம் என அனைத்தையும் போற்றும் அளவில் அமைந்துள்ளது என்பது நாம் பார்த்தவையே. ஆனால் தற்போது மொழித் திணிப்பு என்பது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது. இதற்கு ஒத்ததாகவே இக்கோவிலில் தமிழில் வழிபாடு செய்வதும், அர்ச்சனைகள் செய்யப்படுவதும் தடுக்கப்படுகின்றது. சமஸ்கருத மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது.
19ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலின் பெருமையை பெரிதாக எவரும் கருதவில்லை. அதன் பின்னரே இந்தக் கோவிலின் கட்டடக்கலை, தமிழின் தொன்மை, கலை, கலாசார தொன்மை பற்றி அறிவதற்கு பலரும் முன்வந்தனர். இதனையடுத்தே தஞ்சைப் பெருவுடையார் என்பது தஞ்சை பிரகதீஸ்வரர் என அழைக்கப்பட்டது. அருண்மொழித்தேவன் ராஜராஜசோழன் என அழைக்கப்பட்டான். தமிழ் மறைக்கப்பட்டு சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என கருதப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள தமிழ் ஆர்வலர்களும், சமூகசேவகர்களும் இந்தக் கோவில் தமிழரின் பண்பாட்டைக் கொண்டாடும் கோவில் எனவும், கலை, சிற்பங்கள் தொன்மையானது எனவும் பதிவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் கட்டடக்கலையைப் போற்றும் கோவிலான தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை.
அதன் முதலடியாக இம்முறை தமிழிலும் குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது தமிழினத்துக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இந்தியாவில் உள்ள சில கோவில்களில் தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. அதேபோல ஈழத்தில் இணுவிலில் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில், சுவிற்சலாந்து பெர்ன் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில் என்பவற்றில் தமிழில் வழிபாடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.
செவிலியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்கும். இதன் மூலம், நோயுற்றவர்களுடன் அதிகமான நேரத்தைச் செவிலியர்கள் செலவு செய்ய வேண்டியதில்லை, அவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பில் இருந்து காக்கலாம் என்ற நோக்கில் இந்தமுறை பல மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நங்கர்ஹார் மாகாணம் ஷெர்ஜாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஆப்கன் ராணுவ சீருடை அணிந்த ஒருவர் அங்கிருந்த ஆப்கன் – அமெரிக்க வீரர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.சார்ஜெண்ட் ஜேவியர் ஜாகுவார் குட்டரெஸ்(28) மற்றும் சார்ஜெட். அன்டோனியோ ரே ரோட்ரிக்ஸ் (28) ஆகியோரே கொல்லப்பட்டவர் கள் ஆவர்
இதுகுறித்து மாகாண ஆளுநர் ஷா முகமது மெயாகில் கூறும்போது, “இது இரு நாட்டு படை வீரர்களுக்கிடையே நிகழ்ந்தமோதல் சம்பவம் அல்ல. வெளியாட்கள் யாரேனும் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் அரிதான நிகழ்வாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். அப்போது அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
2002-2003ஆம் ஆண்டுகளில் சீனாவில் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஷி வலியுறுத்தினார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி உள்ளிட்ட பல வெளிநாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பின்னர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சுமூக தீர்வு காண்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமை தமிழர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வவுனியாவில் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு இளநீர் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் வெப்பத்தை தணிப்பதற்காக இளநீரை பருகுவோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சராசரியாக ஒரு செவ்இளநீர் 80 ரூபாய் முதல் நூறு ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், தட்டுப்பாடும் நிலவிவருகிறது.
அதிகமாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்தே வவுனியாவிற்கு இளநீர் கொண்டுவரப்பட்டு வியாபாரிகளிற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களது வருகை குறைவடைந்துள்ளமையால் இறளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வழமையாக தென்பகுதிகளில் இருந்து வாகனங்களில் இளநீர் கொண்டுவந்து எமக்கு வழங்கபடும்.தற்போது வியாபாரிகளது வருகை குறைவடைந்துள்ளமையால் இளநீரை பெற்றுகொள்வதில் அசௌகரியங்களை சந்திப்பதாகவும், இதனால் அதன் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் இளநீர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் வங்க தேசத்திலிருந்து சட்ட விராதமாக ஊடுருவி வடமாநிலங்களில் தங்கியுள்ளனர்.
பின்னர் போலி பாஸ்போர்ட் பெற்று அவர்கள் கொழும்பு விமானம் மூலம் இலங்கை செல்ல முயன்றனர். அவர்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இருவருக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடைபெற்று வருகிறது.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் எட்டு மாணவர்களுக்கு நேற்று முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 8 மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலமாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் குழு ஒன்றை நியமிப்பார் எனத் தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில்து தொடர்பாத் தெரிவிக்கப்பட்டுள்ளவை
வருமாறு:-
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குத் திடீர் கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்டார். திறந்த வெளியில் நடமாடிக்கொண்டிருந்த கைதிகளை முன்னறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலைமைகளை ஜனாதிபதி ஆராய்ந்தார்.
அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் அவர் பார்வையிட்டார். தண்டனை பெற்று வரும் தமது தந்தையை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி பிள்ளைகள் இருவர் காத்திருக்கும் அரசியல்
கைதி ஆனந்தசுதாகரனையும் அவர் பார்வையிட்டார். ஆனால் அவரைத் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.